வாழ்க்கையில் ஜெயிக்க மூளை சுறுசுறுப்பா இருக்கணும்! இதோ 6 ரகசிய வழிகள்!

தினசரி சில எளிய பழக்கங்களை மாற்றுவதன் மூலம் நினைவாற்றல், கவனம் மற்றும் அறிவாற்றலை எவ்வாறு மேம்படுத்தலாம் என்பதை அறியுங்கள்.
Boost memory power
Boost memory powerImage credit: AI Image
Updated on

நம் மூளையை கூர்மையாகவைத்திருந்தால் (boost memory power) சிறந்த வெற்றி பெறலாம். இப்படி வைக்க ஆறு வழிகள் உள்ளன. அவை என்னென்ன என்பதைக் காண்போம்.

1. காலத்தை நிர்ணயிக்க வேண்டாம்:

எப்போதும் உங்கள் மனது உங்கள் செயல்களைப் பற்றிய கவனத்துடன் இருக்க வேண்டும். நீங்கள் இயற்கையை வேடிக்கை பார்க்கும்போது கூட உங்களுக்கு தோன்றும் ஐடியாக்களைக் குறித்துக் கொள்ளுங்கள்‌. உங்கள் வேலையில் ஈடுபட தேவையான சக்தியை உடற்பயிற்சி மற்றும் மூச்சுப் பயிற்சிகள் மூலம் பெறலாம். 

2. கற்றலில் என்றும் ஆர்வத்தோடு இருங்கள்:

நீங்கள் சின்ன வயதில் நன்கு பியானோ கற்றுக் கொண்டிருக்கலாம்‌. நன்கு வரையக்கூடிய திறமை பெற்றிருக்கலாம்‌. உங்கள் பிள்ளைகளுக்கும் இதே மாதிரி பழக்கங்கள் இருந்தால், நீங்கள் திரும்பவும் வரைவது மற்றும் பழைய கலைகளை திரும்ப மேற்கொள்ளும் போது உங்க பிள்ளைகளுடன் கூடுதலான இணக்கம் ஏற்படும். நாம் ஏதாவது ஒரு வாத்தியத்தை கற்கும் போது நம் செயல்திறன் அதிகமாகும். இது நம்மை ஊக்கப்படுத்தி நல்ல ஞாபகசக்தியுடன் வைக்கும். 

3. நீங்கள் தொடர்ந்து வேலை செய்யும் போது இடையிடையே கிடைக்கும் நேரங்களில் மூச்சுப்பயிற்சி அல்லது ஒரு டீ தயாரித்து சாப்பிடுதல் என்று உங்கள் சக்தியை அதிகரித்துக் கொள்ளுங்கள்‌. இதனால் உங்கள் அறிவாற்றல் மேம்படுத்தப்படும்‌. மனதில் ஒரு சலிப்பு ஏற்படாது. வேலைகளுக்கிடையே நம் சக்தியை நாமே ஏற்றிக் கொள்ளலாம்.

4. உங்கள் தினசரி நடவடிக்கைகளுக்கும் மற்றும் தியானத்திற்கும் சரியான நேரத்தை ஒதுக்கவும். இவற்றை நீங்கள் தவிர்க்கக் கூடாது. அப்படி தவிர்த்தால் சோர்வு ஏற்பட்டு அதனால் பதட்டமும் ஏற்படும். நாம் செய்யும் பயிற்சிகள் நம் நினைவாற்றலையும், அறிவாற்றலையும் நன்கு மேம்படுத்துகின்றன. உங்களுக்கு அதிக நேரம் கிடைத்தால் ஓடும் பயிற்சியிலும் ஈடுபடலாம்‌. தினமும் நாம் 20 நிமிடங்களாவது தியானம் செய்வதால் நம் மனது அமைதியாகும்.

5. எழுதுங்கள்:

நீங்கள் தினமும் எழுதுவதை வழக்கமாகக் கொள்ளுங்கள். உங்கள் மனதில் தோன்றும் விஷயங்கள், முடிக்க வேண்டிய விஷயங்கள், உங்கள் யோசனைகள் இவற்றையெல்லாம் எழுதும் போது உங்கள் பாரம் குறைவதை உணர்வீர்கள்‌. இதன்மூலம் நீங்கள் செய்யவேண்டிய விஷயங்களில் அதிகம் கவனம் வைப்பீர்கள்‌.

இதையும் படியுங்கள்:
அபாயம்! அபாயம்! கற்றலை நிறுத்தினால் நீங்கள் 'அவுட்': இன்றைய இளைஞர்களுக்கான எச்சரிக்கை!
Boost memory power

6. மாறி மாறி மூக்கை மூடி மூச்சுப் பயிற்சி செய்வதில் ஈடுபடுங்கள். முதலில் மூச்சு விட்டு பிறகு, வலது பக்க மூக்கை  மூடி, வலது கட்டைவிரலால் திறக்கவும். உங்கள் இடது மூக்கு துவாரத்தை திறந்து மூட வலது மோதிர விரலை பயன்படுத்துங்கள்‌. இப்படி மூச்சுப் பயிற்சியில் ஈடுபட நீங்கள் அதிக சக்தி பெறுவீர்கள்.

logo
Kalki Online
kalkionline.com