சிறந்த மேலாளராக மாற இதோ 7 'மேஜிக்' சூத்திரங்கள்!

7 secret formula
7 secret formulaCredit: AI Image
Updated on

1. சவால்

மக்கள் தங்கள் சௌகரிய வட்டத்தை விட்டு (Comfort Zone) வெளியேறி, புதிதாக ஏதேனும் முயற்சிக்க ஊக்கம் கொடுங்கள். அவர்கள் தங்கள் வேலையில் எவ்வளவு அதிகமாக சவால்களை எதிர்கொள்கிறார்களோ, அந்த அளவிற்கு அவர்கள் தங்கள் வேலையில் அதிக ஈடுபாட்டுடன் நடந்துகொள்வார்கள்.

2. சுதந்திரம்

உங்கள் ஊழியர்கள் உங்களுடைய நெருக்கமான மேற்பார்வை இல்லாமல் வேலை செய்வதற்குப் போதிய சுதந்திரத்தை அவர்களுக்குக் கொடுங்கள். தங்கள் வேலையைத் தாங்களாகவே திட்டமிட்டு முடிப்பதற்கு எவ்வளவு சுதந்திரம் இருக்கிறதோ, அந்த அளவிற்கு அவர்கள் தங்களைப் பற்றி உயர்வாக உணர்வார்கள்.

3. கட்டுப்பாடு

உங்கள் ஊழியர்கள் ஈட்டித் தரும் விளைவுகளையும், அவர்களுடைய செயல்திறனையும் பரிசீலிப்பதற்கும், அவர்கள் வேலை செய்யும் விதம் குறித்துக் கலந்துரையாடுவதற்கும் குறிப்பிட்ட கால இடைவெளியில் அவர்களைச் சந்தித்துப் பேச நேரம் ஒதுக்குங்கள். அவர்கள் செயல்படும் விதம் குறித்த கருத்துக்களை நீங்கள் எந்த அளவிற்குப் பகிர்ந்து கொள்கிறீர்களோ, அந்த அளவிற்கு அவர்கள் தங்களைச் சிறப்பாக உணர்வதோடு, தங்கள் வேலையை மதிப்பு வாய்ந்ததாகவும் கருதுவார்கள்.

4. மதிப்பு

உங்கள் ஊழியர்கள் பேசும்போது உன்னிப்பாகக் காது கொடுத்துக் கேளுங்கள். அப்போதுதான் அவர்கள் தங்களை முக்கியமானவர்கள் என்று கருதுவார்கள். அவர்களுடைய யோசனைகளும் கருத்துகளும் கருத்தில் கொள்ளப்படுகின்றன என்ற உணர்வு அவர்களுக்கு ஒரு நெகிழ்ச்சியைத் தரும்.

5. பரிவு

ஊழியர்களை வெறும் இயந்திரமாகப் பார்க்காமல், தனிநபர்கள் என்று அவர்கள் மீது நீங்கள் காட்டும் அக்கறையை உணரும்போது அவர்கள் இன்னும் சிறப்பாக வேலை செய்வர். உங்களிடம் வேலை செய்பவர்களை உங்கள் நண்பரைப் போல நடத்துவதன் மூலம், அவர்கள் பணியிடத்தில் அதிக பாதுகாப்பு உணர்வைப் பெறுவர்.

6. வெற்றி அனுபவங்கள்

ஊழியர்களின் திறமைகளுக்கும் அனுபவத்திற்கும் ஏற்ற வேலைகளைக் கொடுத்து, அவற்றை வெற்றிகரமாக நிறைவேற்றச் செய்வது அவர்களுடைய சுயமதிப்பையும், சுயசிந்தனையையும் வளர்த்தெடுக்க உதவும். அவர்கள் ஒரு வேலையைச் செய்து முடிக்கும்போது, அந்தச் சாதனையைத் தனிப்பட்ட முறையிலும் மற்றவர்கள் முன்னிலையிலும் நீங்கள் அங்கீகரிக்க வேண்டும். அப்போதுதான் "தாங்கள் வெற்றியாளர்கள்" என்ற உணர்வை அவர்கள் பெறுவார்கள்.

இதையும் படியுங்கள்:
ஆயுதம் இல்லாமல் எதிரியை வீழ்த்தும் தந்திரம்… கிருஷ்ணர் சொல்லும் இந்த 8 சீக்ரெட்ஸ் போதும்!
7 secret formula

7. நேர்மறையான எதிர்பார்ப்புகள்

எல்லாவற்றையும் விட மிகப்பெரிய ஊக்குவிப்புக் காரணி இதுதான். தாங்கள் நல்லவர்கள் என்றும், தகுதியானவர்கள் என்றும், வேலையைச் சிறப்பாகச் செய்து முடிக்கும் திறன் கொண்டவர்கள் என்றும் தங்கள் மேலதிகாரி நம்புகிறார் என்பதை அவர்கள் உணரும்போது, அவர்களின் சுயமதிப்பும் செயல்திறனும் மேம்படுகிறது.

மக்கள் தங்களைப் பற்றி நேர்மையாகவும், நல்லவிதமாகவும் உணரும்படியான ஒரு சூழலை உருவாக்கித் தரும் நிறுவனங்களே வெற்றிகரமான நிறுவனங்கள்(7 secret formula) ஆகும். ஒருவருடைய நடத்தையில் அவரது "சுயக் கோட்பாடு" (Self-concept) வகிக்கும் பங்கினைப் புரிந்து கொள்வதுதான், மேலாண்மையும் ஊக்குவிப்பும் ஆற்றல்மிக்கதாக மாறுவதற்கான தொடக்கமாகும்.

உங்கள் ஊழியர்களிடம் அவர்கள் தகுதி வாய்ந்தவர்கள், முக்கியமானவர்கள் என்ற உணர்வை ஏற்படுத்துங்கள். அவர்கள் வேலையின் தரம் குறித்து நீங்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளீர்கள் என்பதைத் தொடர்ந்து வெளிப்படுத்துங்கள். நீங்கள் அவர்கள் மீது நம்பிக்கை வைக்கும்போது, அவர்களும் உங்கள் எதிர்பார்ப்பிற்கேற்பச் சிறப்பாகச் செயல்படுவார்கள்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com