
உணவு கலாசாரம்
சிங்கப்பூர் மக்கள் விதம் விதமான உணவுகளை தங்கள் வாழ்க்கை முறையில் இணைத்துக் கொண்டுள்ளனர். சிக்கன் முதல் பல்வேறு ஆசிய உணவுகளை இவர்கள் வாழ்வில் இணைக்கிறார்கள். நாட்டில் என்னென்ன உணவுகள் ட்ரெண்டிங்கில் இருக்கிறதோ அவை அனைத்தையும் தங்கள் வாழ்வில் இணைத்துக் கொள்கின்றனர். இது ஒரு சமூக நிகழ்வாக இருப்பதால் பலர் இதில் கலந்துகொண்டு தங்களுக்குள் இருக்கும் உறவையும் வளர்த்துக் கொள்கிறார்கள்.
பொழுது போக்கு நடவடிக்கைகள்
சிங்கப்பூர் மக்கள் தங்கள் குடும்பத்தினருடனும் நண்பர்களுடனும் மகிழ்ச்சியாகக் கழிக்க பல்வேறு நடவடிக்கைகளை முதன்மை படுத்துகின்றனர். அதில் ஒன்று பூங்காவுக்குச் செல்வது. ஜாகிங்கில் ஈடுபடுதல் மற்றும் பிக்னிக் செல்வதும் அடிக்கடி நடக்கும்.
வெக்கேஷன்
சிங்கப்பூரில் மக்கள் குடும்பத்தினருடன் அடிக்கடி வெளியில் செல்ல பல்வேறு ஹோட்டல்கள் மற்றும் இடங்கள் இருக்கின்றன. இதற்கு ஸ்டேகேஷன்ஸ் என்று பெயர். வார இறுதி நாட்களில் இங்கு வந்து தங்களது விடுமுறையைக் கழிப்பார்கள்.
உடற்பயிற்சிகள்
இவர்கள் யோகா, ஜும்பா, பேட்மிண்டன் உள்ளிட்டவைகளில் ஈடுபடுகிறார்கள். இதனால் இவர்கள் மனதும் உடலும் ஆரோக்கியமாக இருப்பதுடன் மன அழுத்தமும் குறைகிறது.
சமூகத்துடன் தொடர்பு
இவர்கள் புத்தாண்டு, தீபாவளி, கிறிஸ்துமஸ் என்று எந்த திருநாள் வந்தாலும் ஒன்றாகச் சேர்ந்து கொண்டாடு கிறார்கள். உறவினர் நண்பர்களை மட்டுமன்றி தெரியாதவர்கள் கலந்து கொண்டாலும் இன்முகத்தோடு வரவேற்பார்களாம்.
வேலை வாழ்க்கை பாலன்ஸ்
சிங்கப்பூர் மக்கள் தங்கள் தனிப்பட்ட வாழ்க்கையையும், தொழிலையும் சரியாக பார்த்துக் கொள்கின்றனர். இவர்கள் அதிக நேரம் ஆபீசில் செலவழிப்பதில்லை. அடிக்கடி டீ காபி ப்ரேக் எடுத்தாலும் சரியாக தங்களது வேலையை முடித்துவிட்டு வீட்டிற்குள் கிளம்பி விடுவார்களாம்.
வெற்றியை கொண்டாடுவார்கள்
இவர்கள் தங்கள் வெற்றி மற்றும் தங்களைச் சேர்ந்தவர்களின் வெற்றியைக் கொண்டாடுகிறார்கள். திருமணநாள் பிறந்த நாளையும் கொண்டாடத் தவறுவதில்லை.
ஹெல்தியான வாழ்க்கை
இவர்கள் பெரும்பாலும் சாப்பிட்டுப் பிறகு ஆரோக்கியமான மூலிகை சூப் குடிப்பது, இயற்கை உணவுகளை டயட்டில் சேர்த்துக்கொள்வது ஆகிய நடவடிக்கைகளை மேற்கொள்கிறார்கள்.