மகிழ்ச்சியாக இருக்க அறிவியல் கூறும் 7 வழிகள்!

to be happy
Motivational
Published on

கிழ்ச்சி என்பது ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமாக இருக்கிறது. நம் வாழ்வில் மகிழ்ச்சியைக் கொண்டுவர நாம் அனைவரும் நம் பழக்கங்களை மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கலாம். அந்த வகையில் மகிழ்ச்சியாக இருக்க அறிவியல் கூறும் 7 வழிகள் குறித்து இப்பதிவில் காண்போம்.

1. வயது ஏறும்போது நட்பைத் தழுவுங்கள்

நட்பு எல்லா வயதினருக்கும் பயனளிக்கக் கூடியதாக இருந்தாலும்  முதிர்ந்த வயதில் மகிழ்ச்சியின் முக்கிய ஆதாரமாக நட்பு மாறக்கூடும் என்பதால் புதிய நட்பை உருவாக்கிக்கொள்ள தயாராக இருப்பது ஒரு நல்ல யோசனை என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள். சுவாரசியமான நிகழ்வுகளை தொடர்ந்து எதிர்நோக்குவது நமக்கு அதிக நம்பிக்கையான கண்ணோட்டத்தை அளிக்கும் என்பதால் வயது ஏற ஏற நட்பை தழுவிக் கொள்ளுங்கள் . நட்பு நல்ல மன ஆரோக்கியத்தை பராமரிக்கும் முக்கியமான காரணி ஆகும்.

2. மகிழ்ச்சியை பகிர்தல்

நமது நண்பர்களின் நல்ல செய்தியை ஆர்வத்துடன் ஆதரிப்பதும், அதைப் பற்றி கேட்பதும், ஒரு நல்ல நண்பராக இருப்பதற்கான அடித்தளமாகும். உங்கள் நண்பரின் வெற்றியை உற்சாகமாக வரவேற்காமல் இருப்பது அல்லது பாராட்டாமல் இருப்பது அந்த உறவுகளை ஆபத்தில் ஆழ்த்தக்கூடும்.நண்பர்களின் அதிர்ஷ்டத்தை வரவேற்று அவர்களுடன் நல்ல உறவைப் பேணுவது மிகவும் முக்கியமானது. இதைத்தான் "பகிரப்பட்ட மகிழ்ச்சி" என்று கூறுகிறார்கள்.

இதையும் படியுங்கள்:
மன அழுத்தம் ஏற்படாமல் இருக்க மருத்துவர்கள் கூறும் ஆலோசனைகள்!
to be happy

3. தன்னார்வத் தொண்டு

நாள்பட்ட வலி மற்றும் மனச்சோர்வு போன்ற பல நிலைமைகளில் தன்னார்வத் தொண்டு உதவிகரமாக உள்ளது என்று அறிவியல் ஆய்வுகள் கண்டறிந்துள்ளன. விலங்குகளை பராமரிப்பது நமது ஆரோக்கியத்தை மேம்படுத்தும் என்றும், செடிகளை பராமரிப்பது  வயதானவர்களுக்கு நல்வாழ்வைத் தரும் என்றும் மற்ற ஆய்வுகள் காட்டுகின்றன, சில மருத்துவர்கள் இப்போது தன்னார்வத் தொண்டை "சமூக பரிந்துரை" யின் ஒரு பயனுள்ள வடிவமாகப் பார்க்கின்றனர். 

4. உங்கள் மூதாதையர்களுடன் இணையுங்கள்

கடந்த காலமானது நிகழ்காலத்தில் உங்களுக்கு உதவக்கூடிய மற்றொரு வழியாக உள்ளது. நமது மூதாதையர்களுடன் இணைவது, ஆழ்ந்த உளவியல் நன்மைகளை ஏற்படுத்தும் என்று பல ஆய்வுகள் தெரிவிக்கின்றன. முன்னோர்களின் போராட்டங்கள் மற்றும் சாதனைகளால் உங்கள் தற்போதைய வாழ்க்கை சாத்தியமாகியுள்ளது என்பதை அறிந்துகொள்வது உங்களுக்கு வாழ்க்கை பற்றிய கண்ணோட்டத்தையும் நன்றியுணர்வையும் அளிக்கும்.

5. ஒரு பட்டியல் தயார் செய்யுங்கள்

கிடைத்த அதிர்ஷ்டங்கள் மற்றும் உதவிகளை கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டும், இது ஒரு எளிய,  நிரூபணமான வழியாகும். உதாரணமாக முக்கியமான தேர்வில் தேர்ச்சி பெறுவது அல்லது ஒரு குழந்தையைப் பெறுவது போன்ற வாழ்க்கையை மாற்றும் நிகழ்வுகளையோ,  அல்லது பழைய நண்பரை சந்தித்தது அல்லது சூரிய அஸ்தமனத்தின் ஒளி போன்ற ஒரு அழகான தருணத்தை அனுபவிப்பது போன்ற நிகழ்வாகவும் இருக்கலாம்.

6. குதூகலம் தரும் செயல்பாடுகளைத் தேடுங்கள்

ஒரு அழகிய சூழலில் வாகனம் ஓட்டுவதை விட சிறந்தது எதுவுமில்லை. உங்கள் தலைமுடியை வருடும் சுகமான காற்று, ரேடியோவில் மனதை மயக்கும் இசை, உங்களுக்கு முன்னால் உள்ள சாலையின் சுதந்திரம். மகிழ்ச்சிகரமான செயல்பாடுகள் அல்லது நிகழ்வுகளை எதிர்பார்ப்பதன் மூலம் நம் மூளையை மிகவும் நம்பிக்கையுடன் இருக்கச் செய்யலாம்.

இதையும் படியுங்கள்:
குழந்தைகளின் சமூகத் திறன்களை மேம்படுத்தும் பெற்றோரின் உத்திகள்!
to be happy

7.எதுவும் செய்யாமல் இருப்பது

நீங்கள் எதிர்பார்த்துக்கொண்டிருந்த ஒரு பெரிய நிகழ்வு அல்லது விருந்தின்போது அந்த எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யும்விதமாக அவை இருக்கவில்லையென்றால் மகிழ்ச்சி குறைவதை உணர முடியும். கலிஃபோர்னியாவின் பெர்க்லி பல்கலைக்கழகத்தின் உளவியலாளர் ஐரிஸ் மாஸ், மகிழ்ச்சியை விரும்புவதும் தேடுவதும், தனிமை மற்றும் பிறரிடமிருந்து துண்டிக்கப்பட்ட உணர்வுகளை அதிகரிக்கும் என்பதை ஏற்கனவே காட்டியுள்ளார்.

உண்மையில் வாழ்க்கை என்பது ஏற்ற தாழ்வுகள் நிறைந்தது என்பதை ஏற்றுக்கொள்வதையும், ஒரு திடமான அணுகுமுறையை பின்பற்றுவதையும் வழக்கமாக்கிக் கொண்டால் மகிழ்ச்சி எப்போதும் நம் வசமே.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com