

நீங்கள் யாருக்காவது முக்கியத்துவம் கொடுக்கும் போது அவர்கள் உங்களை மதிக்காமல் இருந்திருக்கிறார்களா? நீங்கள் அவர்களுக்காக உங்கள் நேரம், சக்தியை செலவழித்திருப்பீர்கள். அவர்கள் கூடவே இருந்திருப்பீர்கள். ஆனால், அவர்கள் உங்களுக்கு தரவேண்டிய மரியாதையை தராமல் நடத்தியிருக்கிறார்களா? இது ஏன் நடக்கிறது தெரியுமா? நாம் எப்போது ஒருவருக்கு அதிகமாக கிடைக்கிறோமோ? அப்போது அவர்கள் நம்மை சுலபமாக எடுத்துக் கொள்கிறார்கள். ஆனால், இந்த ஆட்டத்தையே தலைக்கீழாக மாற்ற வழி இருக்கிறது. இந்த பதிவில் அந்த 9 அணுகுமுறையை பற்றிப் பார்ப்போம்.
1. சில சமயங்களில் நீங்கள் என்ன பேசுகிறீர்கள் என்பதை விட என்ன பேசாமல் இருக்கிறீர்கள் என்பது தான் அடுத்தவர்களை ஆழமாக பாதிக்கும். நீங்கள் அவர்கள் பின்னாடி செல்வதை நிறுத்தி, எல்லாவற்றிற்கும் விளக்கம் சொல்வதை நிறுத்தி, யோசிக்காமல் எல்லாவற்றிற்கும் பதில் சொல்வதை நிறுத்தினாலே போதும். புத்திசாலித்தனமாக நீங்கள் பயன்படுத்தும் மௌனம் உங்கள் சுயமரியாதையை மீட்டுத்தரும் ஆயுதம்.
2. மற்றவர்கள் நம்மை பார்க்கவில்லை, மதிக்கவில்லை என்று எண்ணி நம்மை நாம் பார்த்துக்கொள்ள மறந்துவிடுகிறோம். காலையில் எழுந்ததும் உங்கள் மனதிற்கு, உடலுக்கு, வேலைக்கு முக்கியத்துவம் கொடுங்கள். இது உங்களுக்குள் ஒரு மாற்றத்தை உண்டாக்கும். நீங்கள் மகிழ்ச்சியாக இருக்க மற்றவர்கள் தேவையில்லை. எப்போது நம்மை மற்றவர்கள் தேர்ந்தெடுக்க தேவையில்லை என்று நினாக்கிறோமோ? அப்போதே அவர்களால் நாம் தேர்ந்தெடுக்கப்படுகிறோம்.
3. சிலருக்கு நாம் இருக்கும் போது நம் அருமை புரியாது. நாம் இல்லாத போதே அந்த வலியை உணருவார்கள். கத்தாமல், கோபப்படாமல் அமைதியாக விலகியிருக்க வேண்டும். மரியாதை இல்லாத இடத்தில் நான் இருக்க மாட்டேன் என்று நீங்கள் தரும் மெசேஜ். சரியான நேரத்தில் சரியான விலகல் உங்களை இழந்துவிட்டோமோ? என்று அவர்களை யோசிக்க வைக்கும்.
4. உங்களை கட்டுப்படுத்துவதாக நினைப்பவர்கள் சொல்வதற்கு எந்த ரியாக்ஷனும் தராதீர்கள். அமைதியாக இருங்கள். இது செய்வதற்கு கஷ்டமான அணுகுமுறையாக இருந்தாலும் பவர் புல்லானது. உணர்ச்சிகளை காட்டாமல் இருப்பது உங்கள் மனஉறுதியை காட்டும். உங்கள் அமைதி அவர்களை தொந்தரவு செய்யும்.
5. தனக்கு தானே மரியாதை கொடுத்துக் கொண்டு அதை மற்றவர்களிடம் நிரூபிக்க தேவையில்லை என்று நினைப்பவர்களை விட கவர்ச்சியானவர்கள் யாரும் கிடையாது. நீங்கள் உங்களை உண்மையாகவே மதிக்க ஆரம்பிக்கும் போது, உங்கள் தோற்றம், உங்களை சுற்றியிருக்கும் இடம், உங்கள் தேர்வுகள் இவை அனைத்திலும் அக்கறை காட்டும் போது தன்னம்பிக்கை தானாகவே வெளிப்படும். உங்களை மதிக்காதவர்களும் அதை கவனிக்க தொடங்குவார்கள்.
6. இனிமேல் இதை நான் ஏற்றுக்கொள்ள மாட்டேன் என்ற எல்லையை வரையறுக்க வேண்டும். அப்போது ஒரு மாற்றம் நடக்கும். எல்லைகள் போடுவது மற்றவர்களை தள்ளி வைக்க இல்லை. உங்களின் மன அமைதியை பாதுகாத்து போடப்படும் கோடு ஆகும்.
7. தாராளமாக இருப்பது நல்லது தான். ஆனால், திருப்பி எதுவும் செய்யாமல் இருப்பவரிடமும், மதிக்காதவரிடமும் தாராளமாக இருப்பது நம்மை சோர்வடைய செய்துவிடும். தேவைக்கு மட்டும் உங்களிடம் வருபவர்களிடம் உங்கள் நேரத்தையும், சக்தியையும் வீணடிக்காதீர்கள். யார் உண்மையாக மதிக்கிறார்களோ அவர்களுக்கு மட்டும் உங்கள் சிறந்ததை கொடுங்கள்.
8. ஒருவர் மீது நாம் வைத்திருந்த அக்கறையை திடீரென்று நிறுத்தும் போது அது அவர்களை பாதிக்கும். உங்களை காயப்படுத்தியவர்கள் செய்யும் முயற்சிக்கு இனிமேல் ரியாக்ட் செய்யக்கூடாது என்று நீங்கள் எடுக்கும் முடிவு. உங்கள் அலட்சியம் இந்த இடத்தில் உங்கள் விடுதலை.
9. தான் யார் என்று தெரிந்து அதில் உறுதியாக இருக்கும் ஒருத்தரை காட்டிலும் ஈர்க்கக்கூடியவர்கள் யாருமில்லை. மற்றவர்கள் உங்களை பாராட்ட வேண்டும் என்று நினைக்காமல் உங்கள் மதிப்பை உணர்ந்து உறுதியாக இருக்கும் போது உணர்ச்சி ரீதியாக சுதந்திரம் அடைந்துவிடுவீர்கள். இதனால் உங்களை அலட்சியப்படுதியவர்களும் உங்களை கவனிக்க ஆரம்பிப்பார்கள்.