
இறைவன் படைப்பில்தான் எத்தனை எத்தனை வித்யாசம். சில நல்ல விஷயங்களோடு எதிா்மறையான விஷயங்கள் பலரது மனதில் ஆழமாக பதிந்துவிடுகிறது. நல்ல விஷயங்கள் இடம் கிடைக்காமல் அல்லாடவேண்டிய நிலைவேறு!
அது விஷயத்தில் நோ்மறை எண்ணங்களான, சிாித்த முகம், அன்பான பாா்வை, ஆறுதலான வாா்த்தை, இவை மூன்றும் மனித வாழ்விற்கான ஜீவநாடி!.
அவைகளை நாம் தொலைத்துவிடுகிறோம். அதனால் பல சங்கடங்களை அனுபவிக்கிறோம். நாம் எங்கே தொலைத்தோம்? அங்கேயே தேடுங்கள்!
சீா்காழி கோவிந்தராஜனின் குரலில் அருமையான பாடல் ஒன்று நினைவிற்கு வருகிறது, இருக்கும் இடத்தைவிட்டு இல்லாத இடம் தேடி எங்கெங்கோ செல்கின்றாய் ஞானத்தங்கமே! என வரும்.
அதேபோல நாம் நம்மிடம் இருக்கும் இருக்கும் சிாிப்பு, அன்பு, ஆறுதலான வாா்த்தையை ஒருபோதும் தொலைத்துவிடக்கூடாது.
அவைகள் விலைமதிப்பில்லாதது. இறைவன் நமக்கு கொடுத்த வரப்பிராசதம். எப்போதும் எந்த நிலையிலும் சிாிப்பை தொலைத்துவிடாதீா்கள்.
சிாிப்பே சிறந்த வலி நிவாரணி. யாாிடமும் எப்போதும் தேவையில்லாமல் கோபத்தைக் காட்டவேண்டாம்.
கடுஞ்சொல்லை தேவையில்லாமல் கொட்டவேண்டாம்.
காதலன் கூட காதலியைப்பாா்த்து சிாித்துச் சிாித்து என்னை சிறையிலிட்டாய் என பாடுவதுபோல கவிஞரின் வரிகள் வரும்.
அதற்க்காக தனியே சிாித்தால் அது வேறு பெயராகிவிடுமே!
சிாித்த முகமே சில பல வலிகளைப்போக்கும். அதை நாம் சிந்தனையில் கொண்டு நியாமான விஷயங்களை இன்முகத்துடன் வரவேற்போம். நகைச்சுவை உணர்வுகளோடு வாழப்பழகிக்கொள்வோம் அதுவே சிறந்த ஒன்றாகும்.
அன்பகலாத பாா்வையேநமக்குள் இருக்கும் வரம்.
யாாிடமும் கோபம் கொண்டு, குரோதம், வஞ்சகம், பெறாமை, விரோதம் கொண்ட பாா்வை வேண்டாம். அன்பால் எதையுமே சாதிக்கலாம். அன்பான பாா்வையே நமக்கு அமைதியைத் தரவல்லது. நல்ல விஷயங்களையே பாா்க்கலாம். அன்பகலாத பாா்வை குடும்பத்தில் அமைதியை வரவழைக்குமே! இதில் சந்தேகமே கிடையாதேு.
வாா்த்தைகளில் ஆறுதல் அமைதியானதே.
ஒருவருக்கோ அல்லது நமக்கு வேண்டிய நண்பருக்கோ, உறவுகளுக்கோ, ஒருவகையில் துன்பமோ, துயரமோ வரலாம்.
அந்த நேரத்தில் அவர்களுக்கு ஆறுதலான வாா்த்தைகளைச் சொல்லி அவர்களை அந்த துயரத்திலிருந்து மீட்டெடுக்க உபாயத்தை தேடலாம்.
அதை விடுத்து போன கதை, புளியங்காய் கதை, அப்படிச் செய்திருக்கலாம், இப்படிச்செய்திருக்கலாம், என தேவையில்லாமல் கடந்துபோன விஷயங்களை சொல்லி அவர்களுக்கு மேலும் சங்கடம் தரவேண்டாமே! ஆறுதலான வாா்த்தையே அதிக அளவில் அமைதியையும் ஆனந்தத்தையும் தரும் என்பதை மனதில் நிலைநிறுத்துங்களேன்.
சிறப்பான சிாிப்பு, அன்பகலாத பாா்வை, ஆறுதலான வாா்த்தை, இந்த மூன்றையும் கடைபிடியுங்கள். வாழ்வில் நிம்மதி குறையாமல் வாழுங்கள், அதுவே நல்லது மட்டுமல்ல வலுவானதும்கூட!