
இறைவன் தந்த வாழ்க்கையில் பலவித இன்பமும் துன்பமும் கூடவே வருகிறது. இன்னல் வராமல் வாழ்க்கை இல்லை. இன்பம் இல்லாமல் வாழ்வதும் இல்லை. நாம், நமது நோ்மறை சிந்தனைகளோடு ஆன்மிக நெறிமுறைகளோடு வாழ்வதே சிறப்பாகும்.
பொதுவாகவே பிற உயிா்களுக்கு தீங்கு செய்யாதது, அடுத்துக்கெடுக்காத நிலைபாடு, வஞ்சகம், துரோகம் இவைகளை கடைபிடிக்காமல் இருப்பதே நல்லது. பொியவர்களை மதிக்கக்கற்றுக் கொள்ளவேண்டும். வயோதிக காலத்தில் அவர்களை பாரமாக நினைக்கவேண்டாம். நமது பிள்ளைகளுக்கு உாிய சுதந்திரம் கொடுக்கலாம். அதே நேரம் அவர்களது நியாயமில்லாத தேவைகளை நிறைவேற்ற வேண்டாம்.
அவர்களது வயதுக்கு மீறிய செயல்பாடுகளை நாம் ஒருபோதும் ஆதரிக்கக்கூடாது. அப்படி நாம் அதர்ம காாியங்களுக்கு துணை போனால் நாம் திருதராஷ்டிரர்கள் போலவே பாா்க்கப்படுவோம்.
அநீதிக்கு துணை போகவேண்டாம். அது நமக்கே சில சமயம் எதிாியாகி நமது தர்ம சிந்தனைகளுக்கு குந்தகம் விளைவித்து விடக்கூடுமே! தர்மம் தலைகாத்தாலும், வஞ்சத்தில் வீழ்ந்துவிட்டால், கா்ணன் போலவே ஆகிவிட நோிடும். செஞ்சோற்றுக்கடன் தீா்க்க சேராத இடம் தேடவேண்டாம்.
அதிக படிப்பு, திறமை, சொல் பேச்சுதவறாத, மாறாத நிலை, தைாியம், பிறர் சொல்லும் நல்ல விஷயங்களைக் கேட்டு, நீதி தவறாமல் வாழ்ந்தாலே எதிலும் வெற்றியே!
நமக்குள், உறவுக்குள், சொந்த பந்தங்களுக்குள், எத்தகைய பகை இருந்தாலும் அந்த வீட்டிலுள்ள பெண்களை கேவலப்படுத்தி பேசாதீா்கள். நம்மால் இயலாத காாியம் வரும்போது பழியை குடும்பப் பெண்கள் மீது தள்ளிவிட்டு அவர்களை பலிகடா ஆக்க வேண்டாம். பாஞ்சாலியை அவமானப்படுத்தியதுபோல, நமது செயல்பாடுகள் அறவே இருக்கக்கூடாது.
அதர்மத்திற்கு துணை போகவேண்டாம். கொடுத்த வாக்கினை மீற வேண்டாம். தர்மம் மீறாமல் இருக்க, அதர்மம் வெற்றிபெறாமல் இருக்க, சந்தர்ப்ப சூழல் பாா்த்து, சாதுா்யம் கடைபிடியுங்கள்.
அந்த விஷயத்தில் கிருஷ்ணபரமாத்மாவின் நியதிகளை கடைபிடியங்கள். ஒரு தாய் வயிற்றில் பிறந்த சகோதரர்களுக்குள் ஒற்றுமை குறைவு வேண்டாமே கருத்து வேறுபாடுகளைத் தவிா்ப்பது நல்லதுதானே சகோதர பாசம் நிலையானது. அது விஷயத்தில் ராமபிரான் தம்பி இலக்குவன் போல வாழ்வதே சிறப்பு.
பெண்புத்தி பின்புத்தி என்பதுபோல நிதானம் கடைபிடியுங்கள். அவசரம் அவசியம் கருதி ஆத்திரம் கொள்ளவேண்டாம். அது விஷயத்தில் மாரீச மான் வலையில் விழவேண்டாமே! இப்படிப்பட்ட விக்ஷயத்தில் சீதாதேவிபோல அவசரம் தவிா்கலாமல்லவா!
கூட இருந்தே குழிபறிக்கும் செயலைத் தவிா்ப்பதே நல்லது. எதிா்தரப்பினர் நமக்கு தூரோகமே செய்திருந்தாலும், அவர்களோடு உறவாடி கெடுப்பது வேண்டாம். அது விஷயத்தில் சகுனியின் குணங்கள் நமக்கு தேவையில்லாததே!
ஒவ்வொரு நாளும் நமக்கானதே, நல்ல சிந்தனையுடன், அன்பே பிரதானமாக வாழ்நாளை தொடங்குங்கள். இறைவன் துணை நமக்கு எப்போதும் இருக்கும். நம்பிக்கையே வாழ்க்கை, நம்பினாா் கெடுவதில்லை, இது நான்கு மறை தீா்ப்பாகுமே!