
இந்த உலகம் தங்களுக்குத் தேவையானதை தைரியமாக கேட்பவரை, கேள்வி கேட்பவரையும் பேசத் தெரிந்தவரையும்தான் மதிக்கும். நீங்கள் கேட்கும் எல்லாமே உங்களுக்கு கிடைக்க போவதில்லை என்றாலும் ஒன்றை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். நீங்கள் கேட்காத எதுவுமே உங்களுக்கு கிடைக்கப் போவதில்லை.
ஆங்கில அறிஞன் சொன்னதுபோல் உங்களுக்குத் தேவையானவற்றை நீங்கள் கேட்கத் தொடங்கிவிட்டாலே உங்கள் வாழ்க்கையை உங்கள் கைகளுக்குள் கொண்டு வந்து விட்டீர்கள் என்றும் அதை மிகச்சரியான திசையில் செலுத்திக் கொண்டிருக்கிறீர்கள் என்றும் அர்த்தம்" என்றார்.
நீங்கள் விரும்பியதை அடைவதற்கு பல வித்தைகள் இருக்கின்றன. நீங்கள் அதற்காகப் பல குறுக்கு வழிகளை நாடலாம். மிரட்டலாம். அதிகாரப்பூர்வமாக பயன்படுத்தலாம். உணர்வுபூர்வமாக மிரட்டலாம். இன்னும் மோசமான வழிகள் பல உள்ளன. ஆனால் இவை அனைத்தையும் விட மிகச்சிறந்த நேர்மையான வழி உங்களுக்குத் தேவையானவற்றை சரியான நபரிடம் கேட்பது. நீங்கள் விரும்பியவற்றைக் கேட்பதற்கான பல நேர் வழிகள் உள்ளன.
முதலில் ஒன்றை உணர்ந்துகொள்ளுங்கள். எதையும் கேட்பதில் தவறேதும் இல்லை. உங்களுக்குத் தேவையானதை நீங்கள் விரும்புவதைக் கேட்க உங்களுக்கு உரிமை உண்டு. ஆனால் கேட்கும் உங்களுக்கு உண்மையிலேவே தேவைப்படும் ஒன்றைக் கேளுங்கள். உண்மையான தேவைக்கு எப்பவுமே ஒரு நல்ல மரியாதை உண்டு.
தன்னம்பிக்கையுடன் கேளுங்கள்.நீங்கள் எப்படி மற்றவர்களை அணுகுகிறீர்கள் என்பது மிக முக்கியம். கேட்கும்போதே நிச்சயம் நாம் கேட்பது நமக்குக் கிடைக்கும் என்ற மனநிலையில் கேளுங்கள். நீங்கள் கேட்பது உங்களுக்குக் கிடைக்க வேண்டும் என்பதுபோல கேளுங்கள்.
நீங்கள் கேட்கும்போது அதில் நகைச்சுவையும் கேட்கும் விதத்தில் புதுமையும் இருக்கவேண்டும். இதயத்தின் அடியிலிருந்து கேளுங்கள். உங்கள் உயிரையும் உணர்வையும் கலந்து கேளுங்கள். தைரியமாகக் கேளுங்கள். எதிராளியின் கண்களை நேருக்கு நேர் பார்த்துக் கேளுங்கள். இப்படிக் கேட்பது உங்களுடைய நேர்மையையும் உண்மையையும் தெரிவிக்கும்.
பயந்து நடுங்கிக் கொண்டே கிடைக்குமோ கிடைக்காதோ என்ற அச்சத்துடன் கேட்கப்படும் எதையும் நொடியில் மறுத்துவிடலாம் . ஆனால் நெஞ்சை நிமிர்த்தி தைரியத்துடனும் தன்னம்பிக்கையுடனும் கேட்கப்படும் தேவையை மறுப்பது மிகவும் கடினம் என்பது ஒப்புக் கொள்ளப்பட்ட உளவியல் தந்திரம்.
எப்படி கேட்டாலும் எப்படி முயற்சித்தாலும் உங்களுக்கு "இல்லை என்ற பதிலே வந்தால் உங்களால் நிச்சயமாக நீங்கள் விரும்பியதை அவரிடம் இருந்து பெறமுடியாது என்ற நிலை வந்தால் அதை கௌரவமாக ஏற்றுக் கொள்ளுங்கள்.
அதற்கு மாறாக அவரை அடிக்கடி தொல்லைப் படுத்துவதும் கண்ணிய குறைவாக நடந்து கொள்வதுமாக இருந்தால் எதிர்காலத்தில் கிடைக்கக் கூடியதும் கிடைக்காமல் போவதற்கு நீங்களே காரணமாகிவிடுவீர்கள்.
மிகப்பெரிய விஷயங்கள் அனைத்துமே நேரிடியாக தைரியமாகக் கேட்பதன் மூலமே சாதிக்கப்பட்டுள்ளதால் கேட்பதற்கு தயங்காதீர்கள். கேட்பது கிடைப்பதில் உள்ள ரகசியம் கேட்கும் எல்லா விஷயங்களையும் ஒரே நேரத்தில் கேட்காதீர்கள்.