தோல்வி அனுபவங்களை ஏற்று மீண்டும் மீண்டும் வெற்றி நோக்கி முயற்சிக்கவேண்டும்!

Try to win!
Motivational articles!
Published on

டவுள் எல்லோருக்கும் எல்லா திறமையையும் கொடுத்து விடுவதில்லை. அதே சமயம் ஒரு திறனும் இல்லாதவராகவும் யாரையும் படைத்ததில்லை. உள்ளிருக்கும் திறமையை வெளிக்கொணர ஒரு தூண்டுகோலாக வெளி ஒருவர் இருப்பாரானால் முன்னேறலாம். அல்லது நம் உள் மனமாகிய உந்துதலால் பெரும் முயற்சியுடன் முன்னேறிவிடலாம் என்ற தன்னம்பிக்கையுடன் போராட வேண்டும்.

வெற்றி நிச்சயம். அதற்கு முதலில் நம் வாழ்க்கை, பணி, வருமானம் இவற்றில் முன்னேற்றம் காண அத்தியாவசிமான திறன்கள் எவை எவை, அவற்றுள் நம்மால் முயன்று மேலும் திறனையும், அறிவையும், தனித்தன்மையையும் வளர்த்து கொள்ள சாத்தியமாய் உள்ளவை எவை என்று அலசி அத்துறையில் கூடுதல் கவனம் செலுத்தி, நேரம், பொருள், செலவழித்து, படித்தும், கற்றும், அறிந்தும், முன்னேற்றம் அடையும் எல்லா முயற்சிகளையும் எடுக்கவேண்டும்.

முடியும் என்பதை என்னால் முடியும் என்று சொல்லும் துணிவு வேண்டும். முடியாததை தலைமேல் போட்டுக்கொண்டு திண்டாடினால் அது தன்னம்பிக்கையை குலைக்கும். முதலில் நம் உடல் நலத்தை பேணி பாதுகாத்து நோய் நொடி இல்லாத தேகம் இருந்தாலே போதும் தன்னம்பிக்கை தானாக துளிர்விடும்.

தகுதிக்கு மீறிய ஆசை, திறமைக்கு மீறிய எதிர்பார்ப்பு இருந்தால் நாளாவட்டத்தில் தோல்வியை சந்தித்து தன்னம்பிக்கையை கெடுக்கும்.

பொதுவான தன்னம்பிக்கை: வாழ்க்கையின் பிரச்னைகளை எதிர்கொள்வதற்கு நேர்மறையாக சிந்திப்பதையும், செயல்களையும் செய்து பழகவேண்டும். மக்களை நட்பு ரீதியாக பழகி, இன்ப, துன்ப வெற்றி, தோல்வி அனுபவங்களை ஏற்றுக்கொண்டு மீண்டும் மீண்டும் வெற்றி நோக்கி முயற்சிக்கவேண்டும்.

இதையும் படியுங்கள்:
மன அழுத்தத்திலிருந்து உங்களைக் காக்கும் 7 விஷயங்கள்!
Try to win!

மனதின் அனுபவங்கள் சதா மாறிக்கொண்டே இருப்பது என்பதை புரிந்து கொண்டு மன அனுபவங்களில் நிரந்தர தன்மையை எதிர்பார்க்காமல் இருப்பது, வாழ்க்கையில் எதிர்காலத்தைப் பற்றிய சிறப்பான நம்பிக்கையை வளர்த்துக் கொள்வது, வளர்ச்சி நோக்கத்துடன் செய்யும் ஒவ்வொரு செயலையும் நம்பிக்கையுடனும், உறுதியுடனும் செயல்படுத்துவது, எல்லோரிடமும் முடிந்த வரை அன்பாக பழகுவது, லட்சியங்களை வகுத்துக் கொண்டு அன்றாட வாழ்க்கையை வழி நடத்துவது ஆகியவை பொதுவான தன்னம்பிக்கை ஆகும்.

செயல் சார்ந்த தன்னம்பிக்கை: ஒரு செயலை செய்து வெற்றி காண்பதில் இருக்கும் மகிழ்ச்சி அளவற்றது. ஒரு குறிப்பிட்ட செயலை திரும்ப திரும்ப செய்து பழகுவது, அதன் முடிவுகளை அளந்து முன்னேற்றங்களையும், தோல்விகளையும், அலசி ஆராய்ந்து முன்னேற்றத்திற்கான முயற்சிகளை செய்வது, செயல்துறை வல்லுனர்களின் நட்பை பெற்று அவர்களின் ஆலோசனைகளை பயன்படுத்தி கொள்வது போன்றவை தன்னம்பிக்கையை வலுப்படுத்தும்.

போட்டியாளர்களிடம் நட்பாக பழகவேண்டும். அதே சமயம் போட்டிகளில் தெளிவாகவும், உறுதியாகவும் இருக்கவும் வேண்டும். செயல்களில் புது புது யுத்திகளையும், நுணுக்கங்களையும் அவ்வப்போது முயற்சி செய்து செயலில் ஈடுபட்டால் கிடைக்கும் முன்னேற்றம் ஈடு இணையற்றதாகும்.

இதையும் படியுங்கள்:
நம்மை சுற்றியிருக்கும் நல்ல விஷயங்களை கவனியுங்கள்!
Try to win!

மேலும் ஒரு நோட்டு புத்தகத்தை எடுத்துக்கொண்டு அமைதியாக ஒரு இடத்தில் இருந்து இதுவரை செய்த செயல்களை சின்ன மதிப்பீடு செய்யவேண்டும். நாம் மதிப்பிட்டிருக்கும் செயல்களை பட்டியல் இட்டு நாம் அதை எவ்வாறு செய்தோம் என்பதையும், நம் வாழ்வில் குறிகோள் நிறைவேற எவ்வாறான தினசரி செயல்களை செய்யவேண்டும் என்றும் எழுதிக்கொள்ளலாம் பட்டியல் போட்டு வைத்திருப்பதை வாரம் ஒரு முறையாவது எடுத்து படித்துக்கொள்ள வேண்டும். நம்மை தாழ்த்தி எடைபோடுபவர்களிடம் இருந்து ஒதுங்கி வாழலாம்.

நமக்கு மேலான ஒரு சக்தி நம்மை வழி நடத்தி செல்கிறது என்பதை நம்பி பணிவுடன் நியாமான முயற்சிகளுடனும், தன்னம்பிக்கையுடனும் முன்னேறி செல்லலாம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com