வெற்றிக்கு வழிகாட்டும் சுறுசுறுப்பும் நேர நிர்வாகமும்!

Motivational article
Agility and time management!
Published on

ளர்வதுடன் வாழ்க்கை தரத்திலும் வளரவேண்டும் என்பது பலரின் கனவுகள். அதற்கு இடைவிடாத தொடர் முயற்சி (Agility and time management!) மிக முக்கியம்.

முன்னேற உதவும் வேறுபட்ட எடுத்துக்காட்டுகள் சில வற்றை இங்கே காண்போம்.

எப்பொழுதும் சுறுசுறுப்பாக செயல்பட மீன்கள், பட்டாம் பூச்சிகள் வழி காட்டுகின்றன அவைகளுக்கு இயற்கை கொடுத்த வரம் எப்பொழுதும் அக்டிவாக இருப்பதற்கு.

மனிதர்கள் சுறுசுறுப்புக்கு முக்கியம் கொடுத்து பின்பற்றினால் சோம்பல் என்ற பேச்சுக்கே இடம் கொடுக்காமல் செயல்படலாம்.

சுறுசுறுப்புக்கு அடிமை ஆகியவர்கள் எப்பொழுதும் புத்துணர்சியுடன் காணப்படுவார்கள்.

அது மட்டும் அல்லாமல் அடுத்து என்ன செய்யவேண்டும், எதிர் வரும் நாட்களில் எப்படி செயல்படலாம் என்ற சிந்தனையை வளர்த்துக்கொள்வதில் கவனம் செலுத்துவார்கள்.

தனி மனிதனால் கட்டுக்குள் கொண்டுவர முடியாத ஒன்று நேரம். (Time) நேரம் கடல் அலைகள்போல நிற்காமல் செயல்பட்டுக்கொண்டே இருக்கும். போனால் திரும்பி வராது, கிடைக்காது.

நேரத்தை வீணடிக்காமல் முழுமையாக பயன்படுத்திக் கொள்பவர் பலன் பெறுகிறார்.

விமானத்தில் பறப்பவர்களுக்கு புரியும். விமான நிலையத்தில் இறங்கிய குறிப்பிட்ட விமானம் எவ்வளவு விரைவாக அடுத்த பயணத்திற்கு தயார் ஆகின்றது என்பது. எல்லா ஊழியர்களும் போட்டிப் போட்டுக்கொண்டு பணி புரிவார்கள் கரைந்துக் கொண்டிருக்கும் நேரத்தின் அருமை புரிந்து.

தனி நபரும் நேரத்தின் முக்கியத்துவம் அறிந்து செயல்பட பழகிக்கொள்ள வேண்டும்.

ஒலிம்பிக்ஸ் போன்ற புகழ் பெற்ற போட்டிகளில் ஓட்டப் பந்தயத்தின் இறுதி போட்டி துவங்கும் பொழுது போட்டியாளர்கள் எப்படி ஒரு முகபபடுத்தி தீவிர கவனம் செலுத்துவத்தில் மிகவும் கவனமாக இருப்பார்கள். எந்த வகை தொந்தரவும் அவர்களுக்கு கவன சிதறல் ஏற்படாமல் பார்த்துக்கொள்வார்கள்.

இதையும் படியுங்கள்:
ஓயாமல் உழைக்கும் 'Hustle Culture': இது நமக்கு வரமா, சாபமா?
Motivational article

அத்தகைய பண்பிற்கு முன்னேற துடிக்கும் தனி நபர் முக்கியத்துவம் கொடுத்து பழக்கத்தில் கொண்டு வந்து தொடர்ந்து பயன்படுத்தி உரிய பலனை பெறவேண்டும்.

தீவிர கவனம் செலுத்த பழகிக்கொண்டு பயன்படுத்தி வந்தால் உரிய சமயத்தில் கை கொடுக்கும். (due concentration)

அவரின் நிழல் மற்றும் மனசாட்சி ( shadow and conscience) தனி நபரை தொடர்ந்து கவனித்துகொண்டு வருகின்றது என்ற எண்ணம் அடி மனதில் பதிய வைத்துக்கொள்ள வேண்டும்.

இத்தகைய எண்ணம் குறிப்பிட்ட தனி நபரின் முன்னேற்றத்திற்கு தேவையான எச்சரிக்கை மணி அடித்துக் கொண்டே இருக்கும் சரியான வழியில் முன்னேற மற்றும் தடம் பிறளாமல் செயல் படவும் அடுத்து அடுத்து கட்டங்களுக்கு நகரவும்.

தேவையற்ற ஈர்ப்புக்கள் மற்றும் கவனச் சிதறல்கள் (unwanted attractions and disturbances) சூழப்பட்டுள்ள இன்றைய காலகட்டத்தில் அத்தியாவசியமாகின்றது சுய ஒழுக்கமும் கட்டுப்பாடும்.

மேற்கூறிய எச்சரிக்கை மணி இதற்கு பெரும் அளவில் உதவும் என்பது மறுக்க முடியாத உண்மை.

இதையும் படியுங்கள்:
தோல்வியே உந்துசக்தி: மாற்று யோசனை மூலம் முன்னேற்றம் காணும் ரகசியம்!
Motivational article

தனி நபர் செயல்பட பலரின் ஆதரவு, தயவு, உதவிகள் இன்றியமையாதவை. எனவே மற்றவர்களுடன் நட்பு ரீதியில் பழகி நட்பை விஸ்தாரப்படுத்திக் கொள்வது சால சிறந்தது.

தனி நபர் அடுத்த கட்டத்திற்கு சென்று மேலும் உறுதியாக முன்னேற இங்கு விவரித்தவைகளுக்கு உரிய முக்கியத்துவம் கொடுப்பதுடன் பின் பற்றினால்தான் பலன்களை அறுவடை செய்து பயன் பெறலாம் என்பது திண்ணம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com