
இப்படியும் ஒரு சம்பவம் நடக்கும் என்று நான் நினைத்து கூட பார்க்கவில்லை.
இப்படித்தான் எல்லோரும் சொல்லிக் கொண்டு தங்களை பற்றிய ஒரு ஆதர்சன கனவுகளை ஏற்படுத்தி வாழ்ந்து கொண்டு இருக்கிறோம்.
அப்படி என்ன நடக்க முடியாதது நடந்து விட்டது?
நீ நினைத்துக் கூட பார்க்க முடியாதது என்று ஏதாவது இந்த உலகத்தில் உள்ளதா!
நாம் நம் மனதில் கோபம், காமம், பொறாமை, கர்வம் ஆகிய முகங்களை சுமந்து கொண்டு திரிகிறோமே? அது தெரியாமல் அப்படி என்ன நடந்து விட்டதாக என் நண்பன் சொன்னதை உங்களுடன் பகிர்கிறேன்.
ஏஐ-ஐ திறந்து ஆகிவிட்டது; Youtube அரட்டை, x- troll , இன்ஸ்டா உடான்ஸ், பேஸ்புக் லைக் எல்லாம் போர் அடிக்க இந்தப் பக்கம் வந்தான் நடேசன்.
அவன் ஏற்கனவே ஏற்பாடு செய்யப்பட்ட பொது புத்தியுடைய, மாற்று சிந்தனை ஏற்படுத்தக்கூடிய ஒரு செயற்கை நுண்ணறிவு பெட்டகம் -ஏஐ முன் கையை சொடிக்கி, 'என் பொறாமை, காமம், கர்வம், கோவம் ஒழிக்க என்னால் முடியவில்லை; அதற்கு மாறாக என்ன செய்தால் இந்த தீய குணங்களை குறைக்க முடியும்? என்று கேட்க,
அதற்கு அது ஒரு புத்தகமே எழுதி விடும் அளவிற்கு செய்தியை தர, அதை விட்டு ஒழித்து கூகுள் நோட்புக் LM language model முன் வந்து தன் விளக்கத்தைக் கேட்டான்.
அது ஒரு விளக்கம் தந்தது. அந்த விளக்கம் முற்றிலுமாக வேறுபாடாக இருந்தது. மேலும் இத்தகைய மனித இயல்புகளை முற்றிலுமாக விட்டு ஒழித்தால் சித்து பிடித்து சித்தனாக வாய்ப்புள்ளதாக கூறியது.
உடனே அவன் என்னிடம் வந்தான். நான் அவனை என் வீட்டு திண்ணையில் உட்கார வைத்து அவன் செல்போனில் உள்ள எல்லா அப்ளிகேஷன்ஸையும் முழுமையாக அன்இன்ஸ்டால் செய்து ஒரு யோசனை கூறினேன்.
அதாவது நீ தினமும் என் வீட்டுக்கு வர வேண்டும். நாம் திண்ணையில் உட்கார்ந்து ஒரு இரண்டு மணி நேரம் பேசுகிறோம். அவ்வாறு ஜாலியாக பேசும் போது முடிந்தால் சைட் அடித்து அப்படியே ஒரு அப்ளிகேஷன்ஸ் போட்டு வாரத்திற்கு ஒரு முறை ஒரு சினிமாவிற்கு சென்று வருவோம். அப்படியே பக்கத்து வீட்டு அக்கப்போர்களை பேசி விவாதித்து ஒரு விவாத மேடையை நமக்குள்ளே உருவாக்குவோம்.
வீட்டில் டிவி முன் சீரியல் பார்ப்பதை விட்டுவிட்டு நம் உடலில் ஏற்படும் பல சீரியஸ் உபாதைகள் பற்றி விவாதித்து அதற்கான தீர்வுகளை நமக்கு நாமே கண்டு ஆராய்ந்து ஒரு கலந்தாய்வு செய்வதாக எங்கள் இருவருக்கும் ஒரு கருத்து உடன்படிக்கை ஏற்பட்டது.
இவ்வாறாக 'செல்போன் அடிக்சன்' என்று சொல்லி வந்த என் நண்பனுக்கு ஆறுதல் கூறி அவனை கண்காணித்து வருகிறேன்.
முடிந்தால் நீங்கள் ஏதாவது அறிவுரை கூறலாம்! நன்றி! வணக்கம்!!