மண்குதிரையை நம்பி ஆற்றில் இறங்காதே! வெற்றிக்கான ரகசியம் இதோ!

கண்மூடித்தனமான நம்பிக்கையைத் தவிர்த்து, சுய ஆய்வின் மூலம் வெற்றியாளராக மாறுவது எப்படி?
சுய ஆய்வு
சுய ஆய்வுAI image
கே.எஸ்.கிருஷ்ணவேனி

Iam a graduate from Vaishnav College in the year 1984. My writings were published in Mangayar Malar,Aval Vikadan,Kumudham Sneghethi since 1992 and received many prizes. Now I am writing in Kalki Publications. Cooking, writing, playing Shuttle cock & making fur dolls are my passions.

Updated on

வசரப்பட்டு யாரையும் முழுமையாக நம்பி எந்த ஒரு காரியத்திலும் இறங்குவது பல நேரங்களில் ஏமாற்றத்தையே தரும். எந்த ஒரு செயலிலும் இறங்குவதற்கு முன்பு சுயமான தேடலும் ஆய்வும் மிகவும் அவசியம். அத்துடன் நம்மை அவசரப்படுத்தி முடிவெடுக்க வைப்பவர்களிடம் இன்னும் கூடுதல் எச்சரிக்கை தேவை. பிறர் காட்டும் ஆசை வார்த்தைகளை நம்பி மோசம் போவதை விட நம் உள்மனம் சொல்வதைக் கேட்பதே நல்லது.

பிறர் கூறுவதைக் கேட்டு எடுக்கும் முடிவுகள் ஆபத்தில் முடியலாம். தொடக்கத்தில் நான் இருக்கிறேன் தைரியமாக இறங்கு என்று கூறுபவர்கள் நாம் அந்த செயலில் தோல்வி அடைந்தாலோ, சறுக்கினாலோ நான் அப்பவே சொன்னேனே என்று அதே வாயால் கூறி நம்மை திகைப்படையச் செய்வார்கள்.

எனவே பிறர் சொல்வதைக் கேட்டு கண்மூடித்தனமாக எந்த காரியத்திலும் இறங்காமல் நம்முடைய சொந்த அறிவையும் திறமையும் பயன்படுத்தி நின்று நிதானமாக முடிவெடுக்க வேண்டும்.

அதுவும் புதிய விஷயங்களில் ஈடுபடுவதற்கு முன்பு அதன் பின்னணி என்ன மற்றும் அதில் உள்ள சாதக பாதகங்களை முழுமையாக ஆராய்ந்து முடிவெடுக்க நாம் வச்ச குறி தப்பாது சாதித்து விடுவோம்.

தொடக்கத்தில் நான் இருக்கிறேன் என்று உறுதி அளிப்பவர்கள் கூட சிக்கல் வரும்பொழுது பின்வாங்கி விடுவார்கள். இதைத்தான் மண் குதிரையை நம்பி ஆற்றில் இறங்காதே என்று ஒரு பழமொழி சொல்வதுண்டு. மண்ணால் செய்யப்பட்ட குதிரை நட்டாற்றில் கரைந்து தண்ணீரில் கலந்துவிடும்.

சுய ஆய்வு
சுய ஆய்வுAI image

எனவே அதை நம்பி சவாரி செய்பவன் கதி அதோகதிதான் என்று விளக்கம் தரப்பட்டாலும் உண்மையில் 'மண் குதிரை' நம்பி ஆற்றில் இறங்காதே என்பதற்கான பொருள், ஆற்றில் சில இடங்களில் மணற்பாங்கான இடம் இருக்கும். அதாவது மணல் திட்டுகள், மணல் மேடுகள் ஆற்றின் நடுவில் இருக்கும். மண்திட்டுதானே என்று நாம் கால் வைத்து ஊன்றுவோமானால் அது உடனே அழுந்தி சரிந்துவிடும். அவற்றை எல்லாம் நம்பி கால் வைக்கக் கூடாது. குதிர் என்றால் குவியல். மண்குதிர் தான் மண் குதிரையாக மாறிவிட்டது.

அதுபோல நம்பக் கூடாத மனிதர்களை நம்பி எந்த ஒரு காரியத்தை செய்யத் தொடங்கினாலும் அவர்கள் கடைசி வரை நம் கூடவரமாட்டார்கள். மற்றவர்கள் கூறுகிறார்கள் என்பதற்காக யோசிக்காமல் எந்த முடிவும் எடுக்க வேண்டாம். நம் சுய நம்பிக்கையே நமக்கு எப்போதும் துணையாக இருக்க வேண்டும்.

மற்றவர்களின் மீது குருட்டுத்தனமான நம்பிக்கை வைப்பதை விட சூழ்நிலையை முழுமையாகப் புரிந்து கொண்டு சுயமாக சிந்தித்து முடிவு எடுப்பதே பாதுகாப்பானது.

இதையும் படியுங்கள்:
உங்கள் விதி உங்கள் கையில்: வெற்றியை ஈர்க்கும் 6 உளவியல் விதிகள்!
சுய ஆய்வு

சில மனிதர்களின் செயல்பாடுகள் சில நேரங்களில் நமக்கு ஏமாற்றத்தை தரக்கூடும். எனவே எந்த ஒரு செயலிலும் பிறரின் வார்த்தைகளை மட்டுமே முழுமையாக நம்பி எதிலும் இறங்காமல் இருப்பது நல்லது. முன்யோசனை இன்றி பிறர் யோசனையைக் கேட்டு செயல்படுவதால், அவசரப்படுவதால் தேவையற்ற ஏமாற்றங்களையும் இழப்புகளையும் சந்திக்க நேரிடும்.

தெளிவான எதிர்காலத்திற்குத் தேவையான சுய ஆய்வு முறைகள்.

வாழ்க்கையில் ஏமாற்றங்களைத் தவிர்க்க எந்த ஒரு செயலிலும் இறங்குவதற்கு முன்பு நிதானமும், தெளிவான சிந்தனையும் அவசியம். எதிலும் உணர்ச்சிவசப்பட்டு முடிவெடுப்பதோ, அவசரப்படுவதோ கூடாது. முக்கியமாக எவ்வளவு நெருக்கமானவராக இருந்தாலும் பிறர் பேச்சை மட்டும் நம்பி இறங்காமல், யோசிக்க சிறிது நேரம் (அவகாசம்) எடுத்துக்கொள்வது நல்லது.

பிறர் ஒரு விஷயத்தை சொல்கிறார்கள் என்றால் அதிலிருக்கும் உண்மைத்தன்மையே முதலில் ஆராய வேண்டும். பிறர் தங்களுடைய ஆதாயத்திற்காகவோ அல்லது முழு புரிதல் இல்லாமலோ கூட தவறான தகவல்களைத் தரலாம். அதனால் அதில் அவசரப்பட்டு இறங்கி தேவையற்ற இழப்புகளை சந்திக்க நேரிடலாம். எனவே எந்த ஒரு முடிவெடுக்கும் பொழுதும் அதைப் பற்றிய முழு புரிதல் இல்லாமல் இறங்க வேண்டாம்.

இதையும் படியுங்கள்:
உங்களை 99 சதவீதம் பேரை விட முன்னேற்றும் அந்த சீக்ரெட் இதோ!
சுய ஆய்வு

இந்த அணுகுமுறை உங்களை ஏமாற்று வித்தைகளில் சிக்காமல் பாதுகாப்பதோடு, எந்தவொரு செயலிலும் நீண்டகால வெற்றியை உறுதி செய்யும் முதிர்ச்சியான சிந்தனையை உங்களுக்கு வழங்கும்.

logo
Kalki Online
kalkionline.com