அறிவா?... ஆற்றலா?
படித்தால் அறிவு வரும்!
பழகினால் ஆற்றல் பெருகும்!
ஆக படிக்க வேண்டும், பிறகு பழக வேண்டும்.
எதைப் படிப்பது...
ஏன் படிக்க வேண்டும்...
எதற்கு படிக்க வேண்டும்...
எங்கே படிப்பது...
எப்போது படிப்பது...
யாரைப் படிப்பது...
இப்படி கேள்வி கேட்டுக்கொண்டே இருந்தால் அறிவு வளரும்... ஆனால் ஆற்றல் பெற்றால்தான் நாம் நாமாக இருக்க முடியும்.
அதற்காக எல்லா அனுபவங்களையும் ஒருவரால் ஒரு பிறவியில் பெற முடியாது. ஆகவே, பிறர் படித்து, புரிந்து கொண்டு பகிர்ந்த புத்தகங்களை நாம் படிக்க படிக்க, நம் செயல்திறன் பல மடங்கு அதிகமாகும்.
அங்கே நம்முடைய மனம் ஒரு வழியை காட்டும்; காட்சிகள் தென்படும்; பாதைகள் புலப்படும்; பயணங்கள் தொடர்கதையாக மாறும்... வாழ்வு சிறக்கும்... பிறர் வாழ்விற்காக போராட தோன்றும்.
உங்கள் வாழ்க்கையை மாற்றும் புத்தகங்கள்!
அந்தப் போராட்டம் முதலில் நம்முள் நிகழும். நம் கற்பனை சிறகுகள் விரியும். பறக்கும் பரவசம் காணும். காலம் நம் கையில் வசப்படும். ஆக படிப்பை ஏணி ஆக பயன்படுத்த வேண்டும். நம் எண்ணங்களை சீர் அழிக்கும் எரிமலையை களைய வேண்டும்.
முதல் படி: சமுதாய ஊடகங்களை பயன்படுத்தும் போது ஒரு கால அளவை மேற்கொள்ள வேண்டும்.
நம் நாட்டில் பண்பாளர்களுக்கு பஞ்சம் இல்லை. பஞ்சம் மக்களின் மனதில் இருக்கிறது. மான்பு, அறம் போன்ற நீதிகள் நிலைக்க படிக்க வேண்டும்.
ஒரு நாளைக்கு ஒரு பக்கம்... மக்களை மயக்க வல்லது பேச்சு.
மக்கள் உணர்வுகளின் ஒரு தொகுப்பு. காட்சிகள் மக்களை சிந்திக்க வைக்கவும் பயன்படும்... சந்தி சிரிக்கவும் வழிகோலும்.
ஆனால் ஒருவர் தனக்கு விரும்பிய புத்தகத்தை படிக்கும் போது, நின்று, நிதானமாக, கண்டு களித்து அதனுடன் உறவாடி பின் பிரியா விடை கொடுப்பார்.
திரும்ப திரும்ப அந்த புத்தகம் அவரிடம் பல புதிய கதவுகளை திறந்து பல நல்ல வழிகளுக்கு அழைத்துச் செல்லும்.
இதைத்தான் கவிஞர் கண்ணதாசன்...
நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால்…
தெய்வம் ஏதுமில்லை…
நடந்ததையே நினைத்திருந்தால்…
அமைதி என்றுமில்லை…
என்கிறார்.
இருப்பதைக் கொண்டு இல்லாதவனுக்கு அளித்து, இன்பமாய் வாழ புத்தகம் ஒரு திறவுகோல்.
புத்தகமே கடவுள்...
உங்கள் வாழ்க்கையை மாற்றும் புத்தகங்கள்!