

மைக்ரோசாஃப்ட் நிறுவனர் பில் கேட்ஸ் பத்தி தெரியாதவங்க யாருமே இருக்க முடியாது. அவர் உலகத்தோட பெரிய பணக்காரர் லிஸ்ட்ல பல வருஷம் இருந்தவர் மட்டுமில்ல, ஒரு சிறந்த சிந்தனையாளரும் கூட. ஸ்டூடண்ட்ஸ் வாழ்க்கையில ஒரு பக்கம் எக்ஸாம் பயம், இன்னொரு பக்கம் எதிர்காலத்தை பத்தின கவலைன்னு எப்பவும் ஒரு டென்ஷன் இருக்கும்.
இந்த நேரத்துல, வாழ்க்கையில பல ஏற்ற இறக்கங்களை பார்த்த பில் கேட்ஸ் சொன்ன சில வார்த்தைகள் உங்களுக்கு ஒரு பெரிய 'பூஸ்ட்' மாதிரி இருக்கும். அவர் வெறும் பணத்தை பத்தி மட்டும் பேசல, ஒரு மனுஷன் எப்படி சிந்திச்சா ஜெயிக்கலாம்னு சொல்லியிருக்கார். அப்படி ஒவ்வொரு ஸ்டூடண்ட்டும் தெரிஞ்சுக்க வேண்டிய 10 முக்கியமான பொன்மொழிகள் இதோ.
1. உங்களை மத்தவங்களோட ஒப்பிடாதீங்க: பில் கேட்ஸ் சொன்ன ரொம்ப முக்கியமான விஷயம், "உங்களை இந்த உலகத்துல இருக்குற யாரோடயும் ஒப்பிடாதீங்க, அப்படி செஞ்சா நீங்களே உங்களை அவமானப்படுத்திக்கிறீங்கன்னு அர்த்தம்." ஒவ்வொருத்தருக்கும் ஒரு தனித்திறமை இருக்கும். ஒருத்தருக்கு மேக்ஸ் வரலாம், ஒருத்தருக்கு டான்ஸ் வரலாம். மத்தவங்க கூட ஒப்பிட்டு உங்க நிம்மதியை கெடுத்துக்காதீங்க.
2. தோல்வியில இருந்து கத்துக்கோங்க: "வெற்றியை கொண்டாடுறது தப்பில்லை, ஆனா தோல்வியில இருந்து கத்துக்கிற பாடம் தான் ரொம்ப முக்கியம்." நம்ம ஊர்ல ஒரு எக்ஸாம்ல மார்க் குறைஞ்சா உலகமே முடிஞ்சு போன மாதிரி நினைக்கிறோம். ஆனா, அந்த தோல்வி எதனால வந்துச்சுன்னு யோசிச்சு சரி பண்ணா, அடுத்த தடவை நீங்க தான் டாப்பர்.
3. வாழ்க்கை நியாயமா இருக்காது: "வாழ்க்கை எப்பவும் நியாயமா இருக்காது, அதை பழகிக்கோங்க." இது கொஞ்சம் கசப்பான உண்மைதான். சிலருக்கு ஈஸியா எல்லாம் கிடைக்கும், சிலருக்கு கஷ்டப்பட்டாலும் கிடைக்காது. அதை நினைச்சு புலம்பாம, இருக்குற சூழ்நிலையில எப்படி ஜெயிக்கலாம்னு பாருங்க.
4. 22 வயசுல CEO ஆக முடியாது: "நீங்க ஸ்கூல் முடிச்ச உடனே ஒரு வருஷத்துக்கு பல லட்சம் சம்பளம் வாங்க முடியாது, இல்லனா உடனே ஒரு கம்பெனிக்கு சிஇஓ ஆக முடியாது. அதுக்கெல்லாம் உழைப்பு தேவை." இப்போ இருக்குற அவசர உலகத்துல எல்லாருக்கும் உடனே வெற்றி வேணும்னு ஆசை. ஆனா, நிதானமா உழைச்சா தான் அந்த இடம் கிடைக்கும்.
5. தப்பு செஞ்சா பெத்தவங்களை குறை சொல்லாதீங்க: "நீங்க ஏதாவது தப்பு செஞ்சா, அதுக்கு உங்க பெத்தவங்களை குறை சொல்லாதீங்க. அந்த தப்புக்கு நீங்க தான் பொறுப்பு." இது ரொம்ப முக்கியமான ஒரு மெச்சூரிட்டி. நம்ம தோல்விக்கு மத்தவங்க மேல பழி போடாம, நாமளே பொறுப்பு ஏத்துக்கிட்டா தான் அடுத்த படிக்கு போக முடியும்.
6. 'நர்ட்' (Nerd) கிட்ட அன்பா இருங்க: "நல்லா படிக்கிற பசங்ககிட்ட (Nerd) அன்பா இருங்க. பின்னாடி ஒரு நாள் நீங்க அவங்க கிட்ட வேலை செய்ய வேண்டிய சூழ்நிலை வரலாம்." இது பில் கேட்ஸ் அவரோட வாழ்க்கையில இருந்து சொன்ன ஒரு உண்மை. படிக்கிற பசங்களை கிண்டல் பண்ணாம அவங்க கூட நல்ல நட்பு வச்சுக்கோங்க.
7. சோம்பேறித்தனமான ஆளுங்களை வேலைக்கு எடுப்பேன்: "கஷ்டமான ஒரு வேலையை செய்ய நான் எப்பவும் ஒரு சோம்பேறியான ஆள தான் தேர்ந்தெடுப்பேன். ஏன்னா, அந்த வேலையை எப்படி ஈஸியா முடிக்கலாம்னு அவர் ஒரு குறுக்கு வழியை கண்டுபிடிப்பார். ஸ்மார்ட்டா யோசிச்சு வேலையை முடிக்க கத்துக்கோங்க.
8. பீட்பேக் (Feedback) தான் வளர்ச்சி: "நமக்கு எப்பவும் நம்ம தப்பை சுட்டிக்காட்ட ஒரு ஆள் தேவை. அப்போ தான் நாம முன்னேற முடியும்." யாராவது உங்களை விமர்சனம் பண்ணா கோபப்படாதீங்க, அதுல இருக்குற உண்மையை எடுத்துக்கிட்டு உங்களை மாத்திக்கோங்க.
9. பொறுமை தான் முக்கியம்: "வெற்றிக்கு பொறுமை தான் ஒரு முக்கியமான மூலப்பொருள்." ஒரே நாள்ல மைக்ரோசாஃப்ட் உருவாகல. பல வருஷ போராட்டத்துக்கு அப்புறம் தான் பில் கேட்ஸ் ஜெயிச்சார். அதனால விடாமுயற்சியோட இருங்க.
10. ஏழையா பிறக்குறது உங்க தப்பில்லை: "நீங்க ஏழையா பிறந்தா அது உங்க தப்பில்லை, ஆனா ஏழையா இறந்தா அது உங்க தப்பு தான்." உங்க சூழ்நிலையை மாத்துற சக்தி உங்க கிட்ட தான் இருக்கு. படிப்பு தான் அந்த மாற்றத்துக்கான முதல் படி.
பில் கேட்ஸ் படிப்பு பாதியில விட்டார்னு சொல்வாங்க, ஆனா அவர் ஒரு நாளைக்கு பல மணி நேரம் புஸ்தகம் படிக்கிற பழக்கம் உள்ளவர். படிப்புங்கிறது டிகிரி வாங்குறதுல மட்டும் இல்ல, எப்போவும் கத்துக்கிட்டே இருக்குறதுல தான் இருக்கு. இந்த 10 விஷயங்களை உங்க மைண்ட்ல ஏத்திக்கிட்டா, நீங்க வெறும் ஸ்டூடண்ட்டா மட்டும் இல்லாம ஒரு வெற்றியாளராவும் மாறலாம்.