வாழ்க்கையில் வெற்றி பெற கற்பனை வளம், யோசிக்கும் திறன் இரண்டும் உதவுமா?

Motivational articles
A. P. J. Abdul KalamImage credit -knocksense.com
Published on

முன்னாள் ஜனாதிபதி டாக்டர் அப்துல் கலாம் இளைஞர்களிடம்,  "கனவு காண்" என்றார்.  காரணம், கனவு காண்பது கற்பனை வளத்தை தூண்டும்.  கற்பனை வளம் அதிகரித்தால், யோசிக்கும் திறன் பெருகி  குறிக்கோளை அடைய உதவும்.

ஒரு கோவில் கட்டும் இடத்தில், தொழிலாளர்கள் கல் உடைக்கும்  கூலி வேலையை செய்து கொண்டிருந்தனர். படிப்பறிவில்லாதவர்கள். காலை பத்து மணி முதல் மாலை ஆறு மணி வரை கல் உடைக்கும் வேலை பார்க்க தினக் கூலி  ரூபாய் நூறு. 80% வேலை முடிந்திருந்திருந்தது. 20% பாக்கி இருந்தது.

அப்போது அவ்வழியாக வந்த சாது ஒருவர், ஒரு கூலி வேலையாளிடம் வேலையைப் பற்றி கேட்கையில், அவன் கூறியது -

கல்லை உடைக்கிறேன். ரூபாய் நூறு கிடைக்கும். 

இரண்டாவது ஆள்  "நீளம், அகலம் பார்த்து கல்லை உடைக்கிறேன். கூலி ரூபாய் நூறு."

மூன்றாவது ஆள் "இந்தக் கோவிலைக் கட்ட எனக்கு நூறு ரூபாய் கூலி" என்றான்.

வேலை மற்றும் கூலி இரண்டும் ஒன்றே. ஆனால் வேலை செய்யும் ஆட்களின் மனதில், அவரவர்களது கற்பனை வளம் வேறுபடுகிறது.

மூன்றாவாது ஆள் "கோவில் கட்டுகிறேன்" என்று சொல்கையில், அவன் கல்லைப் பார்க்கவில்லை. கோவிலைப் பார்க்கிறான். 

தனது சந்ததிகளிடம் கோவில் கட்டுவதாக மூன்றாவது ஆள்  சொல்கையில், அவர்களது கற்பனை விரியும். யோசிப்பார்கள். தந்தை கோவில் கட்டுகிறார். நாமும் அதைவிட மேலாக ஏதாவது செய்யவேண்டுமென எண்ணம் தோன்றும். உழைப்பார்கள்.

இதேபோல,  பள்ளிக்கூடத்தில் ஆசிரியர் மாணவர்களிடம், "பெரியவனாகிய பிறகு என்னவாக உனக்கு விருப்பம்"?

எனக் கேட்கையில், கற்பனை செய்து  "எனக்கு வக்கீலாகணம்" "டாக்டராகணம்" என்பார்கள். ஆசிரியரும், "வெரி குட். நல்லா படி" என்று சொல்வார்கள். ஆரோக்கியமான இந்த கற்பனை வளம் பிஞ்சு மனதில் பதிய,  வாழ்வில் உயர்கிறார்கள். சுனிதா வில்லியம்ஸ் மனதில் தோன்றிய கனவு, அவர் விண்வெளிக்கு  பயணித்ததின் மூலம் செயலானது.

இதையும் படியுங்கள்:
ஒவ்வொரு நாளும் இனிய நாளே!
Motivational articles

இந்திய நாட்டு சுதந்திரத்திற்காக எத்தனையோ பேர்கள் கற்பனை வளத்துடன் சமயோசிதமாக செயல்பட்டதால், நாடு சுதந்திரமடைந்தது.

முக்கியமாக, இளைய தலைமுறையினர்  எடுத்த காரியத்தில் வெற்றி காண வேண்டுமென்ற உயர்ந்த நோக்கத்தில், அப்துல் கலாம் ஐயா அவர்களை சந்தித்து நல்ல லட்சியங்களை அவர்களது  மனங்களில் விதைத்தார். கரு முக்கியம். ஆரோக்கியமான விதைகளை நடுகையில்,  செடிகளும் ஆரோக்கியமாக வளர்ந்து நிற்கும்.

சரியான தகவலை சரியான நேரத்தில் கண்டுபிடித்து கொடுக்க, கற்பனை வளம், யோசிக்கும் திறன் இரண்டும் தேவை. நெருப்பு வரவழைக்க  முதலில் சிக்கி-முக்கி கல்லை உரசியவன் யோசித்தான். கற்பனை செய்தான். உருவானது தீப்பெட்டியும், தீக்குச்சியும்.

பல்வேறு மங்களகரமான விஷயங்கள் வீடுகளில் நடைபெறுகின்றன. அதில் திருமணமும் ஒன்று. பிள்ளைகளின் திருமணத்திற்காக பொருத்தமான வரன் தேட, பெற்றோர்கள் படும்பாடு அதிகம்.  இவர்களுக்காக என்ன  வகையில் உதவி செய்யலாம் என்று ஒருவர் கற்பனை செய்தார். யோசித்தார்.

இதையும் படியுங்கள்:
உங்க 'பாஸ்'ஸை சம்மதிக்க வைக்கணுமா? Mood Management தெரிஞ்சுக்கோங்க மக்களே!
Motivational articles

கருத்து பிறக்க, கல்யாண வரன் விஷயங்களுக்காக அமைப்பு ஒன்றினை ஏற்படுத்தினார். உழைத்தார்.  சிறிய அளவில் ஆரம்பித்தது படிப்படியாக வளர்ந்து  இப்போது ஆல் போல தழைத்து உலமெங்கும் பரவியுள்ளது. வரன்கள் தேர்வு,  திருமணங்கள் நடத்துவது என வெற்றிக்கொடி கட்டி பறக்கிறது.

மேலும் அதிகம் படித்தவர்கள்,  பெரிய வேலையில் இருந்தால் கூட, கற்பனை வளம் பெருக,  சற்றே மாற்றி யோசித்து,  செய்து கொண்டிருக்கும்  வேலையை விட்டு விட்டு  ஆன்மீக சொற்பொழிவாளர்கள், சங்கீதக் கலைஞர்கள் என மாறுபட்ட பாதைகளில் பயணித்து கொடிகட்டி பறக்கின்றனர் என்பது நிதர்சனம்.

என்ன! சரிதானே..!

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com