உங்க 'பாஸ்'ஸை சம்மதிக்க வைக்கணுமா? Mood Management தெரிஞ்சுக்கோங்க மக்களே!

அலுவலகங்களில் பணி புரியும் பொழுது இக்கடான சூழ்நிலைகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். நல்ல தீர்வு கண்ட அனுபவத்தை விவரிக்கும் உண்மை நிகழ்வு பற்றி காண்போம்.
face difficult situations working in offices
Mood Management
Published on

வாழ்க்கையில் ஏற்ற தாழ்வுகளுக்கு இடமுண்டு. அதே போல் அலுவலகங்களில் பணி புரியும் பொழுது இக்கடான சூழ்நிலைகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். நல்ல தீர்வு கண்ட அனுபவத்தை விவரிக்கும் உண்மை நிகழ்வு பற்றி காண்போம்.

*************

அந்த வங்கி கிளையின் வாடிக்கையாளர் ஒருவர் எதிர்பாராத வண்ணமாக இறந்து விட்டார்.

அவருக்கு ஒரு மனைவி. இறந்தவர் பிசினஸ் செய்துவந்தார். அந்த கணக்கை இந்த வங்கி கிளையில் வைத்து இருந்தார். உடன் அவரது சேவிங்ஸ் அக்கவுண்ட் வைத்து இருந்தார்.

இந்த நிகழ்வு நடந்தது மகாராஷ்டிராவின் ஒரு நகர பகுதியில். இறந்தவரின் மனைவி அவ்வளவாக படித்தது இல்லை. மராட்டி மொழி தெரியும்.

வாரிசுத்தாரரான அவருக்கு அவர் கணவர் வங்கி கணக்குகளை முடித்து சேர வேண்டிய பணத்தை வங்கி ரூல்ஸ் படி , இறப்பு சார்டிபிகேட், உரிய ஆவணங்களை பெற்றுக் கொண்டு அளித்துவிட்டது.

அவரும் நன்றி கூறி விட்டு சென்று விட்டார்.

இரண்டு நாட்கள் கழித்து அந்த மங்கை மறுபடியும் வங்கி கிளைக்கு வந்து அவருக்கு உதவிய அதிகாரியிடம் பதட்டத்துடன் ஒரு செக்கை கொடுத்து அதற்கு உரிய பணத்தை கொடுக்கும் படி வேண்டிக் கொண்டார்.

அந்த அதிகாரி தென் இந்தியாவிலிருந்து சமீபத்தில் தான் மாற்றலில் அந்த கிளைக்கு வந்து இருந்தவர். அவருக்கு மராத்தி மொழி தெரியாது.

அவருக்கு தெரிந்த இந்தி மொழியில் அந்த மங்கைக்கு எடுத்து கூறமுற்படும் பொழுது அங்கு வந்த அந்த கிளையின் மேனேஜர் அந்த செக்கை வாங்கி பார்த்து விட்டு அவரது கணவர் அக்கவுண்ட் க்ளோஸ் செய்து விட்டப்படியால் ஒன்றும் செய்ய முடியாது என்று அந்த பெண்மணியிடம் மராத்தி மொழியில் கூறிவிட்டு, அந்த அதிகாரியிடமும் அதை ஆங்கிலத்தில் கூறிவிட்டு சென்று விட்டார்.

இதையும் படியுங்கள்:
மேலாண்மை நிர்வாகத்தில் முன்னேறுவது எப்படி?
face difficult situations working in offices

பணம் கிடைக்கும் அது உதவிகரமாக இருக்கும் என்று நம்பி வந்த அந்த மங்கைக்கு மிக்க ஏமாற்றமாகவும், வருத்தமாகவும் இருந்தது. அதை பார்த்த அதிகாரிக்கு பரிதாபமாக இருந்தது.

வங்கியில் சேர்ந்த பொழுது அவருக்கு வேலை கற்றுக் கொடுத்து, வழிகாட்டியாக இருந்த முதல் மேனேஜர், அவரது மென்டர் (Mentor), கூறியது நினைவிற்கு வந்தது. அவர் கூறியிருந்தார், "வங்கியில் பணி புரிவது உங்களுக்கு வாய்ப்பு அளிக்கின்றது பிறருக்கு உதவ. ஒரு குறிப்பிட்ட வேலை செய்ய இயலாது என்றால், பணிவாக அந்த வாடிக்கையாளரிடம் விவரித்து கூறவும். அப்படியிருந்தும் ஏதாவது முறையில் உதவ முடியுமென்றால் அதற்கு உரிய முழு முயற்சி எடுக்கவும் ," என்று.

உடனே க்ளார்க்கை அழைத்து அவர் உதவியுடன் மராத்தி மொழியில் அந்த மங்கையை இரண்டு வாரம் கழித்து வரும்படி கூறி முயற்சி செய்வதாக அந்த செக்கை பெற்றுக் கொண்டு அனுப்பி வைத்தார்.

அந்த குறிபிட்ட செக்கின் தொகை ரூ 72000.

இந்த நிகழ்வு நடந்த கால கட்டத்தில் பெரிய தொகை. அந்த செக்கை அவரது கணவர் வியாபார அக்கவுண்ட் பெயரில் வந்து இருந்தது. அந்த செக்கில் அக்கவுண்ட் பேயி என்று கிராஸ் செய்யப்பட்டுயிருந்தது. ( Account Payee crossing).

அந்த செக் அவர் கணவருக்கு கிடைத்த மறுநாள் அவர் காலமாகிவிட்டார். அவர் பீரோவில் இருந்த அந்த செக்கை தான் அந்த மங்கை கொண்டு வந்தார் அன்று வங்கி கிளைக்கு. அந்த செக்கை அனுப்பியவர் அவர் கணவருக்கு கொடுக்க வேண்டிய பணம் அது. அந்த செக் வெளியூரிலிருந்து வந்து இருந்தது.

வங்கி கிளை மேனேஜர் ஒன்றும் செய்ய முடியாது என்று கை விரித்து விட்டார். அவரை மீறி இந்த அதிகாரியால் ஒன்றும் செய்ய முடியாது. ஆனால் அந்த அதிகாரிக்கு எப்படியாவது உதவ வேண்டும் என்ற எண்ணம் மேலோங்கி நின்றது.

நிதானமாக யோசித்தார். ப்ளீச் என்று பல்பு எரிந்தது. அதைக் கடைப் பிடித்தார்.

பத்து நாட்களுக்கு பின்பு அந்த பெண்மணி வங்கி கிளைக்கு வந்து அந்த செக்கிற்கு உரிய பணத்தை பெற்றுக் கொண்டு மனமார நன்றிகள் கூறி விட்டு சென்றார்.

அது சரி. அந்த அதிகாரி அப்படி என்ன மாயம் செய்தார் என்பதை சற்று காண்போம்.

அவர் மனநிலை மேலாண்மை கடைப் பிடித்தார் (adopted Mood Management).

அந்த அதிகாரி ஒரு லிஸ்ட் தயாரித்ததார், என்ன என்ன செய்ய வேண்டும் என்று.

இதையும் படியுங்கள்:
நேர மேலாண்மை எவ்வளவு அவசியம் தெரியுமா?!
face difficult situations working in offices

முதலில் அவர் வங்கி கிளை மேனேஜரை சமாதானப் படுத்தி அவரது ஒப்புதலை பெற வேண்டும்.

மேனேஜர் முடியாது என்று கூறியுள்ளதால், அவ்வளவு சுலபமில்லை.

பிறகு ரீஜனல் அலுவலகத்திலிருந்து ஒப்புதல் பெற வேண்டும்.

பிறகு அந்த செக்கை வெளியூர் வங்கிக்கு அனுப்பி பணம் பெற வேண்டும்.

செயலில் இறங்கினார். அவரது மேனேஜர் சிடு சிடுவென்று ஸ்ட்ரிக்ட் ஆக இருந்தாலும் மதிய உணவு எடுத்துக்கொண்ட பிறகு சகஜமாக உரையாடுவார் என்றும், அவரது மனநிலை அப்பொழுது மென்மையயாக இயங்கும் என்றும், வந்த சில நாட்களில் அந்த அதிகாரி புரிந்துக் கொண்டார்.

எனவே அந்த சரியான தருணத்தை பயன் படுத்திக்கொண்டார்.

அன்று மதியம் மேனேஜர் மதிய உணவு எடுத்துக் கொண்டு ஜாலியான மூடில் இருக்கும் பொழுது அந்த குறிப்பிட்ட டாபிக் எடுத்து உரையாடி விட்டு, கையில் ரெடியாக டைப் செய்து இருந்த ரீஜனல் ஆபிசிலிருந்து பெற வேண்டிய ஒப்புதல் கடிதத்தை மேனேஜர் டேபிளில் வைத்தார்.

அதை படித்த மேனேஜர் அந்த கடிதம் எழுதியிருந்த முறை, விளக்கப்பட்டிருந்த விவரங்கள் ஆகியவற்றை கண்டு மகிழ்ந்து அவரது கையொப்பம் இட்டார். (affixed his signature).

நன்றி கூறி பெற்றுக் கொண்டு உடனுக்கு உடன் ரீஜனல் ஆபிஸிற்கு அக்கடிதத்தை அனுப்பி வைத்தார், அந்த அதிகாரி.

இதையும் படியுங்கள்:
நெருக்கடி மேலாண்மை தவிர்க்க முடியாதது..!
face difficult situations working in offices

அதற்கு முன்பாக சில முக்கிய கிரவுண்ட் ஒர்க் செய்தார். அது ரீஜனல் ஆபிசின் குறிப்பிட்ட அதிகாரியிடம் டெலிபோனில் பேசி கலந்து ஆலோசித்து விவரங்கள் கூறி தயார் செய்து வைத்து விட்டு அதன் அடிப்படையில் அந்த கடிதம் தயார் செய்திருந்தார்.

பிறகு ஒவ்வொரு கட்டத்திலும் விரைவாக முன்னேற முடிவு சாதகமாக வந்தது.

அந்த பணம் பெற்றுக் கொண்ட மங்கை நன்றி கூறியதும் மேனேஜர் இவரை பாராட்டினார்.

இந்த அதிகாரிக்கும் மகிழ்ச்சி. தக்க சமயத்தில் பயன் படுத்திய மூட் மேனேஜ்மென்ட் ( Mood Management) நன்மையளித்ததில் தனிப்பட்ட மன மகிழ்ச்சி அடைந்தார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com