

மனிதனுக்கு உணவு, உடை, இருப்பிடம் இந்த மூன்றுமே அத்தியாவசியமாக இருக்கின்றன. ஆனால் இன்றைய காலகட்டத்தில் இந்த மூன்றை பெற வேண்டும் என்றால் கூட, முதலில் நமக்கு தேவைப்படுவது பணம்தான். இந்தப் பணத்தை சம்பாதிப்பதற்காக தான் நாம் ஒவ்வொருவரும் வேலைகளைப் பிடித்தோ, பிடிக்காமலோ, கட்டாயத்தின் பெயரிலோ பார்த்துக் கொண்டிருக்கிறோம். ஆனால் இதில் முக்கால்வாசி பேர் குறைந்த சம்பளத்தில், அதிக வேலையில் ஈடுபடுத்தப்படுகிறார்கள்.
அது கட்டுமான துறையாக இருந்தாலும் சரி, ஐடி கம்பெனியாக இருந்தாலும் சரி, அதற்கென சரியான நமக்கு ஏற்றவாறு தகுதியான வேலையை நாம் தான் தேடிக் கொள்ள வேண்டும். தகுதியான, நல்ல சம்பளம் கிடைக்கக்கூடிய வேலையை தேடுவதில், நாம் பல்வேறு கேரியர் மிஸ்டேக்குகளை தெரிந்தும், தெரியாமலும் செய்கிறோம். இதனால், அந்த வேலை நமக்கு கிடைக்காமல் போகின்றன.
இதற்கு நாம் என்ன செய்ய வேண்டும்? அதேபோல் வேலை பார்க்கும் இடத்திலும் பல தவறுகளை நாம் செய்கிறோம். இதனால் இப்போது நமது தவறுகளை எப்படி முன்னெச்சரிக்கையுடன் சரி படுத்துவது.! என்பதைப் பற்றி இந்த பதிவில் பார்ப்போம்.
கரியர் மிஸ்டேக்குகளை எந்தெந்த இடத்தில் நாம் செய்கிறோம்?
முதலில் தனக்கான தகுதியை நிர்ணயம் செய்யாமல் இருப்பது.
சம்பளம் எவ்வளவு என்று தெரியாமலேயே, அந்த வேலையில் சேர்வதற்காக இன்டர்வியூ போவது.
பங்குச்சந்தை நிலவரம், பொருளாதார சிக்கல்கள், சமூக நிலவரங்கள் இவற்றை எதையுமே அறியாமல் இருப்பது.
தனக்கான சம்பள நிர்ணயத்தை முதலில் தானே நிர்ணயிக்க முடியாமல் போகுது.
முறையான தன்விவர படிவத்தை (Resume) தயாரிக்க தெரியாமல் இருப்பது.
பெரிய நிறுவனங்களுக்கு போகும்போது, அதற்கு முன் வேலை பார்த்த நிலையான நிறுவனத்தின் பெயரை ரெஸ்யூமில் சரியாக குறிப்பிடாமல் இருப்பது.
ஒரு நிறுவனத்தில் வேலை பார்க்கும் பொழுது, குழப்படியான சூழ்நிலைகளில் மற்ற நிறுவனத்தை நாடி வேலைக்கு செல்வது.
நிறுவனத்தில் ஒரு நிலையான இடத்தை பிடிப்பதற்கு முயற்சி செய்யாமல் வேலைக்கு வந்தோம், போனோம் என்ற கடமைக்கு இருப்பது.
வேலையை முறையான அணுகு முறையில் கையாள முடியாமல் இருப்பது. அதற்கான பல நுட்பங்களை தெரிந்து கொள்வதற்கு ஆர்வம் காட்டாமல் இருப்பது.
ஒரு பிரச்சனையை தானே சரி செய்ய வேண்டும், இந்த பிரச்சனை மேல் அதிகாரியிடம் போகக்கூடாது..! என்ற எண்ணங்கள் இல்லாமல் சுயநலத்தோடு இருப்பது.
நிறுவனத்தில் கற்றுக் கொள்வதையும் தாண்டி, நமது வேலையை செய்வதற்காக திறமைகளை வளர்ப்பதற்காக வெளியேயும் அதற்கான தேடல்களை தேடாமல் இருப்பது.
வேலை செய்யும் நேரத்தில், நமக்கு பிடிக்காத நேரத்திலோ அல்லது கோபம் வரும்போது, நமது கோபத்தை சக ஊழியர்களிடமோ அல்லது மேலதிகாரியிடமோ காட்டுவது.
ஒவ்வொரு பிரச்சினைகளையும் ஏற்றுக் கொள்ள முடியாத மனநிலையில் இருப்பது.
எதையுமே ஒரு நேர்மையான எண்ணங்களோடு அணுகாமல் இருப்பது.
இதுபோன்று மேலே கூறிய பல விஷயங்கள் தான் நாம் செய்யும் கரியர் மிஸ்டேக்குகள். இது போன்ற ஒரு சில சின்ன சின்ன தவறுகளை திருத்திக் கொண்டு வேலைகளை தேடவும், செய்யவும் ஆரம்பித்தால், நமது வாழ்க்கைக்கான தகுதியான வேலையையும், மன நிறைவான சம்பளத்தையும் என்றென்றும் பெற முடியும்.
கரியர் என்பது வாழ்க்கையில் ஒரு பகுதி மட்டுமே. அதற்காக உங்களுடைய சந்தோசத்தை ஒரு போதும் இழந்து விடக்கூடாது. நல்ல புரிதல்களோடு வேலை பார்த்து, நல்ல சம்பளத்தில் நல்ல முறையில் வாழ்வதே நம் வாழ்க்கையின் முக்கிய நிரந்தரமான குறிக்கோளாகும்.