
சம்பவம் - 01
சினிமா கதாநாயகன் ஒரு முறை மன நல மருத்துவரிடம் சென்றார். அவரது முறை வந்ததும் உள்ளே சென்றார். மருத்துவர் அவரை உட்கார சொன்னார். பின்பு என்ன பிரச்சனை என்று கேட்டார்.
அவ்வளவுதான். "ஓ" என்று ஆழ ஆரம்பித்து விட்டார். மருத்துவருக்கு ஒன்றும் புரிய வில்லை. பின்பு அவர், "அதான் என்னிடம் வந்து விட்டீர்களே..? இனி கவலை ஏன்?" என்று கேட்க, நாயகன் மீண்டும் “ஓ ஓ வென“ அழுதார்.
பின்பு அழுகையை சற்று குறைத்து கொண்டு "டாக்டர் நான் நிம்மதியாக இல்லை. சதா அழுதுகொண்டே இருக்கிறேன். எனக்கு மனசோர்வு வந்து உள்ளது. மிக ஸ்ட்ராங்க் மத்திரைகள் தாங்கள்," என சொன்னார்.
மருத்துவரோ, "உங்களுக்கு ஒரு பிரச்னையும் இல்லை. உங்களுக்கு மாத்திரை தேவை இல்லை. நான் ஒரு சிகிச்சை சொல்கிறேன். அதன் படி நடங்கள். நகரத்தில் சார்லி சாப்ளின் படம் ஓடுகிறது. போய் பாருங்கள். சிரித்து சிரித்து நீங்கள் நலமாகி விடுவீர்கள்," என்றார்.
அவ்வளவுதான் நாயகன் திரும்பி “ஓ ஓ வென” பெரிதாக ஆழ ஆரம்பித்து விட்டார். விக்கி விக்கி, தேம்பி தேம்பி ஆழ ஆரம்பித்து விட்டார்.
டாக்டர் குழம்பி போய், "நான் தான் உங்களுக்கு மனசோர்விலிருந்து விடு பட வழி சொல்லி விட்டேனே..." என்றார்.
நாயகன் சற்று அழுகையை குறைத்து பேசினார்.
"நான் தான் அந்த சாட்சாத் சார்லி சாப்ளின்!"
"??? ??? ???"
சம்பவம் - 02
ஒரு முறை அந்நிய ஊரில் 'சார்லி சாப்ளின் மாறுவேட போட்டி' நடந்தது. ஊர் எங்கும் போஸ்டெர்கள். சார்லி சாப்ளின் வேஷத்தில் பலர். நம் சார்லி சாப்ளினுக்கும் ஒரு ஆசை. இந்த போட்டியில் தாமும் கலந்து கொள்ள விரும்பினார்.
ஒவ்வொருவரும் 3 நிமிடங்கள் சார்லி சாப்ளின் போன்று நடிக்க வேண்டும். வரிசையாக எல்லோரும் நடித்து விட்டு வந்தார்கள். சார்லி சாப்ளின் (ஒரிஜினல்) முறை வந்தது. 3 நிமிடங்கள் நடித்தார். போட்டி முடிந்து விட்டது.
பரிசளிப்பு விழா தொடங்கியது. சார்லி சாப்ளின் (ஒரிஜினல்) குஷி ஆகி விட்டார்.
முதல் பரிசு - சார்லி சாப்ளினுக்கு அல்ல...
இரண்டாம் பரிசு - சார்லி சாப்ளினிக்கு அல்ல...
மூன்றாம் பரிசு - சார்லி சாப்ளினுக்கே (ஒரிஜினல்)
நகலக்கு முதல் மற்றும் இரண்டாம் பரிசு!
அசலுக்கு மூன்றாம் பரிசு!
இது தான் விதி!
இது தான் வாழ்க்கை!
இது தான் உலக நியதி!
இந்த செய்திகள் கற்பனை அல்ல நிஜம்!