முகத்தோற்றத்தில் அல்ல வசீகரம்: முயற்சியில் இருக்கிறது!

Charm is not in appearance: it's in effort!
Motivational articles
Published on

நீங்கள் உங்களைப் பற்றி என்ன நினைக்கின்றீர்களோ அப்படியே அதுவாகவே நீங்கள் ஆகமுடியும். அதிலேதான் வெற்றியை நிச்சயம் வெற்றிகொள்ள முடியும். நிஜமான உங்களை உடலாலோ அல்லது உள்ளத்து அளவிலோ மாற்ற நினைத்தால் உங்கள் சுயசொரூபமும் குணமும் தகுதியும் திறமையும் வெளிச்சத்திற்கு தெரியாமலேயே போகக்கூடும்.

இன்றைக்கு நம்மில் பலர் தங்களது உடல் உறுப்புகள் சிறியதாகவோ அல்லது பெரியதாகவோ வெளித் தோற்றத்திற்கு அழகில்லாது காணப்படுகின்றனவே என சிகிச்சைகள் மூலம் சரி செய்து கொள்வதைப் பார்க்கின்றோம். நிஜத்தை போலியாக்கிக் கொண்டு வாழ்ந்து கொண்டிருகின்றார்கள்.

இந்த வையகத்தில் படைக்கப்பட்ட லட்சோப லட்ச ஜனனங்கள் ஒன்றோடு ஒன்று வித்தியாசமாக இருப்பதுதான் இறைவனின் படைப்பின் இரகசியம். காரணம் ஒவ்வோர் உயிருக்கும் ஒவ்வோர் தனித்தன்மை உண்டு.

முகத்தோற்றத்தில் எத்தகைய வசீகரமும் அழகும் நடிப்பதற்கு தகுதியாக இல்லாத லாரன் ஹார்டி, சார்ளி  சாப்லின் போன்றோர் உலகம் தழுவிய புகழ்க்குச் சொந்தக்காரர்கள்.

வாழ்க்கையில் ஒவ்வொருவரும் அவரவர்களுக்கென்று தனித் தனி பாணியை நடைமுறையில் வகுத்துக்கொண்டு செயலாற்றிட வேண்டும்.

திரைப்படத்துறையை எடுத்துக்கொண்டால் ஒரு நடிகர் மற்றோர் நடிகரைப்போல் நடித்தால் வளராது அவர் பட்டுப் போவதைப் பார்க்கின்றோம்.

இதையும் படியுங்கள்:
இலக்கை அடைய உதவும் ஜப்பானிய ஷோஷின் (Shoshin) டெக்னிக்!
Charm is not in appearance: it's in effort!

ஒவ்வொருவரும் அவரவர்களுக்கென தனி முத்திரை பதித்து நடித்ததாலேயே இன்றைக்கும் நடிப்பிசைப் புலவராக, கலைவாணராக, மக்கள் திலகமாக, சூப்பர் ஸ்டாராக நாம் சுட்டிக் காட்டி நினைவு கூறத்தக்க வகையில் பேசப்படுகிறார்கள். இவர்கள் இவர்களாகவே  வாழ்ந்தவர்கள். வாழ்ந்து கொண்டிருப்பவர்கள்.

நடிப்புக்கு "உனது பல்வரிசை சீராக இல்லை" என ஒதுக்கப்பட்டவர்தான் நடிகர் திலகம்.

நடிப்புக்கு "உன் முகத்தில் உள்ள தழும்பும் தோற்றமும் ஒத்து வாராது" என நேருக்கு நேராக அவமானப்படுத்த பட்டவர்தானே இன்றைய நகைச்சுவை நாயகர்களின் மூத்த நகைச்சுவை மன்னன் நாகேஷ்.

தடித்த பருத்த உடல் மை இருள் விஞ்சும் உடல் நிறம், பெரிய அகன்ற உதடு, நல்ல குரல் வளம் உள்ள பாடகி. இரவுப் பொழுதுகளில் அமெரிக்காவின் நியூ ஜெர்சியின் இரவு விடுதியில் ஆடிப்பாடி மகிழ்விப்பது அவளது தொழில். தனது கவர்ச்சியை தன் பற்கள் கெடுக்கின்றனவே என பாடுகின்றபோது அடிக்கடி தனது உதடுகளால் செயற்கையாகப் பற்களை மூடிக்கொண்டாள். விளைவு இசையில் நயம் தேயத் தொடங்கியது. 

தொழிலில் தொய்வு. திடீரென தன் பற்களைப் பற்றி வெட்கப்படுவதை விட்டெறிந்தாள். நன்றாகப் பற்கள் தெரியும் வண்ணம் வாய் திறந்து பாடத் துவங்கினாள். புகழ் கூடியது அவள்தான் அமெரிக்கப் பெரு நாட்டின் இன்றைய இரவு விடுதிப் பாடகிகளில் முதல் வரிசையில் இருக்கும் கேஸ்டேலி Cass Daley என்ற நீக்ரோப் பெண்.

என்றைக்கு அவள் அவளாக வெளிப்படுத்திக் கொண்டாளோ, அன்றே அவளது தகுதி பாராட்டுப் பெற்றது. தாழ்வு மனப்பான்மையைத் தூக்கி எறிந்து தனது திறமையின் மீது நம்பிக்கை வைத்ததாலேயே அவள் சீராட்டப்பட்டாள்.

ஆகவே முகத்தோற்றத்தில் அல்ல வசீகரம் முயற்சியில் இருக்கிறது என்பதை தெரிந்து அதற்கு ஏற்ப செயலாற்றுங்கள்.

இதையும் படியுங்கள்:
யாரையும் மாற்ற முயற்சிக்காதீர்கள்... அது நம் வேலை இல்லை!
Charm is not in appearance: it's in effort!

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com