வாழ்க்கையை மாற்றிய கான்ஃபியூசியஸ் 10 பொன்மொழிகள்!

வாழ்க்கை, வெற்றி, தைரியம் மற்றும் கல்வி குறித்து கான்ஃபியூசியஸ் கூறிய சிந்திக்க வைக்கும் பொன்மொழிகள்!
Confucius Motivational Quotes
Confucius Motivational QuotesImage credit: AI Image
Updated on

உலகெங்கிலுமுள்ள பல நாடுகளில் வாழ்ந்து மறைந்த, அறிவிலும் குணத்திலும் சிறந்து விளங்கி புகழ் பெற்ற தலைவர்கள் பலர், தங்கள் அனுபவத்தின் அடிப்படையில், சில பொன்மொழிகளை எதிர்கால சந்ததியர்களுக்காக கூறிச் சென்றுள்ளனர்.

நம் நாட்டின் தேசப்பிதா மகாத்மா காந்தி, விஞ்ஞானி அப்துல் கலாம் போன்ற மற்றும் பல தலைவர்கள் சாமானிய மக்களை ஊக்குவிக்கவும், கடின உழைப்பு மற்றும் விடா முயற்சியை வலியுறுத்தவும் பல பொன்மொழிகளை கூறியுள்ளனர்.

சுமார் 2500 ஆண்டுகளுக்கு முன், சிந்தனையாளர், கல்வியாளர், தத்துவஞானி என்றெல்லாம் பெயர் பெற்று சீனாவில் வாழ்ந்து வந்தவர் கான்ஃபியூசியஸ். இவரது பொன் மொழிகள் (Confucius Motivational Quotes) அனைத்தும் ஆழ்ந்த அர்த்தம் பொதிந்ததாகவும், பொதுவாக சிறுவர்களை ஊக்குவித்து வாழ்க்கையில் முன்னேறி சிறப்புற வாழ உதவி புரிவதாகவும் இருக்கும். அவர் கூறிச் சென்ற பொன்மொழிகளில் சிலவற்றை இப்பதிவில் பார்ப்போம்.

1. "It does not matter how slowly you go as long as you do not stop" - வேகம் குறைவென்றாலும், இலக்கை நோக்கி இடைவிடாது, விடாமுயற்சியுடன் தொடர்ந்து நகர்ந்து கொண்டு இருப்பதே வெற்றியின் இரகசியம்.

2. "Our greatest glory is not in never falling but in rising everytime we fall" - வாழ்க்கையில் ஒருபோதும் சறுக்கி விழுந்து விடாமல் நிமிர்ந்து நிற்பதே நிலையான புகழ் தரும் என்று நினைப்பது தவறு. ஒவ்வொரு முறை தவறி விழும்போதும் பழைய, திடமான உத்வேகத்துடன் மீண்டும் எழுந்து நிற்பதே புகழைத் தேடித் தரும்.

3. "Where ever you go, go with all your heart" - நீ எங்கு சென்றாலும், முழு மனதுடன் செல். நீ எதைச் செய்தாலும் அதில் முழு மனதையும் ஈடுபடுத்தி முழுமையாக செய்து முடி.

4. "Education breeds confidence. Confidence breeds hope. Hope breeds peace" - கல்வி, நாம் நம் வாழ்வில் எதையும் செய்து முடிக்க முடியும் என்ற நம்பிக்கை தரும். நம்பிக்கையானது, "நம்மால் முடியும்" என்ற எண்ணத்தை உறுதிப்படுத்தும். உறுதியானது அமைதியான வாழ்வுக்கு வழி வகுக்கும்.

5. "Real knowledge is to know the extent of one's ignorance" - ஒருவன் தனது அறியாமையின் முழு அளவையும் தெரிந்துகொள்ளும்போது, அவன் முழுமையுற்ற அறிவாளியாகிறான்.

இதையும் படியுங்கள்:
உங்களை நீங்களே செதுக்கிக்கொள்ள 5 நிமிடம் போதும் - வெற்றிக்கான ரகசியம் இதுதான்!
Confucius Motivational Quotes

6. "Life is really simple, but we insist on making it complicated" - வாழ்க்கை என்பது உண்மையில் மிக சுலபமாக கையாளக் கூடிய ஒன்று. ஆனால் நாம்தான் அதை சிக்கலாக்கிக் கொள்ள வலியுறுத்திக் கொண்டிருக்கிறோம்.

7. "when anger rises, think of the consequences" - உங்கள் மனதிற்குள் கோபம் கொப்பளிக்கும்போது, அதன் விளைவுகளை முதலில் நினைத்துப் பாருங்கள்.

8. "By talking badly about others, you don't make yourself better" - மற்றவர்களைப் பற்றி அவதூறான கருத்துக்களை பறை சாற்றுவதால் உங்கள் மதிப்பு எந்த விதத்திலும் உயரப்போவதில்லை.

9. "Worry not that no one knows of you; seek to be worth knowing" - உங்களைப் பற்றி ஒருவரும் அறிந்திருக்கவில்லையே என்று வருந்துவதை விட்டு விட்டு, மற்றவர்கள் உங்களை அறிந்துகொள்ள தேவையான செயல்களை செய்யுங்கள்.

10. "Faced with what is right, to leave it undone shows a lack of courage" - ஒரு செயலை எப்படி செய்வது என்ற குழப்பம் வரும்போது அதற்கு தீர்வு காணாமல் விலகிச் சென்றால் அது உங்களுடைய தைரியமின்மையையே காட்டும்.

logo
Kalki Online
kalkionline.com