மனதை சிறப்பாக கையாளப் பழகுவோமா?

Motivational articles
control the mind...
Published on

னதை சரியாகப் புரிந்துகொண்டு சிறப்பாக கையாள்வது என்பது நம் கையில்தான் உள்ளது. மனதை கையாள்வது என்பது நம்முடைய உணர்வுகள், எண்ணங்கள், ஆசைகள் ஆகியவற்றின் மீது கட்டுப்பாடு வைப்பதாகும். இதனால் நம் மனம் அமைதியாகி மன அழுத்தம் குறைந்து எந்த ஒரு செயலையும் செய்வதற்கும், சரியான முடிவுகளை எடுப்பதற்கும், கவனத்தை ஒருமுகப்படுத்துவதற்கும் உதவும். மனதை கையாள்வது என்பது மிகவும் முக்கியமானது.

மனதை எந்தவிதமான சஞ்சலமும் இல்லாமல் கையாளுவதன் மூலம் நம்மால் நாம் நினைத்த இலக்கை அடைவதற்கு உழைக்க முடியும். அதற்கான சரியான சூழலை உருவாக்கிக் கொள்ளவும் முடியும். மனதை நல்லபடி கையாளத் தெரிந்தால் மனக்கவலைகள் நீங்கி செய்ய வேண்டிய செயல்களின் மீது முழு கவனத்தையும் செலுத்துவதற்கும், கவன சிதறல்களை தடுப்பதற்கும் உதவும். இதனால் முழு வேகத்துடனும், உத்வேகத்துடனும் செயலாற்ற முடியும்.

மனதிற்கும் உடலுக்கும் சம்பந்தம் உண்டு. மனதை நல்லபடியாக கையாள்வது நம் உடல் நலத்தில் நேர்மறையான தாக்கத்தை உண்டு பண்ணும். அத்தோடு பிறருடன் நல்ல உறவை பேணுவதற்கும் உதவும். மனதை சிறந்த முறையில் கையாள்வதற்கு தியானம், உடற்பயிற்சி, போதுமான தூக்கம், மனதை ஒருமுகப்படுத்தும் தன்மை, நேர்மறையான சிந்தனை போன்ற வழிகள் உள்ளன. ஆரம்பத்தில் சிறிது கடினமாகத் தோன்றும். ஆனால் தொடர்ந்து பயிற்சி செய்வதன் மூலம் மனதை கையாள்வது என்பது மிகவும் எளிதாக இருக்கும்.

மனம் என்பது எண்ணங்களின் கோர்வை. எல்லா செயல்களுக்கும் நம் எண்ணங்கள் தான் ஆதாரம். எண்ணங்கள் மனதில் தோன்றுபவை. அதனை கட்டுக்குள் வைக்க கற்றுக்கொண்டால் தெளிவு பிறக்கும். அலையும் மனதை ஒருநிலைப்படுத்தினால் மனதை நன்கு அறிய முடியும்.

இதையும் படியுங்கள்:
செயல்பாட்டிலேயே தன்னம்பிக்கையை வளர்க்கலாமே..!
Motivational articles

இதற்கு தியானம் சிறந்த முறையில் உதவும். மனதினுடைய எண்ணங்கள்தான் குணமாக வெளிப்படும். மனதை அலைபாய விடாமல், தடம் மாறாமல் சிறப்பாகக் கையாள பயிற்சி செய்து கொண்டே இருக்க வேண்டும். அப்போதுதான் மனம் நம் வசப்படும். மனம் விரும்புவதை அறிவு கொண்டு பகுப்பாய்வு செய்து மனதை நல்வழிப்படுத்த முயற்சி செய்வது அவசியம்.

மனதை கையாள்வதற்கு மூச்சை ஒருமுகப்படுத்தி, நம் எண்ணங்களை கட்டுப்படுத்தி அதன் மூலம் மனதின் இயல்பை புரிந்து கொண்டு நம் பலம் மற்றும் பலவீனங்களைப் தெரிந்து கொண்டால் வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும்.

இதையும் படியுங்கள்:
சிறந்த பண்புகள் எவை தெரியுமா?
Motivational articles

மனதை அடக்க முடியாது. ஆனால் கட்டுக்குள் வைப்பதன் மூலம் சிறப்பாக கையாள முடியும். யானையை கட்டுப்படுத்த அங்குசம் உதவுவது போல் மனதை கட்டுக்குள் வைக்க அமைதியான மனநிலை வேண்டும்.

மனதை சிறப்புடன் கையாள அது மெள்ள மெள்ள நம் வசப்படும். மனதை கையாள்வது என்பது ஒரு தொடர்ச்சியான செயல்முறையாகும். ஆரம்பத்தில் சிறிது கடினமாகத் தோன்றினாலும் தொடர்ந்து பயிற்சி செய்வதன் மூலம் மனதை கட்டுக்குள் வைக்க முடியும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com