
எதிர்பார்ப்பு என்ற அம்சம் அதிகம் செயல்பட தூண்டும் உந்துகோல். அது கிரிக்கெட் விளையாட்டிற்கும் பொருந்தும் என்று பின் வரும் நிகழ்வுகள் / சாதனைகள் எடுத்துக்காட்டுகின்றன.
மேற்கு இந்திய தீவுகள் அணி 1948 - 49 ல் ஜே டி கோடார்ட் தலைமையில் முதல் முறையாக இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டது.
அந்த குழுவில் இடம் பெற்ற ஈ டி வீக்ஸ் என்ற வீரர் தனிப்பட்ட சாதனை புரிந்தார். இங்கு வருவதற்கு முன்பு இங்கிலாந்து அணிக்கு எதிராக சதம் எடுத்திருந்தார். இந்திய மண்ணில் விளையாடிய மூன்று டெஸ்டுகளில் தொடர்ந்தார்போல் 4 சதங்கள் குவித்தார், வீக்ஸ் விளையாடிய 4 இன்னிங்ஸ்களில்.
அந்த வகையில் அவர் தொடர்ந்தார்போல் டெஸ்டுகளில் 6 வது சதம் எடுக்க நெருங்கிக் கொண்டு இருந்தார். எதிர்பார்ப்பு கூடியது. ஆனால் அவுட் ஆகிவிட்டார் 90 ரன்களுக்கு. அந்த டெஸ்டிலும் சதம் அடித்து இருந்தால் அவர் ஏற்படுத்திய 5 வரிசையான சதங்கள் சாதனை மேலும் வலுப்பெற்று இருக்கும்.
அவரது 5 சதங்கள்
இங்கிலாந்து 141
இந்தியா
டெல்லி 128
பம்பாய் 194
கல்கத்தா 162 , 101
மெட்ராஸ் 90
இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட இங்கிலாந்து அணிக்கு எதிராக அந்த இளம் வீரர் தனது டெஸ்ட் வாழ்க்கையை துவக்கினார்.
அறிமுக டெஸ்டில் இருந்து தொடர்ந்தார்போல் மூன்று டெஸ்டுகளிலும் சதங்கள் எடுத்தார். உலக ரிகார்டு ஏற்படுத்தினார்.
அவர் விளையாடிய 3 வது டெஸ்டிலும் (கான்பூர்) சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி ரன்கள் குவித்துக் கொண்டு இருந்தார், இரண்டாவது இன்னிங்சிலும். எதிர்பார்ப்பு ஏறிக்கொண்டு இருந்த சமயத்தில் எதிர்பார்க்காத நிகழ்வு அவரது வேகம், ரன்கள் குவிப்பு இவற்றிற்கு தடையாக வந்து மேலும் வலுப்பட வேண்டிய ரிகார்டு ஏற்படாமல் போய்விட்டது.
கேப்டன் சுனில் கவாஸ்கர் இந்திய இன்னிங்ஸ் ஆட்டத்தை நிறுத்திக்கொண்டார் டிக்ளர் செய்து. (97 / 1) (ஸ்ரீகாந்த் 41*, அசாரூதின் 54*)
இளம் வீரர் முகமது அசாரூதினால் தொடர்ந்து சாதிக்க முடியவில்லை.
அவரது ரன்கள்,
கல்கத்தா 110
மெட்ராஸ் 105
கான்பூர் 122, 54*
முச்சதம் தனி நபர் எடுப்பது என்பது டெஸ்ட் கிரிக்கெட்டில் அத்தி பூத்தார்போல் எப்பொழுதாவது ஒரு முறைதான் நடைப் பெறும்.
இது வரையில் ஒன்றுக்கு மேல் டெஸ்ட் கிரிக்கெட்டில் மூச்சதம்கள் எடுத்த வீரர்கள் 4 நபர்கள் மட்டுமே.
ஸர் டான் ப்ராட்மன் ( 334, 304)
பிரைன் லாரா (375, 400*)
கிறிஸ் கெயில் (317, 333)
வீரேந்திர ஷேவாக் (309, 319 )
இரண்டு முறை முச்சதம் பதிவு செய்து சாதித்த டான் ப்ராட்மன், வீரேந்திர ஷேவாக் இருவருக்கும் மூன்றாவது முச்சதம் எடுக்கக் கூடிய வாய்ப்பு நெருக்கத்தில் வந்து கை நழுவிப்போயிற்று.
டான் ப்ராட்மன் 299* (நாட் அவுட்) 1932 ல் அடிலேய்ட் மைதானத்தில் தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிராக.
வீரேந்திர ஷேவாக் 293, 2009 ல் மும்பை டெஸ்ட் ஸ்ரீலங்காவிற்கு எதிராக.
வாழ்க்கையைப் போன்று விளையாட்டு மைதானங்களிலும் எதிர்பார்ப்புடன் செயல்பட வேண்டியது மிக்க அவசியம். எதிர்பாராத முடிவுகள் அதில் ஒரு அங்கம் என்ற எண்ணத்தோடு முன்னேறி செல்வது எதார்த்தமான நிகழ்வாகும்.