
முடிவெடுத்தல்
ஒருவர் மனதளவில் முதிர்ச்சி பெற்று இருக்கிறாரா இல்லையா என்பதை அவர் முடிவெடுக்கும் திறனை வைத்துக் கண்டுபிடித்து விடலாம். இவர்கள் மனதளவில் உறுதியோடு இருப்பதோடு தங்களுக்கென்று சில நெறி முறைகளை வகுத்துக்கொண்டு வாழ்வர். அதை யாருக்காகவும் மாற்றிக்கொள்ள மாட்டார்கள். நெருங்கியவர் தவறு செய்தாலும் அதைச் சுட்டிக் காட்டுவர்.
பிறரை மெத்தனமாக எடுத்துக்கொள்ள மாட்டார்கள்
ஒருசிலர் தங்களிடம் ஒருவர் அன்பாக பாசமாக பழகுகிறார் என்றால் அவரை பிற விஷயங்களுக்கும் பயன்படுத்திக் கொள்வர். ஆனால் மனதளவில் முதிர்ச்சி பெற்ற ஒருவர் தங்களுடன் இருப்பவர்களை எந்த விஷயத்திற்காகவும் அதிக அளவில் பயன் படுத்திக்கொள்ள மாட்டார்கள். இவர்கள் கையில் அதிகாரம் கிடைத்தால் கூட அதை சரியான வழியில் பயன்படுத்துவார்களே அன்றி அதை துஷ்ப்ரயோகம் செய்யமாட்டார்கள்.
கொடுத்த வாக்கை காபாற்றுவர்
மனதளவில் முதிர்ச்சி பெற்றவர்கள் யாரிடமாவது ஒரு வாக்கு கொடுத்தார்கள் என்றால் அதை ஒருபோதும் தவறவிட மாட்டார்கள் அவர்களுக்கு விருப்பம் இல்லை என்றால் கூட அதை முடித்துக் கொடுக்க நினைப்பர். நேரத்திற்கு வேலைக்கு வருவதில் இருந்து ஒருவரை சந்திக்கிறேன் என்று கூறினால் அவரை சந்திப்பது வரை அவர்கள் என்ன கூறினாலும் தங்கள் வாக்குக்கும் வார்த்தைக்கும் உண்மையாக இருப்பர்.
தனக்காகவும் பிறருக்காகவும் பேசுவர்
ஓரு சிலர் தன் வேலை நடந்தால் போதும் என்றும் தனக்கு நல்லது நடந்தால் போதும் என்றும் இருப்பர். ஆனால் ஒரு சிலர் மட்டுமே தான் துன்பப்பட்டாலும், தன்னைச் சுற்றி இருப்பவர்களுக்கு என்ன தேவையாக இருக்கிறது என்று பார்ப்பார்கள்.யாருக்காவது அநீதி நேர்ந்தால் அதைத் தட்டிக் கேட்காமல் இருக்க மாட்டார்கள்.
உணர்ச்சி அறிவுடன் இருப்பர்
மனதளவில் முதிர்ச்சி பெற்ற ஒருவருக்கு அறிவும் மிகுதியாக இருக்கும். கோபம், காதல், காமம் என எந்த உணர்வு வந்தாலும் அதை எப்படிக் கையாளவேண்டும் என்பது அவர்களுக்குத் தெரியும். இதனால் அவர்கள் எந்த கடினமான சூழலிலும் பாசிடிவாக இருக்க முடிகிறது. தன்னைச் சுற்றியுள்ளவர்கள் பரபரப்பாக இருந்தால் கூட இவர்கள் ரிலாக்ஸாக இருப்பார்கள்.
பிறரை புரிந்து கொள்ளல்
இன்றைய காலக்கட்டத்தில் பலருக்கு புரிந்துணர்வு இல்லாமலேயே போய்விட்டது. ஆனால் மனமுதிர்ச்சி பெற்றவர்களாக தன்னைப் புரிந்து கொள்வதௌடு தன்னைச் சுற்றியிருப்பவர்களையும். நன்றாக புரிந்து கொண்டு பிறர் தன் முன் ஜெயிக்கும் போது அவர்களை முழுமனதுடன் பாராட்டுவார்கள்.
தன்னை அறிதல்
தன்னை அறிதல் என்பது பலரிடமும் இல்லாத ஒரு திறன் ஆகும். மனதளவில் முதிர்ச்சி பெற்ற வர்கள் தன் மனதை நன்கு அறிந்தவர்களாக இருப்பர். தன்னுடைய பலம் பலவீனம் இரண்டையும் நன்கு அறிந்து எதை வளர்த்துக் கொள்ள வேண்டும். எதை வளர்த்துக் கொள்ளக் கூடாது என்பதை நன்கு அறிவர்.