
வாழ்வில் வளம் பெறவும், செய்யும் தொழில் மற்றும் பணியில் சிறப்புற விளங்கவும் 8 விஷயங்கள் மிகவும் அவசியம். அவை என்ன என்பது பற்றி இந்தப் பதிவில் பார்ப்போம்.
1. குறைவாக பேசுவது;
குறைவாகப்பேசும் திறன் மேம்பட்ட கேட்கும் திறன்களை வளர்க்கும். இது பிறரை ஆழமாக புரிந்துகொள்ளவும் அர்த்தமுள்ள உரையாடல்களை அனுமதிக்கவும் வழி வகுக்கும். தவறான புரிதல்களையும் மற்றும் தேவையில்லாத ஒன்றைச் சொல்லும் வாய்ப்பையும் குறைக்கிறது. மேலும் தேர்ந்தெடுத்த வார்த்தைகளை குறைவாகப் பேசும்போது ஒருவரின் மதிப்பும் மரியாதையும் அதிகரிப்பதோடு மட்டுமல்லாமல் பிறர் மீது அதிக தாக்கத்தையும் ஏற்படுத்தும்.
2. நம்பகத்தன்மை;
எப்போதும் நேர்மையுடனும் நம்பகத் தன்மையுடனும் செயல்படுவோர் பிறரால் மிக எளிதாக ஈர்க்கப் படுவார்கள். இது தனிப்பட்ட மற்றும் தொழில்முறை உறவுகளில் நம்பிக்கையையும் மரியாதையையும் வளர்க்கிறது. இது ஒரு நேர்மறையான நற்பெயரையும் தருகிறது. காலப்போக்கில் அதிகரித்த வாய்ப்புகள் மற்றும் ஒத்துழைப்புகளுக்கு அடித்தளமாக அமைகிறது. மேலும் நல்ல முடிவுகளை எடுப்பதற்கும் பிறர் மதிக்கும்படி செயல்களை செய்வதற்கும் உதவுகிறது.
3. பிறர் மதிப்பை சம்பாதிப்பது;
பிறருடைய மதிப்பை சம்பாதிப்பது எப்போதும் ஒருவருடைய செல்வாக்கை மேம்படுத்துகிறது. தனிப்பட்ட மற்றும் தொழில்முறை சூழல்களில் வலுவான உறவுகள் மற்றும் மேம்பட்ட விளைவுகளுக்கு வழி வகுக்கிறது. இது தொடர்ச்சியான கற்றலுக்கு உட்படுத்துவதோடு மட்டுமல்லாமல் பிறரோடு இணக்கமாக செயல்படுவதையும் குறிக்கிறது. ஒருவர் தன்னுடைய தனிப்பட்ட மற்றும் பொது வாழ்க்கையில் சிறந்து விளங்குவதற்கான செல்வாக்கை உருவாக்குகிறது. மேலும் புதிய வாய்ப்புகள் மற்றும் இணைப்புகளை ஈர்க்கிறது.
4. கவனமாகக் கேட்பது;
பிறர் பேசும்போது முழுக் கவனத்தையும் செலுத்திக் கேட்கும்போது பிறருடைய முன்னோக்குகளையும் எண்ணங்களையும் புரிந்துகொள்ள உதவுகிறது. தெளிவான தகவல் தொடர்புகளை வளர்க்கிறது. பொறுமையாக காது கொடுத்து பிறர் பேசுவதைக் கேட்கும்போது மதிப்பு மிக்க சிந்தனையோடு கூடிய பதில்களைத் தர உதவுகிறது. எதிர் வினைக்கு பதிலாக பிரதிபலிப்பை ஊக்குவிக்கிறது. பிறருடைய வார்த்தைகளை கவனமாக ஊன்றிக் கேட்பதன் மூலம் உறவுகளை நன்றாக வலுப்படுத்த முடியும்.
5. பச்சாதாபத்தை வளர்ப்பது;
பிறர் மீது அனுதாபத்தையும் பச்சாதாபத்தையும் வளர்த்துக் கொள்வது இரக்கத்திற்கும் ஆதரவிற்கும் ஒரு அடித்தளத்தை உருவாக்குகிறது. பிறரை அவருடைய நிலையிலிருந்து புரிந்து கொள்ளும் போது மோதல்கள், சிக்கல்கள் குறைகிறது. இணக்கமான சூழலையும் உறவு முறைகளையும் ஊக்குவிக்கிறது.
6. சரியாக இருப்பதைவிட அன்பாக இருத்தல்;
தன் கருத்தை நிரூபிக்க வேண்டியதன் அவசியத்தை விட பிறருடைய நல்வாழ்வுக்கு முன்னுரிமை அளிக்கும் விதமாக அவர் மீது கருணையுடன் அன்பாக நடந்து கொள்ள வேண்டும். இது ஆதரவான மற்றும் கூட்டுச் சூழலை வளர்க்கிறது. இந்த அணுகுமுறை நன்கு புரிதலையும் ஆக்கபூர்வமான விளைவுகளுக்கும் வழிவகுக்கும்.
உறவுகள் மேம்பாடு, நட்பு மேலாண்மை, இணக்கமான சூழ்நிலை, மதிப்பு, மரியாதை மற்றும் ஒத்துழைப்பு மிகுந்த கலாச்சாரத்தை உருவாக்க முடியும்.
7. அனைவரையும் மரியாதையுடன் நடத்துவது;
பிறர் என்ன நிலையில் இருந்தாலும் அவர் என்ன பணி செய்தாலும் அவர்களை மரியாதையுடன் நடத்தும் பண்பு நேர்மறையான சூழலை வளர்க்கிறது. பரஸ்பர நம்பிக்கையை ஊக்குவிக்கிறது. அவர்கள் ஒத்துழைப்புத் தந்து மிகவும் இணக்கமாக நடந்து கொள்வார்கள். தனி நபர்களின் மதிப்பு மற்றும் பங்களிப்புகளை மேம்படுத்துகிறது. இதனால் தனிப்பட்ட மற்றும் தொழில் ரீதியான நீண்டகால உறவுகளுக்கான சிறப்பான அடித்தளத்தை உருவாக்க முடியும்.
8. கடினமான உரையாடல்களை எதிர்கொள்தல்;
தனிப்பட்ட வளர்ச்சி மற்றும் உறவு வளர்ச்சிக்கு இது மிகவும் முக்கியம். கடினமான உரையாடல்கள் தீர்க்கப்படாத சிக்கல்களைத் தீர்க்கின்றன. தவறான புரிதல்களைத் தடுக்கின்றன. நேர்மை மற்றும் பச்சாதாபத்துடன் இந்த விவாதங்களை அணுகுவது ஆக்கப்பூர்வமான விளைவுகளுக்கும் ஆழமான தொடர்புகளுக்கும் வழி வகுக்கும்.