மனதை வலிமையாக்கும் ஆயுதம் எது தெரியுமா?

Do you know what weapon makes the mind stronger?
Motivational articles
கே.எஸ்.கிருஷ்ணவேனி

Iam a graduate from Vaishnav College in the year 1984. My writings were published in Mangayar Malar,Aval Vikadan,Kumudham Sneghethi since 1992 and received many prizes. Now I am writing in Kalki Publications. Cooking, writing, playing Shuttle cock & making fur dolls are my passions.

Updated on: 

உழைப்பு உடலை வலிமையாக்குவதுபோல் துன்பங்கள்தான் நம் மனதை வலிமையாக்கும். தூக்கி எறியப்படும் தருணங்களில்தான் சிறகை விரிக்க வாய்ப்பு கிடைக்கிறது. எவ்வளவு துன்பங்கள் வந்தாலும் பரவாயில்லை உயர்ந்த இலக்குகளை குறி வையுங்கள். எங்கு நாம் அதிகம் காயப்படுகிறோமோ அங்கிருந்துதான் நாம் அதிகம் கற்றுக் கொள்கிறோம்.

நமக்கு துன்பம் நேருகின்ற போதுதான் வாழ்வில் நிறைய கற்றுக்கொள்ள முடிகிறது. துன்பங்களைக் கண்டு துவண்டு விடாமல் இருக்கவேண்டும். முட்கள் உள்ள வேலிதான் உறுதியாக இருக்கும். சோதனைகள்தான் நம்மை சாதிக்கதூண்டும்.

துன்பங்களைக் கண்டு துவண்டுவிடாமல் நம்பிக்கையுடன் போராடவேண்டும். சில நேரங்களில் நாம் தொடர்ந்து துன்பங்களை சந்திக்க வேண்டி வரும். அப்போது மனதை மட்டும் தளரவிடாமல் இதுவும் கடந்துபோகும் என எண்ணி உறுதியுடன் செயல்பட வேண்டும். சுமக்கும் வரைதான் துன்பம்.

எனவே துன்பத்தை சுமக்காமல், மனதில் பாரமாக ஏற்றாமல் கடந்து விடுவது நல்லது. இதயத்தில் துன்பத்தின் வலிகளை சுமக்காமல்  எதிர்கொள்ள கற்றுக்கொள்வதும், எதிர்த்து போராடுவதும்தான் அதனைக் கடக்க சிறந்த வழி. எத்தனை வலிகளும், கவலைகளும் இருந்தாலும் சோர்ந்து விடாமல் தொடர்ந்து போராடி முன்னேறி லட்சியத்தை அடைய பாடுபடவேண்டும்.

இதையும் படியுங்கள்:
வெற்றி மேல வெற்றி வந்து உன்னைச் சேரும்... எப்போது?
Do you know what weapon makes the mind stronger?

மனதை மகிழ்ச்சியாக வைத்துக்கொள்ளுங்கள் நம்மைச் சுற்றியுள்ளவர்களையும் மகிழ்வுடன் வைத்துக் கொள்ளுங்கள். துன்பங்கள் நீங்கினால் தான் மகிழ்ச்சியுடன் இருக்க முடியும் என்று எண்ணுவது தவறு. நீரோடைக்கும் பாறைக்கும் இடையே நடக்கும் இடைவிடாத போராட்டத்தில் நீரோடையே இடைவிடாது போராடி பாறைக்கு நடுவில் சீரான பாதையை அமைத்துக் கொண்டு பாய்ந்து செல்கிறது. அதுபோல் வாழ்வில் ஏற்படும் துன்பத்தைக்கண்டு துவளாமல் எடுக்கும் தொடர் முயற்சிகள் மூலம் வாழ்வில் ஏற்படும் இடையூறுகளையும் துன்பங்களையும் தகர்த்து முன்னேறி சென்று விடலாம். துன்பங்களே மனதை வலிமையாக்கும்.

துன்பங்களைக் கண்டு கண்ணீர் சிந்துவதை விட வாழ்வில் இதெல்லாம் சகஜமப்பா என்றெண்ணி நம் மீது நம்பிக்கை வைத்து வீரநடை போட வேண்டியதுதான். துன்பங்கள் நம்மை மகிழ்ச்சியாகவும், வலிமையாகவும் மாற்றும். நமக்கு ஏற்படும் தோல்விகளும், துன்பங்களும்தான் எங்கு, என்ன தவறு நடந்தது என்பதை ஆராய்ந்து கற்றுக்கொள்ள உதவும்.

அத்துடன் அடுத்த முறை அதனை சிறப்பாக செய்ய தூண்டுகோலாக அமையும்.  இதுவே நம் உள் மன வலிமையை வளர்த்துக் கொள்ளவும் பெரிதும் உதவும். துன்பங்கள் நேரும்பொழுது இதுவும் கடந்துபோகும் என்று தீர்மானமாக எண்ணவேண்டும். துன்பங்கள் மனிதனை வலிமையாக்கி, நெருக்கடியான சமயங்களில் அதனை திறம்பட கையாளும் நம்பிக்கையைத்தரும்.

இதையும் படியுங்கள்:
போலி வாழ்க்கை நமக்கு வேண்டாம்!
Do you know what weapon makes the mind stronger?

துன்பத்தை எல்லோரும் ஒரே மாதிரியாக கையாள மாட்டார்கள். சிலர் துன்பம் நேரும்பொழுது மனம் உடைந்து போவார்கள். இதிலிருந்து எப்படி மீள்வது என்று தெரியாமல் தவிப்பார்கள். ஆனால் வேறு சிலரோ தங்களை வலுவாகவும், கடினமாகவும், துன்பத்தை எதிர்த்து நிற்கும் தகுதி உடையவர்களாகவும் ஆக்கிக்கொள்வார்கள்.

உண்மையில்  இன்னல்கள் ஏற்படும்போது நம்மை பலப்படுத்திக்கொள்ள வேண்டுமே தவிர பலவீனமாகக் கூடாது. எதிர்ப்படும்  இடர்களை எப்படி கையாள்வது என்பதை அனுபவம் மூலம் அறிந்துகொண்டு, சூழ்நிலைகளை எதிர்கொள்ளும் ஆற்றலை பெற்று ஒரு வலிமையான நபராக உருவாகவேண்டும்.

துன்பம் நம்மை பலப்படுத்துகிறது. வலிமையாக்குகிறது.

logo
Kalki Online
kalkionline.com