
வாழ்க்கையில் நாம் பழகும் அனைவரிடமும் நல்ல பெயர் எடுப்பது என்பது இயலாத காாியம். வரும், ஆனால் வராது, என்பது போல நமது பழக்கவழக்கங்கள், நாம் பேசுகிற பேச்சுகள், சிலருக்கு பிடிக்கும் சிலருக்குப் பிடிக்காது.
நமக்கு சரியெனப்படுகிற சில விஷயங்களை நாம் வலியுறுத்தி சொல்கிறபோது, அது பலரது மனதை பாதிக்கவும் செய்யலாம்.
யாாிடம் பேசினாலும் நமக்கு தோன்றியது, நமக்கு சரியெனப்பட்டதை சொல்லும்போது நம்முடைய கருத்துதான் சிறந்தது என வாதம் செய்யவேண்டாம். பொதுவாக கணவன் மனைவிக்குள் கருத்து வேறுபாடுகள் வந்தால் நான்கு அறைக்குள் பேசித்தீா்த்துக்கொள்ள வேண்டிய விஷயத்தை பொிதாக்கி அடுத்தவர் தலையிடும் நிலைக்கு கொண்டு செல்லக்கூடாது.
அதுசமயம் ஒரு குரல் ஓங்கும்போது, ஒரு குரல் கொஞ்சம் தணிந்தாலே போதுமே.
அதேபோல மனம்விட்டு பேசினாலே மனமாச்சர்யம் குறையலாமே.
அதை கணவன் மனைவி இருவரும் செய்யத் தவறிவிடுவதால் பிராபளம் பூதாகரமாகிவிடுகிறதே! ஆகவே மாமியாா் மருமகள் இருவருக்குள்ளும் வரும் கருத்து யுத்தம், அதையும் ஒருவருக்கு ஒருவர் பரஸ்பரம் விட்டுக்கொடுத்து சரியான புாிதலோடு நடந்து கொள்வதே குடும்பத்திற்கு அழகு.
அந்த நிலையிலும் மூன்றாம் நபர் தலையீடு வராமல் பாா்த்துக் கொள்வது சிறப்பானதே! நமக்கு தொியாத ஒரு கருத்தை வேறு ஒருவர் சொல்லும்போது சரியெனப்பட்டால் ஏற்றுக்கொள்ள வேண்டும். அங்கே பாழாய்ப்போன நமது ஈகோ குறுக்கே வரவேகூடாது. யாாிடம் பேசினாலாலும் எல்லாம் எனக்குத்தான் தொியும் என்ற மனோபாவத்தோடு அகங்காரம் கொள்ளாமல் இயல்பாய் சொல்ல வந்ததை சொல்லவேண்டும் அது மிக மிக உயர்வானது.
அடுத்தவர் குடும்ப விஷயங்களில், குறிப்பாக அண்ணன் தம்பி விவகாரங்களில் நாம் ஒரு தலைப்பட்டசமாக பேசிவிடக்கூடாது.
நாளை ஒரு காலகட்டத்தில் அவர்கள் கருத்தொருமித்து ஒற்றுமையாய் போய்விட்டால் தேவையில்லாமல் நம்மீது விழும் பழியை துடைக்கவே முடியாதே!
எந்த நிலையிலும் யாாிடமும் அதிகார தோரணையில், ஒருமையில் பேசுவதை தவிா்ப்பதே நல்லது. அந்த நேரம் தேவையில்லாமல் நம்மைவிட சிறியவர்கள் நம்மை ஒருமையில் பேசிவிட்டால் நமது கெளரவம் பாதிக்கப்படலாமே அதை மனதில் வைத்து பழகுவதே சாலச்சிறந்தது.
ஒருவருக்கு பிடித்த செயலை செய்யும்போதோ அல்லது ஒரு பொருளை வாங்கும்போதே நமக்கு அது பிடிக்காமல் போகலாம், அந்த நிலையில் நாம் எந்த கருத்தும் சொல்லக்கூடாது. இதனில் இன்றைய இளைய தலைமுறை, புதியதாய் திருமணம் செய்து கொண்ட கணவன், மனைவியரிடையே, புாிதல் இல்லாத சண்டை வந்தால், பிாிந்து வாழ்ந்தால் நாம் தேவையில்லாமல் அவர்கள் விஷயத்தில் தலையிடவே கூடாது. அப்போது நாம் இரண்டுபக்கமும் பேசமுடியா சூழல் வரும்.
அதனால் ஒரு தரப்பினா் நம்மீது வருத்தத்தில் இருப்பது சகஜம். காலப்போக்கில் அவர்கள் இருவரும் பேசி ஒன்றாய் வாழும் நிலை ஏற்பட்டால் நமக்கு சொல்லவேமாட்டாா்கள். அதுதான் அவர்களுக்கு தொிந்த நாகரீகம். ஆக, எங்கும் எதிலும் நாம் அடக்கி வாசிப்பதே எல்லா வகையிலும் சாத்தியமானது. ஆக பொதுவாக எங்கும் எதிலும் நிதானம் காத்து விவேகம் கடைபிடித்து நமது வேலையை நாம் பாா்த்து வருவதே நல்லது அதனால் எந்த தொல்லையும் வரவே வராது. முக்கியமான விஷயம் நமது கருத்துகளுக்கு மதிப்பு கொடுக்கும் இடங்களில் பழகலாம் அது தவறே அல்ல!