

நாம எல்லாருமே வாழ்க்கையில அதிகமா பணம் சம்பாதிக்கணும், பணக்காரனா ஆகணும்னுதான் ஆசைப்படுறோம். ஆனா, நம்மல முக்காசிப் பேர் ஒரு காலேஜ் டிகிரி வாங்கிட்டு, மாசச் சம்பள வேலைக்குப் போயிட்டு இருக்கோம். நம்மகிட்ட இருக்கிற கடனை அடைக்க முடியாம, வீட்டுச் செலவு நாளுக்கு நாள் அதிகமாகிக்கிட்டே போகுது.
ஆனா, ஜெஃப் பெசோஸ், எலான் மஸ்க் மாதிரி ஆட்கள் மட்டும் எப்படி அவ்வளவு சின்ன வயசுலேயே கோடிக்கணக்குல சம்பாதிக்கிறாங்க? அவங்க அதிர்ஷ்டசாலிகளா? இல்ல, நம்மள ஏமாத்தி சம்பாதிக்கிறாங்களா? உண்மை என்னன்னா, பணத்தைப் பத்தி நமக்குச் சொல்லிக் கொடுக்கப்பட்ட பல விஷயங்கள் தப்பு.
நம்மகிட்ட என்ன சொல்லியிருக்காங்க? "நல்லா படி, நல்ல வேலைக்குப் போ, பணம் சம்பாதிக்கலாம்." ஆனா, உண்மை என்னன்னா, நீங்க மாசச் சம்பள வேலை பார்த்துக்கிட்டு இருந்தா, உங்களால ஒரு நாளும் பணக்காரர் ஆகவே முடியாது. ஒரு கணக்கு போட்டுப் பார்ப்போம். நீங்க மாசம் ₹25,000 சம்பாதிக்கிறீங்கன்னு வச்சுப்போம்.
நீங்க ஒரு கோடி ரூபாய் சம்பாதிக்க, சுமார் 33 வருஷம் ஆகும். இதுல செலவு, டாக்ஸ், பணவீக்கம் எதையுமே நான் இன்னும் கணக்குல சேர்க்கல. இதையெல்லாம் சேர்த்தா, நீங்க சாகுற வரைக்கும் வேலை செஞ்சா கூட ஒரு கோடி ரூபாயை பார்க்க முடியுமானு தெரியல. இதுல விலைமதிப்பு இல்லாத உங்க "நேரம்" மொத்தமும் வீணாகுறதுதான் மிச்சம்.
பணக்காரங்ககிட்ட இருக்கிற, ஆனா நம்மகிட்ட இல்லாத ஒரு ரகசியம் இருக்கு. அவங்களுக்குப் பணம் எப்படிச் செயல்படும்னு தெரியும். ரூல் ரொம்ப சிம்பிள்: பணத்துக்காக ஓடாதீங்க, பிரச்சனைக்குத் தீர்வு காண ஓடுங்க.
இந்த உலகத்துல இருக்கிற மொத்த பணமும், பிரச்சனைகளைத் தீர்க்கிறது மூலமாதான் உருவாகுது. நீங்க தீர்க்கிற பிரச்சனையோட மதிப்பு ₹10-னா, உங்களுக்கு ₹10 கிடைக்கும். அதுவே 1000 கோடின்னா, உங்களுக்கு 1000 கோடி கிடைக்கும். ஜெஃப் பெசோஸ் ஏன் பணக்காரர்? ஏன்னா, அவர் அமேசான் மூலமா, கடைக்கு அலைய வேண்டாம், வீட்ல இருந்தே பொருளை வாங்கலாம், பிடிக்கலனா திருப்பி அனுப்பலாம்னு நம்மளோட பல பிரச்சனைகளுக்குத் தீர்வு கொடுத்தாரு. அதனாலதான் அவருக்கு ஆயிரம் கோடிகள் கிடைச்சது.
"எனக்கு கோடிங் தெரியாது, என்கிட்ட காசு இல்லை"ன்னு சொல்றதை நிறுத்துங்க. உங்களைச் சுத்திப் பாருங்க. மக்கள் எதைப்பத்தி புகார் சொல்றாங்க? அவங்களுக்கு என்ன கஷ்டம் இருக்குன்னு பாருங்க. அதுக்கு ஒரு தீர்வைக் கண்டுபிடிங்க. அதை ஒரு பிசினஸா மாத்துங்க.
உதாரணத்துக்கு, Cஒரு ஜிம் டிரெய்னர்னு வச்சுப்போம். ஒரு நாளைக்கு சில பேருக்கு மட்டும் பயிற்சி கொடுத்து ₹1000 சம்பாதிக்கலாம். இது மறுபடியும் ஒரு மாசச் சம்பள வேலை மாதிரிதான். ஆனா, அதுவே நீங்க உங்க பயிற்சியை ஒரு வீடியோ கோர்ஸா ரெக்கார்ட் பண்ணி, உங்க வெப்சைட்ல போட்டா, அது 24 மணி நேரமும் உங்களுக்காக வேலை செய்யும். நீங்க தூங்கிட்டு இருக்கும்போது கூட, யாரோ ஒருத்தர் அந்த கோர்ஸை வாங்கிப் பார்ப்பாங்க, உங்களுக்குப் பணம் வரும். இதுதான் உங்க நேரத்தை பணமா மாத்துற புத்திசாலித்தனம்.
பணக்காரர் ஆகுறது அதிர்ஷ்டம் இல்லை. அது ஒரு ஃபார்முலா. மார்க்கெட்ல இருக்கிற பிரச்சனைக்குத் தீர்வு கண்டுபிடிங்க. அந்தத் தீர்வை முடிஞ்ச அளவுக்கு அதிக மக்களுக்குக் கொண்டு போய் சேருங்க. பணம் தானா உங்களைத் தேடி வரும். இது கஷ்டமான பாதைதான், நிறைய தோல்விகள் வரும். ஆனா, இந்த வழியில போனாதான், பணத்தைப் பத்தியே கவலைப்படத் தேவையில்லாத ஒரு வாழ்க்கையை நம்மால வாழ முடியும்.