உங்கள் வலிமையான ஆற்றலைத் தேக்கி வைக்காதீர்கள்!

Don't hold back your powerful energy!
Lifestyle stories
Published on

னிதன் தங்கள் ஆற்றலை வெளிச்சூழலுக்கோ, உள்நிலை வளர்ச்சிக்கோ பயன்படுத்தும்போது மிக முக்கியமான வேறுபாட்டை விழப்புணர்வோடு கண்டுணர வேண்டும். தேக்கம் என்பது ஒருவிதமான நேரம். மனிதன்தான் செய்யும் செயல்களில் விழிப்புணர்வு இல்லையெனில் தேங்கிவிடுகிறான். அசைவற்ற நிலை தேக்கம். அசைவுகள் கடந்த நிலை, நிலைத்த தன்மை.

ஒரு படகு ஓட்டுகிறீர்கள், உங்கள் முழு சக்தியையும் பயன்படுத்தி துடுப்பு ஒலித்துக்கொண்டு போகிறீர்கள்.  ஒரு எல்லைக்குள் பிறகு உங்கள் முயற்சியின் உச்சியில் துடுப்பு வலிப்பதை நிறுத்தும்போது படகு நகர்கிறது. ஆனால் ஒருவித நிலைத்ததன்மை ஏற்படுகிறது. மனிதன் தன் உச்சக்கட்ட எல்லை வரை போராடும்போது அந்த போராட்டத்தின் உச்சியில் பூ பூக்கிறது.

போதி மரத்துக்கும் கீழ் புத்தர் உட்கார்ந்தபோது ஒரு உறுதி செய்கிறார். "இந்த இடத்தை விட்டு எழும்போது நான் ஞானமடைந்தவனாக எழுந்து போக வேண்டும், இல்லையேல் இங்கேயே இறந்து போகவேண்டும். ஞானம். பெறாமல் இந்த இடத்தைவிட்டு எழக் கூடாது’’.

"ஏறக்குறைய எட்டு ஆண்டுகள் அவர் மேற்கொண்ட இடைவிடா முயற்சியின் உச்சக்கட்டம். அவருக்கு ஞானம் சித்தித்தது. ஆனால் சிலர் தேக்கி இருக்கும் நிலையை நிலைத்த தன்மையாக எண்ணிக் கொள்கிறார்கள். நிலைத்த தன்மை முழுமையான முயற்சியின் விளைவுதானே தவிர குறுகிய எல்லைக்கோடோடு  ஒடுங்கி விடுவதால் ஏற்படுவதில்லை.

இதையும் படியுங்கள்:
பயனுள்ள வாழ்க்கையை வாழ கல்வியைத் தேடுங்கள்!
Don't hold back your powerful energy!

ஒரு மனிதன் தேக்கிவிடக் கூடாது என்றால் தன்னுடைய இலக்கை அவன் நிர்ணயித்துக்கொள்ள வேண்டும். இலக்கு தெளிவாகவும், அதற்கான முயற்சியில் முழுமை இருந்தால் எந்த இலக்கும் மனித சக்திக்கு அப்பாற்பட்டது இல்லை. இலச்சியங்களை நோக்கி நகராமல் தேங்குவதற்கு இன்னொரு காரணமும் உண்டு.

தனது நிகழ்கால நிலைமையை மனதில் கொண்டு  எதிர்காலமும் இப்படித்தான் என்ற கற்பனையானதொரு முடிவுக்கு வந்து விடுகிறான். நீங்கள் கொண்டிருக்கிற இலட்சியம் சாத்தியமா, சாத்தியமில்லையா, நடக்குமா, நடக்காதா என்றெல்லாம் நிகழ்காலத்தை மனதில் கொண்டு தீர்மானிக்காதீர்கள்.

நிகழ்கால தராசுக்கு எதிர்காலத்தை எடை போடும் திறமையில்லை.  ஒருவன் தன் இலட்சியத்தில் எந்த சலனமின்றி முழு கவனத்துடன் ஈடுபட்டால்  அதை அடையமுடியும்.

சாக்ரடீஸ் ஒரு மாபெரும் தத்துவ நிபுணர்.  அவருக்கு மரணதண்டனை நிறைவேற்றப்படுவதற்கு சிலநாட்கள் முன்பு இசை கற்றுக்கொள்ள வேண்டும் என்ற எண்ணம் ஏற்பட்டது. மரணம் தன்னை நெருங்குவது பற்றிக் கவலைப்படாமல் ஆர்வத்துடன் இசை பயின்றார். குறுகிய காலத்திலேயே மிகவும் தேர்ந்த  இசைக் கலைஞராகி மற்றவர்கள் வியக்கும் அளவுக்கு இசையை வெளிப்படுத்தினார். தன் ஆற்றலில் அவர் நிலைத்திருந்ததால் அந்த குறுகிய கால அவகாசத்தில் கூட இசைக் கலைஞராக என்ற இலட்சியத்தை எட்ட முடிந்தது.

தனது ஆற்றலை மனிதன் உணரத் தொடங்கும்வரை இலக்குகளை மனிதன் நிர்ணயித்துக் கொள்ளத் தயங்குவான். மற்றவர்கள் மீது காழ்ப்புணர்வில் மனிதன் தேங்கிப் போய்விடுகிறார். 

இதையும் படியுங்கள்:
அறிவுரைகள் எல்லா நேரத்திற்கும் பொருந்துவதில்லை!
Don't hold back your powerful energy!

ஆனால் தன்னில் இருக்கும் ஆற்றலை உணர்ந்து, நகர்ந்து நகர்ந்து நிலைத்த நன்மையை அடைகிறான்.  2500 ஆண்டுகளுக்கு முன்னால் புத்தர் "எனது காலத்திற்குப் பின்னும் 2500 ஆண்டுகள் முடிந்து, இந்த தர்ம சக்கரம் ஒரு முழு சுழற்சியை கண்டிருக்கும். அப்போது ஒரு புதிய சுழற்சியை மனிதகுலம் மறுபடி தொடங்கும்" என்றார். 

எனவே உங்களுக்குள் இருக்கும் ஆற்றலை தேக்க விடாமல் உயிர்ப்புடன் நகர்த்தி நிலைத்த தன்மையில் கொண்டு செல்லுங்கள். இலக்கை அடைவது எளிதாகும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com