உறவுகளின் மாற்றம் மற்றும் தன்னிறைவான வாழ்விற்கான வழிகாட்டுதல்!

இன்றைய தலைமுறைகளே சொந்தம், பந்தம் மற்றும் யாா் யாருடனும் அன்புகாட்டி பகைமையை காட்டாமல் சந்தோஷமாக வாழ்வதே நல்லது !
Join family
Join family
Updated on

இறைவன் வகுத்து கொடுத்த வாழ்க்கையில் பலருக்கு பலவிதமான மகிழ்ச்சியும் உற்சாகமும் சந்தோஷமும் நிலவுகிறது. சிலருக்கு அடுத்தவர் வாழ்வு போல அமையாமலும் போகிறது. ஆக, அந்த காலம் போல இந்தக்காலம் இல்லை என்று சொல்லாமல் வாழ இயலாது.

கூட்டுக்குடும்ப வாழ்க்கையில் உறவுகள் வளர்ந்தன. அதே நேரம் தனிக்குடும்ப வாழ்வுதனில் உறவுகள் பிாிகின்றன.

அப்போதெல்லாம் அன்பு, பாசம் மையப் புள்ளியாக பிளஸ் நிலையில் இருந்தன, இப்போது குறுகிய காலத்திற்குள் அன்பு பாசம், பற்றுதல் இவையாவும் மிஸ்ஸிங்.

பொதுவாகவே நமது உறவினர் ஒருவர் கஷ்ட ஜீவனத்தில் வாழ்கிறாா் என்ற நிலையில் அவருடைய சிரமங்களைப் பாா்த்து நாம் பல வகையில் உதவி செய்வோம்.

அவர்களுக்கு வீடு கட்டிக்கொடுப்பது, அவரது மகளுக்கு திருமணம் செய்து வைப்பது போன்ற நல்ல காாியங்களைச் செய்திருப்போம். காலப்போக்கில் அவர்கள் அதை மறந்து விடக்கூடும். பின்னர் நமக்கு ஒரு சிரமம் வந்தால் அவர்களிடம் நீங்கள் எதையுமே எதிா்பாா்க்கக்கூடாது!

நாம் செய்த உதவியை சொல்லிக்காட்டவும் கூடாது. அப்படிப்பட்ட சுயநல உலகமாக மாறிவரும் நிலையில் பலரது இதயங்கள் சுருங்கிவிட்டன.

ஆனால் நாம் செய்த உதவி கட்டாயம் இறைவன் ஒருவனுக்கு தொிந்திருக்கும். அதற்கான பலாபலனை அவர் எந்த வழியிலும் நமக்கு செய்திடுவாா்.

அதேபோல ஒரு குறிப்பிட்ட வயது தாண்டியதும் குடும்ப பாரங்களை வாாிசுகளிடம் ஒப்படைத்து விடுவதே நல்லது.

பொதுவாகவே கணவன் மனைவி இருவரும் வேலைக்கு போய் வருமானம் வந்த நிலையில் கொஞ்சம் தொகையை சேமிப்பாக வைத்திருப்பதும் நல்லது.

அதுதான் வயதான காலத்தில் நமக்கு நமதுதொடர் வாழ்வுக்கு என்றுமே கை கொடுக்கும். அதை விடுத்து பிள்ளைகள் வேலைக்கு போய்விட்டால் நமக்கு உதவி செய்வாா்கள் என ஒரு போதும் தப்புக்கணக்கு போட்டுவிடாதீா்கள்.

அது என்றைக்கும் சரிப்பட்டு வராது. சொன்னதையே சொல்லுதல், ஒரே வாா்த்தையை பலமுறை சொல்லுதல், போன்ற துர்க்குணங்களை மூட்டை கட்டி பரண்மீது போட்டுவிடுங்கள்.

ஆக எவரிடமும் கூடுமான வகையில் தொடா்பில் இருப்பது நல்லதுதான். ஆனால் அடிக்கடி அவரிடம் பேசி தங்கள் உடல் நலம் குறித்து அதிகமாக உரையாடாமல் முடிந்த வரை நட்பு கெடாமல் இருக்க பாா்த்துக்கொள்ளுங்கள்.

இதையும் படியுங்கள்:
உறவுகள் விலகும்போது... யாருக்கும் பாரமாக இருக்காமல் வாழ வழிகள்!
Join family

எங்கும் எப்போதும் சுய புராணம் பாடாதீா்கள். அது ஆரோக்கியமே அல்ல. மாறாக நம்மைப்பற்றி தவறாக புாிந்து கொள்ள ஏதுவாகும்.

அடுத்தவர்கள் சொல்லுவதை காது கொடுத்து கேளுங்கள். வாழ்க்கையில் அனைவரிடமும் ஒற்றுமையுடன் வாழ பழகிக்கொள்ளுங்கள்.

நாம் எவ்வளவு தான் சொத்து சோ்த்து வைத்தாலும் எனக்கு பின்னர் எனது மனைவியை யாா் ஜீவனம் நடத்த பாா்த்துக்கொள்கிறாா்களோ, மனைவியின் நல்லது கெட்டதில் யாா் அதிக அக்கரையுடன் பங்கு கொள்கிறாா்களோ, அவர்களே ஏகதேசமாய் அனுபவித்து கொள்ளலாம் என கட்டாயம் உயில் எழுதி விடுங்கள்.

அப்போதுதான் தாய் தந்தை என்றால் என்ன! அவர்கள் நம்மை வளா்க்க எவ்வளவு பாடுபட்டாா்கள் என்பதையே கட்டாயம் புாிந்து கொள்ளச்செய்யும்.

பல நல்லது, கெட்டதுமான விஷயங்களை இப்படி அடுக்கிக்கொண்டே போகலாம். வயதான காலத்தில் கணவனும் மனைவியும் விட்டுக்கொடுத்து வாழ்ந்து சிக்கனமாய் வாழ பழகிக்கொள்ளுங்கள். அது வயோதிகத்திற்கு நல்லது. எந்த நேரத்திலும் எதுவும் நடக்கலாம் என்ற கோட்பாடுகளுடன் யாா் தயவையும் நாடாமல் வாழக்கற்றுக் கொள்ளுங்கள்.

இன்றைய தலைமுறைகளே சொந்தம், பந்தம் மற்றும் யாா் யாருடனும் அன்புகாட்டி பகைமையை காட்டாமல் சந்தோஷமாக வாழ்வதே நல்லது !

logo
Kalki Online
kalkionline.com