20 வருஷம் கழிச்சு உங்க வேலை இருக்குமா? இப்பவே இந்த 'அஸ்திவாரம்' இல்லன்னா உங்க எதிர்காலம் அம்பேல் தான்!

Motivation
Motivation
Published on

நமது கடந்த காலம் பற்றி நமக்கு தெரியும். இப்போது இருக்கும் நிலையும் நாம் அறிவோம். ஆனால் எதிர்காலம் பற்றி என்றாவது சிந்தித்து இருக்கிறோமா? அதிலும் தற்போதைய அவசர யுகத்தில் "இன்று நான் நன்றாக இருக்கிறேன் அது போதும்" என்ற எண்ணம் இருப்பவர்களே அதிகமாக இருக்கிறோம்.

 அந்த காலத்தில் நமது பெற்றோர் சொல்வார்கள் "நாளைக்கு நீ நன்றாக இருக்க வேண்டுமென்றால் இன்று உழைத்து விடு" என்று. ஆனால் அதை அப்போது நாம் காதிலே போட்டிருக்க மாட்டோம். ஒரு வயது வந்ததும் யோசிப்போம் அப்போதே எனது பெற்றோர் சொன்னார்கள் அதை கேட்டிருந்தால் நானும் உருப்பட்டு இருப்பேன் என்று.

 சில சமயங்களில் பெற்றோர்களிடமே எகிறும் வாரிசுகளும் உள்ளனர். "அன்னைக்கே நீங்கள் என்னை கண்டித்து இருந்தால்  இன்று நான் நன்றாக இருந்திருப்பேன் அல்லவா? "என்று கேட்பார்கள். ஆனால் அன்று அவர்கள் கண்டிக்கும் போது அவர்களையே புறக்கணித்துவிட்டு ஓடும் மனநிலையில் தான் இருந்திருப்போம் .

சரி இதெல்லாம் இருக்கட்டும் . ஃப்யூச்சர் செல்ப் (Future Self) எனும் எதிர்காலத்தில் நாம் என்பதை பற்றி தான் இங்கு நாம் பேசப்போகிறோம்.

நல்லதொரு உழைப்புடன் போதுமான வருமானம் , சரியான சாப்பாடு, அருமையான உறவுகள் என்று  இருப்பதுதான் சிறந்த வாழ்க்கை முறை ஆனால் அதை நோக்கி நாம் செல்கிறோமா என்றுதான் இங்கு கேள்வி..

சத்தற்ற அவசர அவசரமான உணவுகள், பெரும் பணம் மட்டுமே குறிக்கோளாக உடல் நலத்தை புறக்கணித்து ஓடுதல், உறவுகளிடம் கூட அனுசரித்துச் செல்லாமல் தனித்த வாழ்க்கை போன்ற நிலையில் தான் தற்போது பெரும்பாலோர் உலா வருகின்றனர் அவர்கள் தங்கள் எதிர்காலத்தை குறித்து ஒரு நிமிடமாவது யோசித்திருப்பார்களா? யோசித்திருந்தால் நிச்சயம் அவர்கள் வாழ்வில் மாறுதல் கிடைக்கும்.

ஒரு மனிதன் இன்றைய தனது நிலையையும் எதிர்கால நிலையையும் சம நிலையில் வைத்தால் வைப்பது தான் சிறந்தது. பியூச்சர் செல்ஃப்பை மேம்படுத்தும் நிலைகளாக  4 வழிகள் உள்ளன. அவைகளை இங்கு பார்ப்போம்.

1. உடல் ஆரோக்கியம் (Health)


சிறு வயதில் பெற்றோரின் கண்காணிப்பில் நாம் நமது உடல் நலத்தை குறித்து கவலையின்றி இருப்போம்.ஆனால் கல்வி , வேலை என ஓடத் துவங்கியதும் எதையோ சாப்பிட்டோம் எப்படியோ இருந்தோம் என்று உடல் நலத்தை பற்றி அக்கறை மறந்து போயிருக்கும். எதிர்காலத்துக்கு  அவசியமானது நமது உடல் ஆரோக்கியம் தான் என்பதை கவனத்தில் கொண்டு இப்போது நீங்கள் எந்த வயதில் இருந்தாலும் எதிர்காலத்திற்காக உங்கள் உடல் நிலையை கவனமுடன் பேணத் துவங்குங்கள்.

இதையும் படியுங்கள்:
5 லட்சம் ரூபாயில் ஒரு ஐஸ்கிரீம்!
Motivation

2.பொருளாதாரம் (Finance)


ஒரு மனிதன் நிம்மதியாக வாழ்வதற்கு தேவை முக்கிய தேவை முதல் மற்றும் முக்கிய தேவை பணம் . இந்த பணத்தை சம்பாதித்தால் மட்டும் போதுமா? இன்று சம்பாதித்தோம் இன்றே செலவழித்து விட்டு சந்தோஷமாக இருந்தால் அது எதிர்கால வாழ்க்கைக்கு சிறந்ததாக இருக்குமா? கண்டிப்பாக இருக்காது என்பது உங்களுக்கு தெரியும். நீங்கள் கஷ்டப்பட்டு சம்பாதிக்கும் பணத்தை சரியான வழிகளில் சேமிக்கத் துவங்க வேண்டும்.எதிர்கால தேவைகளுக்காக திட்டமிட்டு உங்கள் பொருளாதாரத்தை பாதுகாப்பானதாக மாற்ற வேண்டும். ஏனெனில் பொருளற்ற எதிர்காலம் நிம்மதியற்ற வாழ்வையே தரும்.

3. உறவுமுறைகள் (Relationship)

ஓடிக்கொண்டிருக்கும் நிலையில் நம் வீட்டிற்கு உறவினர்கள் வந்தால் கூட அவர்களிடம் நின்று பேசக்கூட நேரமின்றி அவர்கள் எப்பொழுது கிளம்புவார்கள் என்பதை எதிர்பார்க்கும் சூழல்தான் இன்று நகரத்தில் வசிப்போர் இடம் உள்ளது. பணி நாட்களில் உறவுகளுக்கு நிச்சயம் நேரம் தரமுடியாது. ஆனால் விடுமுறை நாட்களில் நமக்கான நேரத்தில் நம் உறவுகளை சென்று சந்தித்து உறவுகளிடையே இருக்கும் நெருக்கத்தை அதிகரிக்க வேண்டும். எந்த ஒரு சூழலிலும் உறவுகள் நம்மை பாதுகாப்பதற்கு இருக்கிறார்கள் என்னும் நம்பிக்கையே நமது எதிர்காலத்தின் பலம் .

இதையும் படியுங்கள்:
செய்யாத குற்றத்திற்காக 43 வருட சிறைவாசம்: சுபுவின் நீதிப் போராட்டம்..!
Motivation

4.கேரியர் (Career)


20 வருடம் கழித்து இப்போது இருக்கும் இதே பணி நிலைத்து இருக்குமா என்றால் உறுதியாக உங்களிடம் ஆம் எனும் பதில் இருந்தால் நீங்கள் கேரியரில் திடமாக இருக்கிறீர்கள் என்பது பொருள். இல்லை என்ற பதில் வந்தால் அந்த 20 வருடம் கழித்து நீங்கள் உங்களுக்கான கேரியர் என்ன என்பதை தீர்மானம் செய்ய வேண்டிய நிலையில் இருக்கிறீர்கள் என்பதை புரிந்து கொள்ளுங்கள். அதற்கேற்றவாறு உங்கள் கேரியரை தேர்ந்தெடுத்து செயலாற்றுங்கள். இப்போது நீங்கள் எடுக்கும் முன்னேற்பாடுகள் உங்கள் எதிர்காலத்தைக் கட்டமைக்கும் அஸ்திவாரம் என்பதை உணருங்கள்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com