"எண்ணியது ஈடேறும் ஈசன் அருளிருந்தால்" என்பார் புரட்சித் தலைவர் பாரத ரத்னா மாண்புமிகு எம். ஜி.ராமச்சந்திரன் அவர்கள் அவர் எழுதிய 'நான் ஏன் பிறந்தேன்' எனும் தொடரில். ஈசன் அருளில்லாமலேயே நாம் நினைப்பதெல்லாம் நிச்சயம் நிறைவேறும், தொடர் முயற்சி இருந்தால்!
ஒருவர் ஒரு முயற்சியில் ஈடுபடுகிறாரென்றால், ஒரு முயற்சியிலேயே, அவர் விரும்பியது நடப்பது இல்லை. பல தடைகள், சூழ்நிலைகள் செய்ய நினைக்கும் காரியங்களைத் தடுக்கும், ஆனால் முடிவில் எண்ணியது ஈடேறும்.
பலப்பல தடைகளைத் தாண்டியே நினைத்தது நிறைவேறியது, நிலவில் கால் பதித்த நிகழ்வு. விண்ணிற்கும், நிலவிற்கும், செவ்வாய் கிரகத்திற்கும் ஏன் சூரிய மண்டலத்திற்கருகேயும் இந்திய விஞ்ஞானிகள் விண்கலங்களை ஏவி வருதல் நினைப்பதை நிறைவேற்றும் அடையாளங்கள் தானே!
நினைப்பது நிறைவேற முதலில் ஒன்றின் மீது ஆசைப்பட வேண்டும். ஆசை இல்லையென்றால் அரச மரத்தடியில் படுத்து ஓய்வெடுக்கத்தான் வேண்டும்! நினைப்பதை நிறைவேற்ற இனம், மொழி, பாலினம், வயது இவைகளெல்லாம் ஒரு பொருட்டன்று. பலரைப் பார்க்கலாம், சிறுவயதில் சாதனையாளர்களாகவும், பாடையில் ஏற வேண்டிய வயதில் ஏற்றமிகு வாழ்வுடையோராகவும், வழி நெடுக நினைப்பதை நிறைவேற்றிய அடையாளங்களைக் காணலாம்.
நாம் நினைப்பது எல்லாம் நிறைவேறும் என்றால், அதன் பலன்கள், பலருக்கும் பயனுடையதாகவும் ஆக்கப்பூர்வமானதாகவும் இருக்க வேண்டும். துல்லியமான இலக்கிருந்தால், திடமான திட்டமிடல் இருக்க வேண்டும். அதனாலேயே இன்று இந்தியா ஆயுதங்கள், விஞ்ஞான தொழில் நுட்பங்களை ஆயிரக்கணக்கான கோடிகளில் விற்று பொருளீட்டுகின்றன. நினைப்பது நிறைவேறுதலாலேயே இவையெல்லாம் சாத்தியமாகின்றன.
ஒருவர் நினைப்பதை நிறைவேற்ற தொடர்ந்து முயற்சித்துக் கொண்டே இருக்க வேண்டும். ரோம் ஒரு நாளில் கட்டப்படவில்லை என்பார்கள். அது ஓர் அழகிய நகரம். அதன் கட்டிடங்களின் அமைப்பும் சாலைகளும் மிகவும் நேர்த்தியானவை. கடுமையான உழைப்பு, உறுதியான செயல்பாட்டினால் தான் அந்நகரம் சாத்தியமாயிற்று.
ரோம் என்று மட்டும் அல்ல. வெற்றியாளராக நினைப்பது எல்லாம் நிறைவேற வேண்டுமானால் தொடர் முயற்சியும், கடும் உழைப்பும், அற்பணிப்பு உணர்வும் வேண்டும்.
நமது மறைந்த முன்னால் குடியரசுத் தலைவர் பாரத ரத்னா மாண்புமிகு ஏ.பி.ஜே. அப்துல்கலாம் அவர்கள் எடுத்த எடுப்பிலேயே இந்திய திருநாட்டின் முதல் குடிமகனாக ஆகவில்லை. அவரது சிந்தனைகளும் செயல்களும் நேர்மறையானவை, உயர்வானவை. 'இலக்குகள் கூட மிக உயர்ந்த இலக்குகளாக இருக்க வேண்டும், அதை நோக்கியத் தேடுதலாக இருக்க வேண்டும்' என்பார். தொடர்ந்து தேடிக்கொண்டும், ஓடிக்கொண்டும், ஒரே சிந்தனையாய், ஒருமுகமாய் ஈடுபாடோடு செயல்பட்டால் நாம் நினைப்பது நிறைவேறும்.
ஒரு பக்கம் ஆயுதம், போரட்டம், வெற்றி என ஒருவழிப் பாதையில் பயணித்துக் கொண்டிருந்தது உலகம். வெற்றிக்குப் புதிய பாதையை உருவாக்கினார் அண்ணல் மகாத்மா காந்தி.
அகிம்சை எனும் ஆயுதத்தை கையிலெடுத்தார். அடி உதை வலி தாங்கி கொண்டார். மக்களை அப்பாதையில் பயணிக்க பக்குவப்படுத்தினார். உலகையே ஆண்டுவந்த ஆங்கிலேய இங்கிலாந்து அரசை அகிம்சை எனும் கொள்கை முன்பு மண்டியிடச் செய்தார். இந்தியத் திருநாட்டிற்கு விடுதலை, சுதந்திரம் வாங்கித் தந்தார். அவர் நினைத்ததை நிறைவேற்றினார்.
இந்தியத் துணைக்கண்டமே வெட்கப்படும் பல நிகழ்வுகள், நம் மண்ணில் பலமுறை நடந்திருக்கின்றன. அவற்றில் முக்கியமான சிலவற்றில் அண்ணல் மகாத்மா காந்தி, அன்னை இந்திராகாந்தி, ராஜீவ் காந்தி படுகொலைகளைக் குறிப்பிடலாம். இவையெல்லாம் ஒரு முறை முயற்சியில் மட்டும் நிகழ்ந்தவை அல்ல.
வழியெங்கும் வாய்ப்புகள் வசதிகள் நிறைந்திருக்கின்றன. கற்காலத்தைக் கடந்து நற்காலத்தில் வாழ்ந்து வருகிறோம். தனிப்பட்ட மனிதர்களின் வாழ்வில் நினைப்பதெல்லாம் நிறைவேறுதல் என்பது எளிது. ஆசை, முயற்சி, திட்டமிடல், தொடர் முயற்சி இவைகள் நம் வாழ்வில் இருந்தால் நினைப்பது நிறைவேறும். அவைகள் பொதுநலமாய் இருந்தால் இந்த பூமி