
சிலர் மெதுவாகவும், நிதானமாகவும் பேசுவார்கள். ஒரு சிலருக்கு வேகமாக பேசுவதுதான் பிடிக்கும். வேறு சிலருக்கு பிறர் பேசிக் கொண்டிருக்கும் பொழுது இடையில் பேசுவது கை வந்த கலை. இடைவெளிவிடாமல் பேசுபவர்களும் உண்டு.
தங்களக்கு பிடித்த டாபிக் என்றால் அசராமல் பேசி அசத்துபவர்களும் இருக்கிறார்கள். பிறர் பேசுவதை உன்னிப்பாக கவனிப்பவர்களும் உண்டு. அதே சமயத்தில் அலட்சியமாக பதில் சொல்பவர்கள், பேசுபவர்களுக்கும் இந்த சமூகத்தில் இடம் உண்டு. சிலர் கோபம், ஆக்ரோஷம் கொண்டும் பேசுவார்கள்.
மேற்கூறிய வேறுபட்ட பேச்சு திறன்களைக் கொண்டவர்கள் (For a successful speech) பேசும் விதங்களை கூர்ந்து கவனித்தால் ஒருவர் தன்னுடைய பேச்சு திறனை எப்படி சரிவர வளர்த்துக்கொண்டு அதிக பலனை பெறலாம் என்று அறிந்துக்கொண்டு அத்தகைய ஸ்டைலில் பழகிக்கொள்ள வேண்டும்.
வேகமாக பேசுவது, பேசும் பொழுது அடிக்கடி. கோபத்தை வெளிப் படுத்துவது, பிறர் பேசும் சமயத்தில் இடையே பேசுவது போன்ற பேசும் விதங்கள் வேலைக்கு உதவாது. எந்த பயனும் கிடைக்காது.
அதேபோல் இடைவெளிவிடாமல் வெகுநேரம் பேசிக் கொண்டிருந்தால் கேட்பவர்களுக்கு அலுப்பு தட்டும், கவன சிதறல் ஏற்படும். இவற்றுக்கு மேலாக அத்தகைய பேச்சின் முக்கிய விவரங்கள், சாரம்சம் இவற்றை நினைவில் கொள்வதும், நினைவு கூறுவதும் மிகவும் கடினமாகி விடும். இதற்கு மேலாக அந்த குறிப்பிட்ட வெகு நீளமான பேச்சின் முக்கிய நோக்கம் தோற்கடிக்கப்படுகின்றது.
ஆகவே, இத்தகைய வகையான பேச்சுத்திறன்களை தவிர்த்து விடுவது சால சிறந்தது. எனவே, வளர்த்துக் கொள்ள வேண்டிய பேச்சுத்திறன் தேவைக்கும், சூழ்நிலைக்கும் ஏற்ப எப்படி பேசவேண்டும் என்பதை பழகிக்கொள்ள வேண்டும்.
பேசுவதற்கு தேவையானவற்றை சரிவர சிந்தித்து அளவாக பேசவேண்டும்.
நாம் பேசுவது கேட்பவர்களுக்கு சரியான முறையில் புரிந்ததா என்பதை பேசும்பொழுதே இடை இடையில் செக் செய்துக் கொள்வது அத்தியாவசியம்.
பேசுவதை கேட்பவர்கள் சரிவர புரிந்துக்கொண்டு வருகிறார்கள் என்று அனுமானத்தின் பெயரில் (assumption) தொடர்ந்து பேசுவது உரிய பலனை அளிக்காது. நிதானமாகவும், குறிப்பாகவும் பேச பழகி பின்பற்ற வேண்டும்.
பிறர் பேசுவதை உன்னிப்பாக கவனித்து அவைகளில் இருந்து நல்ல கருத்துக்கள், அவர்கள் பேசும் பொழுது எப்படி திறமையாக கையாள்கிறார்கள் போன்ற நல்ல குணங்கள கற்றுக்கொள்ள வேண்டும்.
விஷயங்களை உறுதிதாக பேசவேண்டும். தயக்கத்தோடு பேசுவதை கைவிட வேண்டும். பேசும்போது திரும்ப திரும்ப பேசுவதை கட்டாயமாக தவிர்க்கவும்.
பேச்சுத் திறனை மேம்படுத்த தேவையான உரிய தயாரிப்பு உதவும். அதற்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
தாங்கள் பேசுவதை பிறர் விரும்பி கேட்பதுடன், ஏற்றுக்கொண்டு உங்கள் பேச்சால் அவர்களும் பயன் பெரும் வகையில் உங்கள் பேச்சு திறமை அமையவேண்டும்.
பொறுத்தமான நகைச்சவை, மேற்கொள்கள் உங்கள் பேச்சுத்திறனுக்கு மெருகு ஏற்றும்.