senior citizens
senior citizens

மனமுதிர்ச்சி (Mental Maturity) உடையவர்களுக்கான 6 அரிய குணங்கள்!

நாம் அன்றாட வாழ்வில் 60 வயதில், குழந்தைபோல் நடந்துகொள்ளும் பெரியவர்களையும் பார்த்திருப்போம். 20 வயதில் 60 வயது பெரியவர்கள்போல் நடந்துகொள்ளும் சிறியவர்களையும் பார்த்திருப்போம். இதற்குக் காரணம் என்னவென்று சிந்தித்தால், அவரவர்களின் மனமுதிர்ச்சி (maturity) தான் காரணமாக இருக்கும். ஒரு சிலர் தங்களது இளமை கால வாழ்க்கையின் சூழல் காரணமாக மனமுதிர்ச்சி என்பதை விரைவில் அடைந்துவிடுவார்கள். சிலருக்கு அது கால தாமதமாகும். மனமுதிர்ச்சி உடையவர்களுக்கான குணாதிசயங்கள் மற்றும் மனமுதிர்ச்சி உடையவர்கள் ஆவதற்கான வழிகளையும் இதில் பார்ப்போம்.

1.நம்மை மீறி நடக்கும் எந்த ஒரு செயலும் நம் கைகளில் கிடையாது என்பதைப் புரிந்தவர்கள்.  மனமுதிர்ச்சி உடையவர்கள் வாழ்வின் எதார்த்தத்தை ஏற்றுக்கொண்டு அதன் வழியில் நடக்கும் நபர்களாக இருப்பார்.  

2. எந்த ஒரு இக்கட்டான சூழ்நிலையிலும் தங்கள் உணர்வுகளைக் கட்டுப்படுத்தும் ஆற்றல் உடையவர்களாக இருப்பார்கள்.

3. உடல் நலனை வலுப்படுத்தத் தினம்தோறும் உடற்பயிற்சி, யோகா போன்றவற்றைச் செய்து உடலினை பேணிப் பாதுகாப்பர். உடல் நலனில் எந்த அளவிற்கு அக்கறை காட்டுகிறார்களோ, அதே அளவிற்கு மனநலனிலும் அக்கறை உடையவர்களாக இருப்பார்கள்.

4. மனமுதிர்ச்சியுடையவர்கள், ஒருவரைக் கண்டவுடன், அவர்கள் இப்படிப்பட்டவர்தான் என்று ஒருபோதும் அவசர முடிவு செய்யமாட்டார்கள். ஒருவருடன் பழகிய பின்னரே அவர்களின் பண்புகளையும் குணங்களையும் நம்மால் புரிந்துகொள்ள முடியும், என்று நன்கு உணர்ந்தவர்கள். அதனால், யாரையும் முதல் சந்திப்பிலேயே எடை போட மாட்டார்கள்.

5. தேவையற்ற விவாதங்களோ, சண்டைகளோ நடக்கும்பொழுது அதில் நான்தான் பெரியவன் என்று வம்பை விலைக்கு வாங்காமல், அமைதியாக அவர்களைக் கடந்து செல்வார்கள். அதற்கு அவர்களைக் கோழை என்று எண்ணிவிடக் கூடாது. கோபம் என்பது நாயிற்குக் கூடத்தான் வரும்; ஆனால் அமைதி என்பது மனிதருக்கே உரியக் குணம் என்பதை அறிந்தவர்களாக இருப்பார்கள்.

இதையும் படியுங்கள்:
டெட்ரா பேக் பால் வாங்குவது புத்திசாலித்தனம்: ஏன் தெரியுமா?
senior citizens

6. அவர்கள் இருந்தால்தான் என் வாழ்வில் சந்தோசம். அவர்களால்தான் நான் மகிழ்ச்சியாக இருக்கிறேன் என்று, தங்கள் சந்தோஷத்திற்காக மற்றவர்களை ஒருபோதும் சார்ந்து இருக்க மாட்டார்கள். நம் வாழ்க்கை நம் கையில் மட்டுமே என்ற உயரிய கொள்கை உடையவர்களாக இருப்பார்கள்.

மனமுதிர்ச்சியடைவது என்பது உணர்ச்சி, நுண்ணறிவு, பொறுப்பு மற்றும் வாழ்க்கைக்கான சிந்தனை ஆகியவற்றை வளர்ப்பதை உள்ளடக்கியது. உங்கள் செயல்களைப் பற்றிச் சிந்தியுங்கள். அனுபவங் களிலிருந்து கற்றுக்கொள்ளுங்கள் மற்றும் சுய முன்னேற்றத்திற்கு முன்னுரிமை கொடுங்கள்.

நேர்மறையான தாக்கங்களுடன் உங்களைச் சுற்றி, பலதரப்பட்ட கண்ணோட்டங்களைத் தேடுங்கள். பச்சாதாபத்தைப் பயிற்சி செய்யுங்கள். பொறுமை மற்றும் திறந்த மனப்பான்மை ஆகியவை முதிர்ச்சிக்கான பாதையில் நாம் அடைய வேண்டிய முக்கிய பண்புகளாகும். இந்த மனமுதிர்ச்சி உடையவர்களுக்கான அறிகுறிகளை பின் தொடர்ந்து மனமுதிர்ச்சி உடையவராக உங்களை வளர்த்துக்கொள்ளுங்கள்.

Related Stories

No stories found.
logo
Kalki Online
kalkionline.com