தலைமுறை இடைவெளி: தார்மீகப் பொறுப்பா? தனிநபர் ஈகோவா?

Generation Gap | Elderly and Youth
Generation Gap | Elderly and YouthAI Image
Updated on

பலருக்கு தனக்கு மட்டும் தான் எல்லாம் தெரியும் என்ற மனோ பாவத்துடன் வலம் வருவது மிகவும் பிடிக்கும். அதில் தவறில்லை. அதே சமயம் அடுத்தவர்களுக்கும் சில அல்லது பல, பல்வேறு விவரங்கள் தெரிந்திருக்க கூடும் என்பதை ஒப்புக் கொள்ளும் மனபான்மை இத்தகைய எல்லாம் தெரியும் நபர்களிடம் பெரும் பாலும் மிஸ்ஸிங்.

எல்லாம் தெரியும் என்பது இயலாத ஒன்று என்பது சிறிது சிந்தித்தாலே புலப்படும்.

எல்லாம் தெரியும் என்பதற்கு பதிலாக அதிகமாகவோ அல்லது கூடுதலாகவோ தெரிந்திருக்க முடியும் என்பது சரியானதாக இருக்கும்.

எல்லாம் தெரியும் என்ற மனோ பாவம் கொண்டவர்கள் அனுபவஸ்தர்கள் மற்றும் சற்று வயதானவர்களாக இருப்பார்கள். இதில் ஓய்வு பெற்றவர்களும் அடங்கும்.

இத்தகையை நபர்கள் தாங்கள் மட்டும் தான் சாதித்து விட்டவர்கள் என்ற தோரணையில் பேசுவார்கள். அவர்கள் பணியில் இருந்த பொழுது மட்டும் தான் கடினமான சவால்களை சந்தித்து முறியடித்து வெற்றி இலக்கை அடைந்ததாக சிலர் மார் தட்டிக் கொள்வதும், பெருமை அடித்துக் கொள்வதையும் பார்க்கலாம். அதில் உண்மையும் இருக்க கூடும். மறுப்பதற்கு இல்லை.

பொதுவாக இப்படிப் பட்டவர்கள் உரையாடும் பொழுது ஏதோ அவர்கள் காலத்தில் மட்டும் தான் சவால்கள், பிரச்சனைகள், எதிர்பார்ப்புக்கள், தடங்கல்கள் இருந்தால் போலும் குறிப்பிட்ட அந்த நபரின் சாமர்த்தியத்தால் மட்டும் தான் முடிவுகள் பெற்று விட்டதைப் போல் பில்ட்அப் கொடுப்பவர்களும் உண்டு.

அது மட்டும் அல்லாமல் அடுத்த இன்றைய தலை முறையினர்களுக்கு விவேகம் பற்றாது, முடிவுகள் (Decision making) சரிவர எடுக்க இயலாது, பிரச்சனைகளை எதிர் கொண்டு விடை காண முடியாது (To handle crisis situation and over come) தேவைக்கு ஏற்ப திட்டமிட்டு செயல் படுத்த முடியாது என்று அடுக்கிக் கொண்டே செல்வார்கள்.

மேலும் இன்றைய இளம் தலைமுறையினர்களிடமும் திறமை, அழுதங்களை எதிர் கொள்ளவும், கையளாவும், கடந்து செல்வதற்கான திறன், தன்னம்பிக்கை, பிரச்சனைகளை அலசி ஆராயந்து தேவையான முடிவுகளை எடுக்கவும் தெரியும். கலந்தாலோசித்து குழுவாக செயல்பட்டு அடுத்த கட்டங்களுக்கு முன்னேறி செல்லவும் தயங்கவும் மாட்டார்கள் என்பதும் மறுக்க முடியாத ஒன்றாகும்.

சுய புராணம் பாடிக் கொண்டும், தங்களை பற்றிய பெருமைகளை தம்பட்டம் அடித்துக் கொள்ளும் இப்படிப் பட்ட கடந்த கால தலைமுறை நபர்கள் தான் மிக பெரிய தடைகற்கள் போன்று செயல் படுகிறார்கள், அடுத்த தலைமுறை முன்னேற்றம் அடைவதற்கு.

இந்த அனுபவம் மிக்கவர்கள் பணி புரிந்த காலம், சூழ்நிலை, சப்போர்ட் சிஸ்டம் வேறு.

இதையும் படியுங்கள்:
எதிர்ப்பாளரை ஒரு நல்ல நண்பனாக மாற்ற வேண்டுமா? – பென் ஃப்ராங்க்ளின் எஃபெக்ட்!
Generation Gap | Elderly and Youth

தற்பொழுதிய முன்னேற்றம், படிப்பு முறை, வெளிப்பாடு, தாக்கம் (Exposure), அடுத்த இன்றைய தலை முறையினரின் ஆர்வம் (Present next generation) லகுவாக மென் பொருட்களை கையாளும் திறமை, வேகம், வளர்ந்து வரும் தகவல் தொழில் நுட்பம் (Information Technology - IT) சம்பந்தப் பட்ட விவரங்கள், மேம்படுத்தப் பட்டவை குறித்து அறிந்துக் கொண்டு பயன் படுத்துவதில் சூரர்கள்.

அதி வேகமாக ஏற்பட்டு வரும் மாற்றங்களுக்கு ஏற்ப இன்றைய இளம் தலை முறையினரால் இயல்பாகவும், லகுவாகவும் அனுசரித்துப் போய் இயங்கி பயணம் செய்ய முடியும்.

எனவே போன தலை முறையினர் அவர்கள் பெருமை பற்றி பேசிக் கொண்டு இருப்பதற்கு பதிலாக வளர்ந்து வரும் இளம் தலை முறையினர்களுக்கு போதிய வழி விட்டு, அவர்களை ஊக்குவித்து புதிய சிந்தனைகள் செயல்பட வழி வகுக்க வேண்டும்.

இது சென்ற தலைமுறையினரின் தார்மீக பொறுப்பாக இருப்பது இன்றைய சூழ்நிலைக்கு தேவையான ஒன்றாகும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com