
வாழ்வில் நடைபெறும் ஏதேனும் சோகமான அல்லது துயரமான நிகழ்வால் மனதில் எழும் உணர்வே துயரம். உடல் வலியோ, மனவலியோ ஏதோ ஒன்று துன்பத்தைக் கொடுக்கும். அதிலிருந்து உடனடியாக மீண்டு வந்து விடவேண்டும். இல்லாவிட்டால் அடுத்தடுத்து நிகழும் பல எதிர்பாராத சம்பவங்கள் அதை இன்னும் அதிகமாக்கி மன அழுத்தத்தில் கொண்டு போய்விடும். அதை துடைக்கும் வழிகள் என்ன என்று பார்ப்போம்.
கவலைப்படாதீர்கள்
உங்கள் துன்பத்தை மற்றவர்கள் புரிந்து கொள்ளவில்லையே? என கவலைப்படாதீர்கள். யாரும் ஆறுதல் சொல்லவில்லையே என ஆதங்கப்படாதீர்கள். அடுத்தவர்களின் ஆறுதல் வார்த்தைகள் உங்களுக்கு தேவையாக இருக்கலாம். ஆனால் எல்லோருமே அவரவர் துன்பங்களை மனதில் கலந்து கொண்டிருக்கிறார்கள். என்பதை புரிந்துகொள்ளுங்கள்.
மனபாரங்களை இறக்குங்கள்
பாதையே தெரியாத இருட்டுக்குள் சிக்கி தவிப்பது போன்றது சோகத்தை மனதில் சுமந்தபடி வாழ்வது. அந்த நேரத்தில் இசை கேட்பது மனதுக்கு ஆறுதல் தரும். உலகின் புகழ்பெற்ற பாடல்கள் பலவும் சோகத்தில் தவித்த கவிஞர்களாக உருவாக்கப்பட்டது. எத்தனையோ பெரிய மனபாரங்களை இறக்கி வைக்கும் சுமை தாங்கியாக பாடல்கள் இருக்கின்றன.
வெளியில் செல்லுங்கள்
மனதில் சோகம் சூழ்ந்தால் வீட்டுக்குள் முடங்காதீர்கள் எங்காவது வெளியில் சென்று ஆறுதல் தேடுங்கள் பூங்காவில் உற்சாகமாக விளையாடும், கோயிலில் கம்பீரமாக நடந்து வந்து வழிபடும் 80 வயது முதியவர்கள் பஸ்ஸில் நெரிசலை பொருட்படுத்தாமல் பயணித்து வேலைக்கு செல்லும் மாற்றுத்திறனாளி, என எவரும் உங்களுக்கு வாழ்க்கையின் மீது துன்பத்தை துடைக்கும் பெரும் நம்பிக்கையை தரலாம்.
புத்துணர்வு பெறுங்கள்
சோகம் தீரவில்லையா? வேலைகளில் கடுமையாக மூழ்கி விடுங்கள் வேலையில் உங்களை மறக்கும் போது உங்கள் துன்பமும் மறந்து போய்விடும். சோகத்த மறக்க செய்யும் இன்னொரு விஷயம் உடற்பயிற்சி, நடப்பது, ஓடுவது, சைக்கிள் ஓட்டுவது எனஎதையாவது செய்து உடலுக்குள் பெரும் புத்துணர்வை ஏற்படுத்திக் கொள்ளுங்கள். இதனால் அதிகம் சுரப்பதால் உங்கள் மனதை இது உற்சாகமாக ஆக்குகிறது.
தீர்வு கேளுங்கள்
நெருங்கிய நண்பர்கள் அல்லது நம்பிக்கையான உறவினர்களிடம் பேசுங்கள். உங்கள் பிரச்னையை கிண்டல் செய்து காயப்படுத்தி விடாதவர்களாக அவர்கள் இருக்கவேண்டும் மிகவும் முக்கியம். அவர்களிடம் ஆறுதல் தேடாதீர்கள். தீர்வு கேளுங்கள்.
அமைதியாக இருங்கள்
துன்பம் மனதில் தங்கும்போது சுறுசுறுப்பாக களத்தில் இறங்கி வீட்டில் ஏதாவது ஒரு பகுதியை சுத்தம் செய்தால் பளிச் என சுத்தம் செய்து நிறைவு பெறும் போது உங்கள் துன்பமும் விடை பெற்று மனம் பளிச்சென மாறிவிடும்.
வெளியில் சென்று இயற்கையை பார்த்து சுத்தமான காற்றே சுவாசித்து பறவை விலங்குகளை பார்த்து உங்கள் மனதை லேசாக்குங்கள். அதற்கு வாய்ப்பு இல்லாதவர்கள் அமைதியாக அமர்ந்து தியானம் செய்யலாம்.
நம்பிக்கை வையுங்கள்
கனவு காணுங்கள் பகல் கனவுதான் நீங்கள் மிகவும் மகிழ்ச்சியான ஒரு சூழலில் இருப்பதாகவும், உங்களோடு சேர்ந்து எல்லோருமே சிரித்தபடி இருப்பதாகவும் கனவு காணுங்கள் அந்த கற்பனை நிஜசோகத்தை மாற்றும்.
நிம்மதி தேடுங்கள்
எல்லா காயங்களும் ஆற நேரமாகும். உடலில் ஒரு காயம் வந்தால் மருந்தே வைக்காவிட்டாலும் அது தானாக ஆறிவிடும். அது போலவே மனக்காயங்களும் நீங்கள் எதுவுமே செய்யாவிட்டாலும் காலப்போக்கில் ஆறிவிடும். நினைத்து வருந்தினால் வலி உங்களுக்குத்தான்.
இதைப் புரிந்துகொண்டால் எந்த துன்பமும் கடந்து போய்விடும் சில ஆண்டுகளுக்கு பிறகு யோசித்தால் இதற்காகவா இவ்வளவு வருத்தப்பட்டோம்? என நினைத்து வெட்கப்படும் அளவுக்கான பிரச்னைகள்தான் பெரும்பாலானவையாக இருக்கும்.
எல்லா இழப்புகளிலும் எல்லா வருத்தங்களிலும் நீங்கள் நினைத்து நிம்மதி அடைய ஏதாவது ஒரு விஷயமாவது இருக்கும். அது என்ன என்று தேடுங்கள். தவறுதலாக எங்கோ ஒழுங்குகளை காப்பாற்ற நீட்டப்படும் ஒற்றை கயிறு போன்ற உதவிதான் அது. அதை பற்றிக் கொண்டு எழுந்து பிடித்து மீண்டு வாருங்கள்.
துன்பம் துடைக்கும் இத்தனை மருந்துகள் இருக்கும்போது அதை துடைத்து எறியுங்கள். வாழ்க்கையில் துன்பம் மறைந்து வசந்தம் பூக்கும். மகிழ்ச்சி உண்டாகும்.