ஆர்வத்துடன் கற்றுக்கொள்ள பழகிக் கொள்ளுங்கள்..!

Get used to learning with interest..!
Motivational articles
Published on

ற்றுக்கொள்வது என்பது  தனி மனிதனுக்கு கிடைத்துள்ள பரிசு. அதை திறம்பட உபயோகித்து  பலன் பெறுவது அவரவர் காட்டும் ஆர்வத்தைப் பொறுத்தது.

வாழ்க்கையில் முன்னேறிய பலருக்கு பயன் அளித்தவைகளில் ஒன்றான ஆர்வத்தோடு கற்றுக் கொள்வது பற்றி சில விவரங்கள் காண்போம்.

எந்த வேலை செய்தாலும்  சிலர் மிக ஆர்வத்துடன்  செய்வதை கானலாம்.

அவர்களது  ஆர்வமே அடிப்படை தளமாகி  அவர்கள் செயலில் மேலும் ஈடுபட செய்யும்.

ஆர்வத்தோடு  செய்யும்பொழுது மேலும் எடுத்துக் கொண்ட  வேலை செம்மை பட கற்றுக்கொள்வதும் அவசியம் ஆகும்.

அத்தகையை சூழ்நிலையில் மேலும் கற்றுக்கொள்வது அத்தியாவசிய தேவை ஆகி கற்றுக்கொள்ள தூண்டுவதோடு வழி தேடவும் வைக்கும்.

இவ்வாறாக ஒன்றன் பின் ஒன்றாக அடுத்த கட்டத்திற்கு நகர வைக்கும் சூழ்நிலை மேலும் திறமையை வளர்த்துக்கொள்ள வழி காட்டும்.

ஆர்வத்தோடு கற்றுக்கொள்பவர்களுக்கு எந்த வகை கஷ்டங்களும, கடினங்களும்  சுமையாகவும், தடை கற்களாகவும் இருப்பது இல்லை.

இதையும் படியுங்கள்:
நம் காலம் வரும்போது கட்டாயம் ஜெயிக்க முடியும்!
Get used to learning with interest..!

மாறாக  அவை  அவர்களுக்கு மேலும் கற்றுக்கொண்டு திறமைகளை வலுப்படுத்திக்  கொள்ளும் அரிய வாய்ப்புக்களாக தோன்றி அத்தகைய சந்தர்ப்பங்கள் கை நழுவ விடாமல்  கற்றுக் கொள்ள பயன்படுத்தி பலன் பெறுகின்றனர்.

ஆர்வத்தோடு பயிலும் பொழுது நினைவாற்றல் பழகப் பழக  மேலும் வலுப்படுவதோடு  தன்னம்பிக்கை  மிளிரவும் வைக்கும்.

ஆர்வம் ஒரு முக்கிய தூண்டும் கருவியாக செயல்படும். (keen interest will itself act as motivating tool) 

ஆர்வத்துடன் கற்றுக் கொள்பவர்களுக்கு ஆழமாகவும், விரிவாகவும், விவரமாகவும் பயின்று மேலும் மேலும் தெரிந்து, அறிந்துக் கொள்ளவும் ஆர்வம் அதிகரிக்கும்.

இத்தகையை  செயல்பாடுகள்  ஆர்வத்தோடு கற்றுக் கொல்பவர்களால் முடியும்.

இத்தகைய  நபர்கள்  வேகமாக படிக்கவும், உள்வாங்கிக் கொண்டு கற்கவும் நாளடைவில் பயின்று கொள்வார்கள்.

ஆர்வம் அவர்களுக்கு   தேவையானவற்றை கற்கவும்,  கற்றவற்றை தேக்கி வைத்துக்கொண்டு வேண்டும் சமயத்தில் நினைவு கூர்ந்துப் பயன்படுத்திக் கொள்ளவும் பழக்கிவிடும்.

இதையும் படியுங்கள்:
சூழ்நிலைகள் தரும் வெற்றிக்கான சூத்திரம்..!
Get used to learning with interest..!

ஆர்வத்தோடு  கற்ப்பவர்கள்  ஏனோ தானோ என்று நுனி புல் மாதிரி மேயாமல், உண்மையான மகிழ்ச்சியுடன்  முழுமையாக கற்றுக்கொள்வதை கடமையாக  கொண்டு ஆர்வத்தோடு செயல்படுத்துவதால் அவர்களால் உரிய பலனை பெற்று அனுபவிக்க முடிகின்றது.

இவற்றிற்கு  எல்லாம் மூல காரணமாக திகழ்வது ஆர்வம் என்ற மந்திரகோல்  அளிக்கும்  உற்சாகம் பெரிதும் உதவுகின்றது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com