Goals Vs System: எது உங்கள் வாழ்க்கையில் மாற்றத்தை உருவாக்கும்?

Goals Vs System
Goals Vs System
Published on

Goals are for losers இன்றைக்கு இருக்கும் நவீன உலகில் தோற்றுப்போகிறவர்களே இலக்கை நிர்ணயித்துக் கொண்டிருப்பார்கள் என்று scott adams சொல்கிறார். புத்திசாலிகள் யாரும் இலக்கை மட்டுமே நிர்ணயித்துக் கொண்டு நேரத்தை வீணாக்குவதில்லை. உங்களில் எத்தனை பேர் இலக்கை நிர்ணயித்து விட்டு அதற்காக எந்த முயற்சியும் எடுக்காமல் இருக்கிறீர்கள்.

ஆரோக்கியமான உடல், பண சேமிப்பு, நல்ல வேலை என்று உங்களுக்கு நிறைய இலக்குகள் இருந்திருக்கலாம். அதற்காக சிறிது காலம் உழைத்திருக்கலாம். ஆனால், சூழ்நிலை காரணமாக அந்த இலக்குகளை அடைய முயற்சிக்காமல் நம்முடைய வாழ்க்கையை பார்த்துக் கொண்டு போயிருப்போம்.

இதற்கு காரணம் இலங்கு உங்களுடைய பிரச்னையில்லை அதை அடைய எந்த வழியாக செல்ல வேண்டும் என்று தீர்மானிப்பதே உங்கள் பிரச்னையாக இருக்கும். உதாரணத்திற்கு, சென்னையில் இருந்து சிங்கப்பூர் போக வேண்டும் என்று நினைக்கிறீர்கள். ஆனால், அதற்கு பிளைட் எப்படி புக் செய்து போவது, பாஸ்போர்ட் மற்றும் டாக்குமெண்ட் தேவைப்படும் என்பது போன்ற விஷயங்கள் உங்களுக்கு தெரியவேயில்லை என்றால் எப்படி இருக்கும் யோசித்துப் பாருங்கள்.

இதற்காக தான் Goals ஐ விட்டுவிட்டு System ஐ பயன்படுத்த சொல்கிறார்கள். System என்பது உங்கள் இலக்கை அடைய தினமும் என்ன செய்ய போகிறீர்கள் என்பது தான். உதாரணத்திற்கு, பத்து கிலோ உடல் எடை குறைக்க வேண்டும் என்று நினைக்கிறீர்கள். அது உங்களுடைய Goal என்றால் அதை அடைய தினமும் 30 நிமிடம் நடப்பது, உணவு முறையில் கவனம் செலுத்த டைம் டேபிள் போடுவது, தினமும் 11 மணிக்கு அலாரம் வைத்து படுத்துவிடுவது போன்ற சிஸ்டம்ஸை உருவாக்கும்போது அது உங்கள் இலக்கை அடைய உதவும்.

இதில் தினமும் நீங்கள் என்ன செய்ய போகிறீர்கள் என்ற Action Step ல் கவனம் செலுத்துவீர்கள். இதனால் குறுகிய நேரத்தில் முடிக்க வேண்டும் என்றில்லாமல் Stress free Approach ஐ எடுக்க முடியும். Goals என்பது ஒருகட்டத்தில் முடிவதுப்போல இருக்கும். ஆனால், சிஸ்டம் வாழ்க்கை முழுவதும் ஒரு அங்கமாக இருந்து நமக்கு உதவிக் கொண்டேயிருக்கும்.

அப்செட்டாக இருக்கிறது, போர் அடிக்கிறது போன்ற எந்த உணர்வும் உங்களை தொல்லை செய்யாமல் பல் துலக்குவது போல, குளிப்பது போல நீங்கள் உங்கள் இலக்குகளை நோக்கி கவனத்தை செலுத்திக் கொண்டு போவீர்கள். ஒரு சிஸ்டத்தில் Sequence of activities தான் இருக்கிறது. 

எப்படி சிஸ்டத்தை உருவாக்குவது?

இப்போது உடல் எடையை குறைக்க வேண்டும் என்று நினைக்கிறீர்கள் என்றால் அதற்கு பல வழிகள் இருக்கிறது. சைக்கிள், டிரெட்மில், நடப்பது போன்ற பல வழிகளை உங்களுக்கு ஏற்றதை தேர்ந்தெடுக்க வேண்டும்.

இதையும் படியுங்கள்:
ஒரு மாதம் வெங்காயம் பூண்டினை சாப்பிடாமல் தவிர்த்திடுங்கள்... பின்னர் நடப்பதை பாருங்கள்!
Goals Vs System

அது போலவே உணவுப்பழக்கத்திலும் Keto, Paleo போன்ற பல உணவுமுறையில் உங்கள் ஆரோக்கியத்திற்கு ஏற்றதை தேர்ந்தெடுக்க வேண்டும்.

Stupid small steps தான் சிஸ்டத்தின் முதல் படியாகும். ஏனெனில் பெரிய மாற்றத்தை உடனே கொண்டுவர முடியாது. அடுத்து அந்த Stupid small steps ஐ தினமும் கடைப்பிடிப்பது தான். தினமும்  இந்த இடத்தில் இந்த வேலையை செய்ய வேண்டும் என்பதை உங்கள் உடலுக்கும், மனதிற்கும் பழக்கப்படுத்துங்கள்.

இதையும் படியுங்கள்:
இந்த ஒரு பழம் போதும்! உங்கள் குழந்தையின் சூப்பர் பவர்க்கு!
Goals Vs System

ஒவ்வொரு  வாரமும் அந்த செயலின் கடினத்தன்மையை அதிகரித்து அதனுடைய Consistency மற்றும் முடிவுகளை குறித்து வைக்க ஆரம்பிக்க வேண்டும். அப்போதுதான் நீங்கள் உருவாக்கும் சிஸ்டம் மூலமாக தொடர்ந்து செயலாற்றி நீங்கள் அடைய நினைக்கும்  இலக்கை அடைந்துவிடுவீர்கள். அப்பறம் என்ன? இனி, உங்களுடைய இலக்குகளை ஒரு சிஸ்டமாக மாற்றி அதில் கவனம் செலுத்த ஆரம்பியுங்கள். 

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com