
உலகில் மனிதர்களில் ஒவ்வொருவரிடமும் சில நல்ல பழக்க வழக்கங்கள் இருக்கும். இயல்பாக இருக்கும் இந்த நல்ல குணங்கள் நாமே எதிர்பாராத வகையில் நம் முன்னேற உதவும். உதாரணமாக நேரம் தவறாமை, எதையும் நேர்த்தியாக செய்யும் பழக்கம், பிறரை மதிக்கும் நற்குணம், நன்றி பாராட்டும் நற்பண்புகள் போன்றவை.
"அணுக்கமான பழக்கவழக்கங்கள்" என்ற "Atomic Habits" தமிழில் பொருள்படும். ஜேம்ஸ் கிளியரின் (James Clear) புத்தகம் இதை விளக்குகிறது. இந்தப் புத்தகம், நம் பழக்கவழக்கங்களை கொஞ்சம் கொஞ்சமாக, அணுக்களாக மாற்றி, பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் முறையைப் பற்றிப் பேசுகிறது.
புத்தகம், பெரிய மாற்றத்தை அடைய வேண்டுமெனில், சிறிய மாற்றங்களைச் செய்யவேண்டும் என்பதை வலியுறுத்துகிறது. உதாரணமாக, தினமும் ஒரு பக்கம் புத்தகம் படிப்பது, கொஞ்சம் தூரம் நடப்பது போன்ற சிறிய விஷயங்கள், காலப்போக்கில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் என்கிறது.
நல்ல பழக்கவழக்கங்களை வளர்ப்பதன் மூலம், நம் வாழ்க்கையை மேம்படுத்தலாம் என்று கூறுகிறார். பெரிய இலக்குகளை அடையும் முயற்சியில் நாம் சோர்வடைவதற்குப் பதிலாக, தினமும் சிறிய, தொடர்ச்சியான முன்னேற்றங்களை ஏற்படுத்துவதன் மூலம், காலப்போக்கில் மிகப்பெரிய வெற்றியை அடைய முடியும் என்கிறார் ஜேம்ஸ் கிளியர்.
ஒருவரிடம் இருந்த சில சிறிய நல்ல பழக்கங்கள் எவ்வாறு மிகப்பெரிய மாற்றங்களை அவர் வாழ்வில் உருவாக்கியது என்பதை கூறும் ஒரு சம்பவம்...
ஜெனரல் ஃபோர்டு (General Ford)ஐ பற்றி எல்லோருக்கும் தெரிந்து இருக்கும். உலகப் புகழ் பெற்ற ஃபோர்டு கார் கம்பெனியின் சேர்மன். அவர் இரண்டு இளைஞர்களை ரெஸ்டாரன்ட் ஒன்றுக்கு டின்னர்க்கு அழைத்து சென்றார்.
அவர்களில் ஒருவரை தன் கம்பெனியில் உயர்ந்த பதவிக்கு தேர்வு செய்ய வேண்டி இருந்தது. டின்னர் முடிந்த பிறகு, இருவரில் ஒருவரிடம் "you are selected" என்று கூறினார்.
இரண்டாமவர் ரெஸ்டாரன்ட்டில் இருந்து புறப்படும்போது, ஃபோர்டிடம் கேட்டார்.
இருவரும் ஒரே படிப்பு, ஒரே பல்கலைக்கழகம் நல்ல மதிப்பெண்கள். டின்னர் சாப்பிடும்போது நீங்கள் கார் சம்பந்தமாகவோ, இன்ஜினீயரிங் சம்பந்தமாகவோ எதுவும் கேட்கவில்லை. எந்த தகுதியில் அவரை தேர்ந்து எடுத்தீர்கள் என்று தெரிந்துகொள்ளலாமா? என்று பவ்யமாக கேட்டார்.
ஃபோர்டு கூறினார் : இரண்டே காரணங்கள்தான்.
இறைச்சி சாப்பிடும்போது நீங்கள் முதலில் கொஞ்சம் உப்பு போட்டுவிட்டு, பின் டேஸ்ட் பார்த்தீர்கள். அவர் அருந்தி பார்த்து விட்டு, பின் உப்பு போட்டார். இந்த முன்னெச்சரிக்கை கம்பெனிக்கு மிகவும் தேவை. எந்த பிரச்னையாக இருந்தாலும், முன்னெச்சரிக்கையோடு கவனமாக இருக்கவேண்டும்.
இரண்டாவது அவர் உணவருந்தும்போது, உணவை பரிமாறியபோது சர்வர்களுக்கு, Thank you, Please என்ற சொற்களை உபயோகப்படுத்தினார். நீங்கள் அவர்களை ஒரு பொருட்டாகவே மதிக்கவில்லை. என்னிடம் மட்டுமே மரியாதையாக இருந்தீர்கள். கம்பெனிக்கு மனிதநேயம் இன்றியமையாதது. தொழிலாளர்கள் பிரச்னைகளை மனிதநேயத்தோடு அணுகி, சரியான தீர்வு காண, முதலில் மனிதர்களை மதிக்க கற்றுகொள்ள வேண்டும். எனக்கு இவர் போன்ற குணம் உள்ளவர்கள்தான் தேவை'' என்றார்.