உடற்பயிற்சிப் பற்றிய 12 உத்வேகப் பொன்மொழிகள்!

gym motivation quotes
gym motivation quotes
Published on

Gym Motivation Quotes: உடற்பயிற்சி உடலுக்கான பயிற்சி மட்டுமில்லை, நம் மனவலிமையை கூட்டுவதற்கான பயிற்சியாகவும் அமைகிறது. முதலில் நெல்லிக்கனியை கடிக்கும் போது புளிப்பு கலந்த துவர்ப்பாக தான் இருக்கும் ஆனால், பின் தண்ணீரை அருந்தும் போது நமக்குள் ஓர் இனம் புரியாத தித்திப்பான உணர்வை உணர்கிறோம் அல்லவா? அதுபோல்தான் உடற்பயிற்சியும் முதலில் கஷ்டமாக இருந்தாலும், பின் நாளடைவில் நம் மனதிற்கும் உடலுக்கும் என்றென்றும் தித்திப்பாக மாறும் என்பதில் எந்த ஒரு ஐயமுமில்லை.

தினசரி நாம் 30-45 நிமிடங்கள் உடற்பயிற்சி செய்து வந்தால் ஆயுள் கூடும் என்று அறிவியல் விஞ்ஞானம் கூறுகிறது. அப்படிப்பட்ட இந்த உடற்பயிற்சியை தினசரி நாம் செய்வதற்கு நமக்கு நாமே ஒரு சில உத்வேகப் பொன்மொழிகளைக் கூறிக்கொள்ள வேண்டும்.

உடற்பயிற்சிப் பற்றிய 12 உத்வேகப் பொன்மொழிகள்:

  1. உடற்பயிற்சிக்கு முன், கடினமென்று நினைத்தால் கஷ்டமும் கல்லாகிவிடும். தினசரி உடற்பயிற்சியை கையாண்டால் கஷ்டமும் கரைந்தோடும்.

  2. முயன்று முயன்று பார் முட்டித் தேய்ந்தாலும் பரவாயில்லை, தினசரி ஓட்டத்தை விடாதே. கடைசியாக தொடங்கினாலும் பரவாயில்லை, முதலாவதாக விட்டுவிடாதே.

  3. தூய்மை, பொறுமை, விடாமுயற்சி, சுய ஒழுக்கம் இந்த நான்கே உடற்பயிற்சியின் அடிப்படைகளாகும்.

  4. மனதிற்கும், உடலுக்கும் ஒரு சேர மருந்தாக அமையும் பயிற்சி இவ்வுலகில் எதுவென்றால் அது உடற்பயிற்சி.

  5. உழைக்க தயார் என்றால் உன்னை வீழ்த்த இவ்வுலகில் யாருமில்லை. உனக்கு நீயே சொல்லிக் கொள் உறுதியும், நம்பிக்கையும் தான் எனது பலம் என்று.

  6. விழுவதற்கும், எழுவதற்கும் இடையில் நிற்பது ஒற்றை நம்பிக்கை. ஆழ்மனதின் கனவை எட்டிப் பிடிக்க நேற்றைய இழப்பை மறந்து, நாளைய முயற்சியை நோக்கி ஓடு விடாமல்.. விடாமல்.

  7. உடற்பயிற்சியை பொறுத்தே உனது இலக்குகளும், மனவலிமையும் தீர்மானிக்கப்படுகின்றன.

  8. சாதிக்கும் போது பல தடைக்கற்கள் வரலாம், அந்த தடைக்கற்களை எடுத்து உடற்பயிற்சி செய்யுங்கள் உடல் வலிமை இரண்டு மடங்காகும்.

  9. சில இழப்புகள் வலியை தருகின்றன, சில இழப்புகள் நமக்கு வலிமையை தருகின்றன.

  10. இந்த உலகம் ஓர் மிகப் பெரிய உடற்பயிற்சி கூடம் அதில், நம்மை நாம் வலிமை உடையவர்களாக மாற்றிக் கொள்வதற்காக வந்திருக்கிறோம்.

  11. நீங்கள் தோற்கடிக்கப்படுவது நீங்கள் விழும் போது அல்ல, நீங்கள் கைவிடும் போது, இறுதியாக ஆரம்பித்தால் கூட வெற்றிப் பெற முடியும் தொடர்ந்து முயற்சி செய்யுங்கள்.

  12. ஒரு விஷயத்தை உன்னால் கனவு காண முடியுமென்றால், அதை உன்னால் செய்து முடிக்கவும் முடியும் உழைப்பின்றி இவ்வுலகில் ஊதியம் இல்லை.

இதையும் படியுங்கள்:
வாழ்வில் கனவு காணுங்கள் வெற்றி உங்கள் வசமாகும்!
gym motivation quotes

வாழ்வின் ஊன்றுகோலாக என்றென்றும் தினசரி கடைபிடிப்போம் நமக்கு ஏற்ற உடற்பயிற்சிகளை.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com