நீங்களும் சூப்பர் ஸ்டார் ஆகலாம் இதை மட்டும் 'கேட்டால்'...

family conversation
family conversation motivationImg credit: AI Image
Updated on

ஒரு குடும்பத்தில் எல்லோருடனும் அமர்ந்து பேசும்போது தாங்கள் பேசுவதை அடுத்தவர்கள் கேட்கவே விரும்புவார்கள். ஆனால், நீங்கள் அடுத்தவர் பேச்சை உன்னிப்பாக கூர்ந்து கேட்பவராக இருக்கும் போது நன்கு மதிக்கப்படுவீர்கள். இதனால், அடுத்தவர்களின் பேச்சை முழுமையாக புரிந்து கொள்ள முடியும்

நீங்கள் சம்பாஷனையில் ஈடுபடும்போது மிகவும் யோசித்து சரியான கேள்வியாக கேளுங்கள். மேலோட்டமாக கேள்விகளை கேட்பதைக் தவிர்த்து அவர்கள் நன்மையில் அக்கறை உள்ளவர்கள் போல் நடந்து சரியான கேள்விகளை கேளுங்கள்.

உங்கள் நண்பர் தன் குழந்தையின் புது விளையாட்டு பற்றிக் கூறினால், அதில் அவருடைய குழந்தையின் முன்னேற்றம் குறித்து விசாரியுங்கள்‌. இதன்மூலம், உங்கள் நண்பரோ அல்லது உறவினருக்கோ அவர்கள் மீதுள்ள உங்கள் அக்கறையைக் கண்டு உங்கள் மதிப்பு உயரும். இம்மாதிரி உரையாடல்கள் நண்பர்கள் உறவினர்களிடையே நல்ல பிணைப்பை ஏற்படுத்தும்.

நீங்கள் அலுவலக மீட்டிங்கில் பேசும்போது அடுத்தவர்களின் பங்களிப்பை முழுமையாக பாராட்டுங்கள்‌. உங்களை யாராவது பாராட்டினால் அந்த பாராட்டு உங்கள் குழுவினரின் கூட்டுமுயற்சியால் தான் சாத்தியமானது என்று கூறுங்கள். உங்களுக்கு மற்றவர்கள் மூலம் யோசனை கிடைத்தால், அதை முழுமையாக பாராட்டுங்கள்.

மிகவும் கடினமான நேரங்களிலும் முக்கியமான மீட்டிங்கில் பதட்டத்தை தவிர்க்க நீங்கள் பதில் சொல்வதற்கு முன்னால் மௌனம் சாதித்து பிறகு பேசுங்கள். இதனால் பதட்டத்தில் தவறான பேச்சுகள் தவிர்க்கப்படும். மற்றவர் கூறுவதை நன்கு உள்வாங்கிய பிறகு சிறிது நேரம் எடுத்து பதில் அளிப்பதால் அடுத்தவருக்கு நீங்கள் நன்றாக புரிந்து கொண்டிருப்பதை உறுதிபடுத்தும். அவசரப்பட்டால் பிரச்னை தான் உருவாகும்.

இதையும் படியுங்கள்:
3, 6, 9 மேஜிக்… பிரபஞ்சத்திடம் நீங்கள் கேட்பது உடனே கிடைக்க இந்த மூன்று எண்களை மட்டும் பயன்படுத்துங்கள்!
family conversation

உங்கள் குடும்பத்தினருடன் மிக முக்கியமான விஷயங்களை விவாதிக்கும் போது அவர்கள் முகத்தில் அடித்தாற்போல், "நீ கூறுவது தவறு" என்று கூறுவதை விட நீங்கள் கூறவிரும்பும் விஷயத்தைக் கூறி, "இதை என் பாணியில் இப்படி எதிர்கொள்ள விரும்புகிறேன்" என்று அடுத்தவர்களை காயப்படுத்தாமல் கூறலாம்.

அடுத்தவர்கள் எந்த சூழலில் உள்ளார்கள் என்பதை புரிந்து கொண்டு அதற்குத் தகுந்தாற் போல் நீங்கள் அவரிடம் பேசுங்கள். உதாரணமாக ஒருவர் பிரமோஷன் கிடைக்காமல் வருத்தப்படும் போது உங்கள் உத்யோக உயர்வு பற்றி அவரிடம் பெருமை பேசுவது சரியல்ல.

உங்கள் மீது குற்றம் இருந்தால் உடனே ஒப்புக் கொள்ளுங்கள். ஒரு மீட்டிங்கில் அடுத்தவர் பேசுவதை நீங்கள் தவறாக புரிந்து கொண்டால் அதை உடனடியாக ஒப்புக் கொள்ளுங்கள்‌. இதனால் உங்கள் மதிப்பு உயருமே தவிர குறையாது‌.

உரையாடலின் முடிவின் போது ஒரு சகஜமான நிலையில் இருங்கள்.பாதியில் செல்வது, மற்றவர்களை பேசவிடாமல் தடுப்பது, அரைகுறையாக உரையாடலை முடிக்காமல் மற்றவர்களோடு உரையாடியது இனிமையான சந்தர்ப்பமாக இருந்தது என்ற வகையில் முடிக்க வேண்டும்.

உரையாடல் முடியும் போது இது உங்களுக்கு நல்ல மதிப்பைப் பெற்றுத்தரும்‌. மேற்கூறிய பழக்கங்களை நீங்கள் கொண்டிருந்தால் நீங்கள் மற்றவர்களின் மதிப்பில் உயர்ந்திருப்பீர்கள்.

logo
Kalki Online
kalkionline.com