முயற்சியை நிறுத்தும் முன் இந்த 96 வயது முதியவரைப் பற்றித் தெரிந்து கொள்ளுங்கள்!

Harry Bernstein
Harry Bernstein
நான்சி மலர்

வணக்கம். என் பெயர் நான்சி மலர். என்னைப் பற்றி தெரிந்து கொள்ள ஆர்வம் காட்டியதற்கு நன்றி. நான் B.E. Computer science Engineering முடித்துள்ளேன். எனக்கு சிறுவயது முதலே எழுதுவதில் அதிக ஆர்வம் உண்டு. ‘எழுத்துக்கள் மூலம் நம் எண்ணங்களை எளிதில் வெளிப்படுத்த முடியும்’ என்று நம்புகிறேன். கட்டுரைகள், கவிதைகள் எழுதுவதில் அனுபவம் உண்டு. Content writing துறையில் சாதிக்க வேண்டும் என்ற ஆர்வம் உள்ளது. மோட்டிவேஷன், பயணம், ஆரோக்கியம், ஃபேஷன், ஆன்மீகம் போன்ற கட்டுரை எழுதுவதில் ஆர்வம் அதிகம். என்னுடைய எழுத்து வாசகர்களாகிய உங்களை கவர்ந்தால், அது எனக்கு மகிழ்ச்சியே! ‘ இன்னும் எதிர்காலத்தில் உங்கள் மனதில் என் எழுத்துக்கள் மூலம் இடம் பிடிப்பேன்’ என்று முழுமையாக நம்புகிறேன்.

Updated on

வெற்றி என்பது ஒரு நாளில் கிடைப்பதல்ல; அது பல தோல்விகளைத் தாண்டிய பின்னரே நம்மை வந்தடைகிறது. பல ஆண்டுகள் முயற்சி செய்தும் பலன் கிடைக்கவில்லையே என்று சோர்வடையும் எவருக்கும், ஹாரி பெர்ன்ஸ்டீனின் வாழ்க்கை ஒரு மிகப்பெரிய பாடம். 96 வயதில் உலகையே திரும்பிப் பார்க்க வைத்த ஒரு சாதனையாளரின் கதை.

வாழ்க்கையில் சும்மா இருப்பவர்கள் கூட நிம்மதியாக இருக்க முடியும். ஆனால், தினம் தினம் ஒரு முயற்சியைச் செய்துகொண்டு தோல்வியை அடைபவர்களால் நிம்மதியாக வாழவே முடியாது. அந்த மாதிரி நிலையில், நீங்கள் கண்டிப்பாக இவரைப் பற்றித் தெரிந்துகொள்ள வேண்டும்; அவர்தான் ஹாரி பெர்ன்ஸ்டீன் (Harry Bernstein).

இவர் ஒரு பத்திரிகை எழுத்தாளர் மற்றும் பதிப்பாளர். இவர் 90 வயது வரை எழுதியுள்ளார்; ஆனால், இவர் எழுதியதால் இவருக்கு எந்தப் பயனும் இல்லை. இவர் ஏதாவது ஒரு விருந்திற்குச் செல்லும்போது எல்லோரும் இவரைக் கிண்டல் செய்வார்களாம். "உன்னையும் யாருக்கும் தெரியவில்லை, உன் புத்தகத்தையும் யாருக்கும் தெரியவில்லை; பிறகு எதற்காக எழுதுகிறாய்?" என்று கேலி பேசுவார்களாம்.

ஆனால், அவரிடம் ஒரு நேர்மறையான குணம் இருந்தது; அதுதான் 'தொடர்ந்து முயற்சி செய்வது'. தன்னுடைய 96-ஆவது வயதில் 'The Invisible Wall' என்ற ஒரு புத்தகத்தை எழுதுகிறார். அந்தப் புத்தகம் அவருக்குப் பெயர், புகழ், பணம் என்று அனைத்தையுமே சம்பாதித்துக் கொடுத்துள்ளது.

ஒருவேளை நீங்களும் இந்த மனநிலையில் இருந்தீர்கள் என்றால் - அதாவது, "எவ்வளவோ முயற்சி செய்துவிட்டேன், இனி முடியாது விட்டுவிடலாம்" என்று நினைத்தால் - ஒரு விஷயத்தை நன்றாக நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்: நீங்கள் பயணிக்க வேண்டிய தூரம் இன்னும் நிறைய இருக்கிறது.

இதையும் படியுங்கள்:
கோபம் உங்கள் உடலையும் மனதையும் அழிக்கிறதா? இதோ Stoicism தரும் தீர்வு!
Harry Bernstein

உங்கள் வாழ்க்கை என்னும் பயணத்தில் எந்த மைல்கல்லில் வேண்டுமானாலும் வெற்றி ஒளிந்திருக்கலாம். அது நடக்க வேண்டுமென்றால் நீங்கள் செய்ய வேண்டியது ஒன்றே ஒன்றுதான்: பயணத்தை மட்டும் நிறுத்தாதீர்கள்! உங்கள் பயணத்தில் சலிப்பு ஏற்படலாம்; களைப்பு ஏற்படலாம்; ஆனால், முயற்சி செய்வதை மட்டும் கைவிடாதீர்கள்.

உங்களைச் சுற்றியிருப்பவர்கள் உங்களைக் கிண்டல் செய்யலாம், உங்கள் உழைப்பைக் குறைத்து மதிப்பிடலாம். ஆனால் ஹாரியைப் போல உங்கள் இலக்கின் மீது உங்களுக்கு நம்பிக்கை இருந்தால், காலம் ஒருநாள் உங்களுக்காகப் பதில் சொல்லும். உங்கள் பயணத்தைத் தொடருங்கள்; விடாமுயற்சி என்ற ஒன்றைத் தவிர வெற்றிக்கு வேறு குறுக்கு வழிகள் எதுவுமில்லை.

logo
Kalki Online
kalkionline.com