கோபம் உங்கள் உடலையும் மனதையும் அழிக்கிறதா? இதோ Stoicism தரும் தீர்வு!

Stoicism
StoicismImg credit: AI Image
ராமன். செல்வராஜ்

கோவில் நகரம் குடத்தையில் வசித்து வரும் இவர் விலங்கியலில் முதுகலை பட்டமும், வெகுஜன தொடர்பு மற்றும் பத்திரிகை துறையில் முதுகலை பட்டமும் பெற்றவர். தற்சமயம் EXNORA , 'உலக தமிழர் அறக்கட்டளை' போன்ற அமைப்புகளில் தன் பங்கை ஆற்றி வருகிறார். இவரது இலக்கியத் தொடர்பு என்பது ஒரு கவிதை மூலமாக 'கவிநானூறு' என்கிற இணையதளத்தில் தொடங்கியது. தொடர்ந்து கட்டுரைகளும் வேறுசில தளங்களில் வெளியாகின. செப்டம்பர் -17- 2025 முதல் கல்கி குழுமத்துக்காக சிறுகதைகள், தத்துவங்கள், ஆன்மீக புரிதல்கள் ஆகியவற்றை எழுதி, பகிர்ந்து வருகிறார். இவரது கதை கட்டுரைகளை கல்கி ஆன்லைன் இதழ்களிலும் Motivation, பசுமை/ சுற்றுச்சூழல், மற்றும் கலை கலாச்சாரம், ஆன்மீகம், தத்துவம் ஆகிய பகுதிகளிலும் காணலாம்.

Updated on

உறுதிப்பாட்டுவாதம் - Stoicism என்பது நம் செயல்களால் அல்லது நம்முடன் எந்தத் தொடர்பும் இல்லாத மற்றவர்களின் செயல்களால் வரும் துன்பங்களை எதிர்கொள்ளும் ஒரு தத்துவம்.

இவ்வாறாக வரும் வாழ்க்கையின் துன்பங்களால் தாக்கப்படாமல், நடுநிலையைப் பின்பற்றுவதைக் குறிக்கிறது.

கர்மா, நம் சொந்த செயல்களின் விளைவுகளாக விளக்கப்படுகிறது.

ஆனால், சுனாமி, நிலச்சரிவு, நில நடுக்கம், வெள்ளம் மற்றும் தீ போன்ற இயற்கை பேரழிவுகளுக்கான செயல்களுக்கு, நாம் பிரபஞ்ச சட்டத்தை கேள்வி கேட்க முடியுமா?

ஆனால், இவற்றின் காரணங்களைப் புரிந்துகொண்டு, சரிசெய்தல் நம்மால் முடியும் தானே!!

ஆனால், பிரபஞ்ச சட்டத்தின் முதன்மை கோட்பாடு - பிறப்பு மற்றும் இறப்பு.

அதை மதித்து செயல் ஆற்றும் விழுமியங்களை நமக்கு வழங்கியவர் தான் Marcus Aurelius.

உறுதிப்பாட்டுவாத (Stoicism) தத்துவத்தின் முக்கிய மெய்யியலராகப் புகழ்பெற்றவர்.

Seneca, Epictetus போன்றோருடன் இணைந்து இத்தத்துவத்தின் உருவகமாக விளங்கினார்.

இவர் எழுதிய தனிப்பட்ட குறிப்புகள் 'சிந்தனைகளாக' வெளி வந்து - ஆங்கிலத்தில் Meditations - உலகப் புகழ் பெற்றது.

உறுதிப்பாட்டுவாதம் என்பது ....

துன்பங்களைப் பரிசீலிப்பது,

தீர்வுகளை கண்டு அறிவது,

காரணத்துடன் தொடர்ந்து செல்வது.

இதற்கு நேரமும், காலமும் நமக்கு உதவி செய்யும். ஆனால், அதற்கு பொறுமை அவசியம்.

இடம், காலம் அறிந்து செயல் ஆற்றினால் இதற்கான தீர்வுகளைக் காணலாம்.

நம்முடைய எல்லா உணர்வுகளும் வெளிப்புற காரணிகளால் வருகின்றன.

அவை கோபங்களாக மாறாமல், நல்ல விழுமியங்களாக வெளிப்பட நம் நுட்பமான சிந்தனைகள் நமக்கு உதவும்.

ஏனென்றால், கோபம் உடலை அழிக்கிறது; அதே நேரத்தில் மனதையும் பாதிக்கிறது.

இதையும் படியுங்கள்:
பணம் பந்தியிலா? குணம் குப்பையிலா? எது உங்களை உயர்த்தும்?
Stoicism

இதற்கு தியானம் உதவிகரமாக இருக்கும். அதற்கு நிதானம் தேவை.

நேரமும், காலமும் கைகூட நேர் வினை ஆற்ற வேண்டும்...

ஒருவேளை கட்டாயமாக எதிர்வினை செய்ய வேண்டி இருந்தால், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று அறிவுறுத்துகிறார்.

'முன்னெச்சரிக்கை'க்கு நேர்மறை சிந்தனை அவசியம்.

தினமும் ஒரு எளிய நன்றி பிரார்த்தனை. நாம் கற்பனை செய்யாதவற்றை விட அதிகமாக அளித்ததற்காக..

நமக்கு வாழ்க்கை அளித்ததற்காக..

என்றும் நம்மை ஆசீர்வதித்து நல்லவற்றைச் செய்யும் குடும்பமும் நண்பர்களும் அளித்ததற்காக.. கடவுளுக்கு நன்றி தெரிவிப்பது.

logo
Kalki Online
kalkionline.com