
பணிவு என்பது மிகச்சிறந்த குணம் ஆகும். ஒரு மனிதனுக்கு செல்வம் கல்வி அறிவு பதவி என எத்தனை சிறப்புகள் இருந்தாலும் அவற்றுக்கெல்லாம் மகுடம் வகுதததுபோல பணிவு என்கிற ஒரு குணம் இருந்தால் அது ஒரு மனிதன் அவருக்கு நிறைய சிறப்புகளைப் பெற்று தரும். அதிலும் தலைமைப் பொறுப்பில் இருப்பவர்களுக்கு பணிவு என்பது மிகவும் அவசியமான ஒன்று.
நம்பிக்கையை உயர்த்துகிறது
ஒரு தலைவர் பணிவான குணத்தை கொண்டிருந்தால் அவர் தன்னம்பிக்கை என் அளவு உயரம் அவர் மீது உயரும் அவர் மீது பிறர் வைத்திருக்கும் நம்பிக்கையும் அதிகரிக்கும் ஏனென்றால் பணிவான தலைவர்கள் தங்கள் தவறுகளை ஒப்புக்கொண்டு திருத்திக் கொள்கிறார்கள். இதனால் அவர் தனது குழுக்களுக்கும் தான் சார்ந்த நிறுவனத்திற்கும் அல்லது தான் வகிக்கும் பதவிக்கும் சிறப்பு சேர்க்க முடியும். கர்வம் கொண்ட மனிதர்கள் தங்கள் குறைகளை ஒப்புக்கொள்ள மாட்டார்கள்.
ஒத்துழைப்பு;
பணிவான தலைவர்கள் தங்கள் தொண்டர்கள் மற்றும் சக பணியாளர்கள் எளிதில் அணுகக் கூடிய வகையில் இருப்பார்கள் அதனால் தங்களுடைய கருத்துக்களை தலைவரிடம் வெளிப்படையாக பகிர்ந்துகொள்ள வசதியாக இருக்கும் இதனால் அந்த குடும்பத்திற்கு புதுமையான கருத்துக்கள் கிடைக்கும் மேலும் அந்த நிறுவனம் இன்னும் சிறப்பாக முன்னேறும்.
ஊழியர்களை பாராட்டுதல்;
தான் என்ற அகங்காரம் இல்லாத தலைவர்கள் மட்டுமே தமது ஊழியர்களை அவர்களின் சிறப்புகளை அங்கீகரித்து பாராட்டுகிறார்கள் இதனால் ஊழியர்கள் இன்னும் சிறப்பாக செயல்பட தொடங்குவார்கள் இதனால் ஒட்டுமொத்த நிறுவனமும் நன்கு வளரும்.
முடிவெடுக்கும் திறன்;
தன்னுடைய சகாக்கள் அல்லது ஊழியர்கள் போன்றவர்களை கலந்த ஆலோசித்து கருத்துக்களை கேட்டிருந்து முடிவெடுப்பார் பணிவுள்ள தலைவர் இதனால் அந்த முடிவுகள் சிறப்பாக இருக்கும் ஆக்கப்பூர்வமான மாறுபட்ட கண்ணோட்டங்களுக்கு முக்கியத்துவம் தருவார்கள் அதனால் சிக்கலான சவால்களை கூட சிறந்த முடிவெடுக்கும் திறன் கொண்டு சமாளிப்பார்கள்.
கனிவைத் தரும் பணிவு;
தன்னுடைய ஊழியர்கள் தெரிந்தோ தெரியாமலோ தவறு செய்தால் அவர்களைக் கடுமையாக தண்டிக்க மாட்டார்கள் பணிவுள்ள தலைவர்கள். அவர்களைப் பொறுமையாக விசாரித்து என்ன நடந்தது? ஏன் இந்தத் தவறு நேர்ந்தது என நிதானமாக விசாரிப்பார்கள். கனிவு ல்க்ளந்த கண்டிப்புடன் மீண்டும் தவறு செய்யக் கூடாது என எச்சரிக்கை செய்வார்கள். கோபமாக தண்டிக்க மாட்டார்கள். அதே சமயம் குழுப்பணியில் ஏதேனும் தவறுகள் நேர்ந்து விட்டால், அதற்காக ஊழியர்களைக் குறை கூறாமல், தானே அந்தத் தவறுகளுக்கு பொறுப்பேற்றுக் கொள்வார்கள்.
சிறந்த ரோல் மாடல்;
பணிவான தலைவர்கள் சுயமுன்னேற்றத்திற்கான சிறந்த ரோல் மாடல்கள் திகழ்வார்கள் நிறுவனத்திற்குள் தொடர்ச்சியான கற்றல் மற்றும் வளர்ச்சி வளர்ச்சியின் கலாச்சாரத்தை ஊக்குவிக்கிற ஊக்குவிக்கிறார்கள். தலைவருடைய நல்ல பண்புகளை பார்த்து நிறைய எதிர்கால தலைவர்கள் உருவாவார்கள்.
நீண்ட கால வெற்றி;
பணிவை வெளிப்படுத்தும் தலைவர்கள் பங்குதாரர்களுடன் வலுவான உறவுகளை உருவாக்குவார்கள் நேர்மறையான நிறுவன கலாச்சாரத்தை வளர்ப்பதற்கான வாய்ப்புகளை அதிகரிக்கச் செய்வார்கள் இதனால் தலைவர் மற்றும் அமைப்பு இரண்டும் நிலையான வெற்றியை அடையும் அவர்களுக்கு எப்போதும் நீண்ட வெற்றி நீண்ட கால வெற்றி கிடைத்துக்கொண்டே இருக்கும். எனவே பணிவாக இருக்கப் பழகுவோம்.