
இன்றைய அவசர காலகட்டத்தில் நெருக்கடி மேலாண்மை தவிர்க்க முடியாதது. எதிர்பார்ப்புகளோடு, எதிர்பார்க்கும் வண்ணம் நடைப் பெறவேண்டும் என்ற எண்ணத்தோடு பலவித திட்டங்கள் தயாரித்து அதற்கு ஏற்றபடி தயார் நிலையில் செயல்பட தொடங்கினாலும், எதிர்பாரத முடிவுகளை சந்திக்கும் நிலைமைக்கு ஆளாவது தவிர்க்க முடியாத ஒன்றாகிவிட்டது.
திட்டம் தீட்டியபடி நடைபெறாமல் எதிர்பாரத தடங்கல் குறிக்கிட்டு அதனால் பிரச்னைகள் உருவாகின்றன. இத்தகையை பிரச்னைகளை எதிர்கொண்டு தீர்வுகாண வேண்டிய காட்டாய சூழ்நிலை ஏற்படுகின்றது.
இத்தகையை எதிர்பாரத நிலைமையை சமாளிக்க தயராக இல்லாததால் அவர்கள் இந்த பிரச்னையயுடன் அதிகரிக்கும் குழப்பம், கால தாமதம், கூடுதல் செலவு, கை விட்டுப்போகும் சந்தர்ப்பங்கள் போன்ற பல்வேறு அழுத்தங்களை வேறு சந்தித்து தீர்வு காணவேண்டிய நிலைக்கு ஆளாகி தள்ளப்படுவது மேலும் தடையாக உருவாகலாம்.
இத்தகையை நெருக்கடி சமயத்தில் அதை சரிவர கையாண்டு தீர்வு காண முயற்சி செய்து நெருக்கடி மேலாண்மை சிறப்பாக செயல்பட சில திறமைகள் கண்டிப்பாக அவசியம் தேவை.
நெருக்கடி மேலாண்மை எதிர்பார்த்த ரிசல்ட்டை கொடுக்க தடைக் கல்லாக செயல்படுவது தேவையில்லாமல் அளவுக்கு அதிகமாக பதட்டப்படுவது.
நடக்க கூடாது நடந்ததன் விளைவுதான் இத்தகையை நெருக்கடி சூழ்நிலை. அதை நிவர்த்தி செய்ய பதட்டம் கை கொடுக்காது. மேலும் தாமதம்தான் ஏற்படுத்தும்.
நிதானமாக சிந்தித்து செயல்பட்டால் நெருக்கடி மேலாண்மை நேர்மறை முடிவு கிடைக்க வழி வகுக்கும்..
சிந்திப்பதுடன் எவ்வகையில் அந்த சூழ்நிலைக்கு ஏற்ற மாதிரி செயல்பட்டு அடுத்த நிலைக்கு நகரலாம் என்ற கோணத்தில் திட்டமிடுவதும், செயல்படுவதும் தீர்வுகாண உதவும்.
நெருக்கடியான சூழ்நிலையில் சமாளித்து முன்னேறும் சமயத்தில் சில எதிர்பாரத இழப்புகளை தவிர்க்க முடியாது. தாங்கிக்கொண்டு செயல்பட வேண்டியது அத்தியாவசியமாகின்றது. உடன் சில தியாகங்கள் செய்வதும் அவசியமாகும்.
பதவி வித்தியாசம் பாராமல் சில வேளைகளில் அந்த சூழ்நிலை தருணத்தில் இருப்பவர்கள் கூடி ஒன்று சேர்ந்து அங்கு தேவையானவற்றை செயல்படுத்த உடனடியாக களத்தில் இறங்கி செயல்பட வேண்டும். இத்தகைய தன்னலமற்ற சேவை செயல் மற்றவர்களுக்கு தன்னம்பிக்கையையும், உற்சாகத்தையும் அதிகரிக்க உதவும்.
நெருக்கடி மேலாண்மை பல எதிர்பாரத முன்னேற்றங்களை கையாளவேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்படும்.
நெருக்கடி மேலாண்மை பல்வேறு நெருக்கடிகளை சந்தித்து, சூழ்நிலைக்கு ஏற்ப சிந்தித்து செயல்பட்டு குறிப்பிட்ட நெருக்கடியை முறியடித்து அடுத்த கட்டத்திற்கு நகர்வதற்கு அனுபவம் மிகவும் முக்கியம்.
எதிர்பாரத வேலை நிறுத்தம், எதிர்பார்த்த பணம் கிடைக்காமல் போவது, உற்பத்திக்கு தேவையான மூலப்பொருட்கள் போதிய அளவு கிடைக்காமல் போவது, தயாரித்த பொருட்களை அனுப்ப முடியாமல் தடங்கலாக வரும் லாரிகள் டிரான்ஸ்போர்ட் ஸ்ட்ரைக், இயற்கை பேரழிவு போன்றவை நெருக்கடிகள் ஏற்படுத்த கூடியவை.
கூடிய மட்டும் திட்டங்கள் போடும் சமயத்தில் எதிர்பாரத விதமாக ஏற்படும் நெருக்கடிகளை சமாளித்து முன்னேறுவதற்கு தேவையான நடவடிகைகள் மற்றும் சப்போர்டுக்கள் குறித்தும் ஆலோசித்து தேவையான நடவடிகைகள் முன் கூட்டியே எடுத்துக்கொண்டால், நெருக்கடியான சமயத்தில் ஏற்படும் இழப்புகள், சேதங்களை பெரிதளவில் தவிர்க்கலாம். காலதாமதம் இன்றி மீண்டும் வரலாம்.