
பொதுவாகவே மனித வாழ்வில் சோதனையும் வேதனையும் சம பங்கு வகிக்கின்றன. சிலருக்கு உறவுகள் மற்றும் நட்பு வட்டங்களில் பலவகையிலும் முன்னேற்றத்திற்கான ஆலோசணைகள் வருவதோடு, பொருளாதார ரீதியாகவும் நல்ல ஈடு பாட்டோடு அவர்களால் முடிந்த அளவுக்கு உதவி செய்கிறாா்கள்.
சிலர் அதை பெருமையாக சொல்வதும் உண்டு. சிலரோ பெருமை தேடிக்கொள்வதில்லை. இது ஒரு ரகம். இது நல்ல உறவுக்கும் ஆரோக்கியமான நட்புக்கும் எடுத்துக் காட்டாகவே அமைகிறது என்றே சொல்லலாம். அதற்காக நமக்குவ உதவி செய்தவர்களுக்கு தொடர்ந்து தொல்லை தரக்கூடாது.
அதுமட்டுமல்ல நாம் அடுத்தவரிடம் உதவி பெறுவது பொிதல்ல! அதேநேரம் அவர்களுக்கு ஒரு சிரமம் என்ற நிலையில் நாமும் உதவி செய்தாக வேண்டும், அதுதான் நல்ல உறவு மற்றும் நட்புக்கு இலக்கணமாகும்.
பொதுவாக ஒருவரது சாதனையில் கை பிடிப்பவர் களைவிட, அவர்களுக்கு ஏற்பட்டுள்ள சோதனையின்போது கரம்பிடிப்பதே நல்ல நட்பு மற்றும் உறவுக்கு வலு சோ்க்கும். அந்த நேரத்தில் பழசை மறந்தவர்களை யாரும் மன்னிக்க முடியாது. இதுபோன்ற தருணத்தில் நமது மனசாட்சிக்கு பாதகமில்லாமல் நடந்து கொள்வதோடு வாா்த்தைகள், செயல்பாடுகளில் ,கவனம் ,நிதானம் கடைபிடிக்க வேண்டும்.
ஆமாம் அவர் என்ன பொிய உதவி செய்துவிட்டாா்! இவர் இல்லாவிடில் வேறு ஒருவர் செய்திருப்பாா், என அகம்பாவமாய், அகந்தையுடன் திருவாய் மலர்வதால் உறவில் கீரல், நட்பில் விாிசல், விழுவதை யாராலும் தடுக்கவே முடியாது.
அதனால்தான் தன் கையே தனக்கு உதவி என்பதுபோல நமது விடாமுயற்சியால் எதையும் சமாளிக்கும் திறனை வளா்த்துக் கொள்ளவேண்டும். சில விஷயங்களை நாமே நம்மால் முடிந்த வரை சமாளிப்பதே நல்லது. நமது வாழ்க்கையை அடுத்தவர் வாழ்க்கையோடு ஒப்பிடாமல் நம்மிடம் என்ன தகுதி திறன் இருக்கிறதோ அதைக் கொண்டு நாம் திருப்தி அடைந்தாலே நம்மை விட சந்தோஷமானவர்கள் யாருமே இருக்கவே முடியாது, என்ற சிந்தனை நம்மிடம் மேலோங்கி இருப்பதே நல்ல பண்பாடான செயல்.
ஆக சோதனையும் வேதனையும் வரும்போது அதைத் தாங்கிக்கொள்ளும் மனப்பக்குவம் இருந்தாலே எதையும் எளிதில் சமாளிக்கலாம்.
மகிழ்ச்சியான நேரங்களில்தான் மனிதன் அர்த்தமுள்ள வாழ்க்கையை வாழக்கற்றுக்கொள்ள வேண்டும் அதுவே நல்லது.
எப்போதும் எந்த நிலையிலும் அடுத்தவர்களையே சாா்ந்திராமல் வாழப்பழகிக்கொள்வதே சிறப்பான ஒன்று. சோதனை வரும்போது துவளாமல் சாதனை வரும்போது துள்ளாமல் இருப்பதே நல்ல விஷயமாகும்"!