வெற்றி உங்களைத் தேடி வரும்: நீங்கள் செய்ய வேண்டியது இது மட்டும்தான்!

Successful life
Successful lifeImg Credit: AI Image
ம.வசந்தி

மங்கையர் மலரின் நீண்டகால வாசககயான எனக்கு, புதிய புதிய விஷயங்களை தெரிந்து கொள்வதில் ஆர்வம் அதிகம். ஊக்கப்படுத்துவதும் உற்சாகப்படுத்துவதும் செயலற்றவர்களையும் ,செயல்பட வைக்கும் என்பதால், மோட்டிவேஷன் கட்டுரைகள் எழுவது மிகவும் பிடித்தமான ஒன்று .எனது எண்ணங்கள் நேர்மறையான சிந்தனை கொண்ட   கல்கி குழுமத்தோடு ஒன்றிப் போவதால் அவர்களுடன் கைகோர்த்து வீறு நடை போட்டுக் கொண்டிருக்கிறேன்.

Updated on: 

தன் குறிக்கோளிலேயே மிக உறுதியாக இருக்கும் எவரும், தன் குறிக்கோளை நிறைவேற்ற நம்பிக்கையுடன் உழைக்கும் எவரும் உலகத்தைக் கூட வெல்லலாம்.

அமெரிக்காவில் மான்டிரிக் என்பவர், 6 அடி 6 அங்குலம் உயரமும் 145 கிலோ எடையும் உள்ளவர்; அவர் சிறந்த கால்பந்தாட்ட வீரராகத் திகழ்ந்தார். இவர் தனது திறமையைத் தக்கவைக்க, உடலைப் பாதிக்கும் அளவு கடுமையான பயிற்சி மேற்கொண்டார். தனது உயரத்திற்கும் எடைக்கும் ஒரு நாளுக்கு 15,000 கலோரி சத்து கொடுக்கும் உணவு இவருக்குத் தேவைப்பட்டது. இவ்வளவு உணவை உண்ண இவரது கால்பந்துத் தொழில் இடங்கொடுக்கவில்லை. உழைப்பிற்கும் பிழைப்பிற்கும் ஏற்றதாக இவரது தொழில் அமையவில்லை.

இதனால் தொழில் களத்தை மாற்ற விரும்பினார். தனக்குத் தெரிந்ததும் தன்னால் செய்யக்கூடியதுமான தொழிலைத் தேர்ந்தெடுக்க முடிவு செய்து, 'ஆண் அழகன்' போட்டிக்குத் தன்னைத் தயார் செய்தார். வருவாய் பெருகியது; இடையிடையே கால்பந்தும் ஆடினார், குத்துச் சண்டைப் பயிற்சியும் மேற்கொண்டார். குத்துச் சண்டையில் 'சண்டமாருதம்' என அழைக்கப்பட்ட டைசன் என்பவருடன் மோத இவருக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. அழைத்தவர்கள், 'ஜெயித்தாலும் தோற்றாலும் ஐந்து லட்சம் டாலர் கொடுப்போம்' என ஒப்பந்தம் செய்ய முன்வந்தனர்.

ஆனால், மான்டிரிக் சம்மதிக்கவில்லை! 'பத்து லட்சம் கொடுத்தால் களத்தில் குதிப்பேன்' எனத் தன்னம்பிக்கையுடன் கூறினார். தனக்குத் தெரிந்த விளையாட்டுப் போட்டிதான் என்பதால், அதற்காக மேலும் உழைக்க அவர் ஆயத்தமாக இருந்தார்.

மான்டிரிக் கால்பந்து உலகை வென்றார்; விளம்பர உலகை வென்றார். சினிமா உலகில் வெற்றிக்கொடி நாட்டத் தொடர்ந்து உழைத்துக்கொண்டே இருந்தார். 'முயற்சியுடன் செயல்படுகிறவர்களையே வெற்றி தழுவும்; பின்விளைவுகளுக்கு அஞ்சுகின்ற கோழைகளைத் தேடி வெற்றி செல்லாது' என்ற ஜவஹர்லால் நேருவின் கூற்றுக்கேற்ப, தன்னுடைய குறிக்கோளை நிர்ணயித்துக் கொண்டு முயற்சியுடன் உழைக்கிறவர்களுக்கு வெற்றி நிச்சயம்.

இதையும் படியுங்கள்:
கோபத்தில் ஏன் கத்துகிறோம்? - ஒரு வாழ்வியல் பார்வை!
Successful life

ஆகவே, குறிக்கோளில் தெளிவு பெறுங்கள். எதைத் தேர்ந்தெடுத்தாலும் உங்களுக்குத் தெரிந்த, உங்களுக்குத் தொடர்புடைய, உங்களால் செய்யக்கூடியதாக அமைந்துள்ளதையே குறிக்கோளாகத் தேர்ந்தெடுங்கள். நீங்கள் உழைத்து வெற்றி பெறுவீர்கள்! நல்ல குறிக்கோளுள்ள, பிழைப்பைத் தரும் தொழில்கள் நிம்மதியான வாழ்வைத் தரும்.

வெற்றி (Successful life) உங்களைத் தேடி வந்து கொண்டிருக்கிறது; அதை வரவேற்க ஆயத்தமாகுங்கள்!

logo
Kalki Online
kalkionline.com