இன்றைய காலத்தில், நம்முடைய அலுவலக வாழ்க்கை மிகவும் முக்கியமானதாக இருக்கிறது. வீட்டைவிட வேலை இடத்தில் செலவழிக்கும் நேரமே அதிகமாக உள்ளது. இவ்வாறான சூழ்நிலையில் அலுவலகத்தில் ஏற்படும் பிரச்னைகள், பணி சுமைகள் மற்றும் மனித உறவுகள் அனைத்தும் ஒரே நேரத்தில் சமமாக சமாளிப்பது கடினமாகும்.
அதனால், அங்கே ஏற்படும் பிரச்னைகளை சமாளிக்கக்கூடிய திறன்கள் மிக முக்கியமானதாக மாறியுள்ளது. இந்நிலையில், அலுவலகத்தில் நடக்கும் அரசியலை புத்திசாலித்தனமாக சமாளிப்பது எப்படி என்பது பற்றி இங்கே வாசிக்கலாம்.
ஆபிஸ் பாலிடிக்ஸ் என்றால் என்ன?
பாலிடிக்ஸ் என்ற சொல் இன்று பெரும்பாலானவர்களுக்கு எதிர்மறையான அர்த்தத்தை ஏற்படுத்துகிறது. அரசியலைப் போன்று, அதிகாரம் பிடிக்க சிலர் செய்யும் வேலையாகவே பலரும் அதை நினைக்கிறார்கள். ஆனால், ஆபிஸ் பாலிடிக்ஸ் என்பது சக ஊழியர்கள் நம்மைப் பற்றி என்ன நினைக்கிறார்கள், யார் மேலாளரிடம் நெருக்கமாக இருக்கிறார்கள், யார் எதைச் சொல்கிறார்கள் என்றெல்லாம் நம் மனதில் தோன்றும் எண்ணங்களே. இது அனைத்தும் நம்மை குழப்பத்தில் ஆழ்த்தும்.
பாலிடிக்ஸ் எப்போது தோன்றுகிறது?
நம்முடைய இடத்தை தக்க வைத்து கொள்வதற்கு நம்மை சுற்றி உள்ளவர்கள் என்ன செய்கிறார்கள் என்பதில் அதிக ஆர்வம் காட்டி வருகிறோம். இப்படியான சூழலில், நம்முடைய பதவியைத் தக்க வைத்துக்கொள்வதற்கான செயல்களை செய்யாமல் இது போன்ற செயல்களில் ஈடுபடுவதால் சக ஊழியர்களுக்கு இடையேயான நம்பகத்தன்மை உடைக்கிறது.
இதுவே, அரசியல் சூழலின் ஆரம்ப நிலை ஆகும்.
எப்படி சமாளிப்பது?
ஏதேனும் பிரச்சனை ஏற்பட்டால், நேரடியாக மேலாளரிடம் பேசுங்கள்.
யாரையும் பழி பேச வேண்டாம்.
உங்கள் வேலையை நேர்மையாகச் செய்யுங்கள்.
உங்கள் திறமையைத் தயங்காமல் வெளிப்படுத்துங்கள்.
எல்லோரிடமும் நன்றாக பழக முயலுங்கள்.
ஒருவர் மீதும் வெறுப்பும், பொறாமையும் கொள்ள வேண்டாம்.
நல்ல வேலை சூழல் என்றால் என்ன?
ஒரு நல்ல வேலை இடம் என்றால் அங்கு அனைவரும் ஒருவரை ஒருவர் மதிக்க வேண்டும். மேலாளர்கள், ஊழியர்களை உணர்வோடு புரிந்துக்கொண்டு, அவர்களின் சிக்கல்களுக்கு தீர்வு காணும் முயற்சியை மேற்கொள்ள வேண்டும். இதுவே ஒரு நல்ல வேலை சூழலை உருவாக்கும்.
அலுவலகத்தில் சரியாக வேலை பார்ப்பது மட்டுமல்லாமல் உறவுகளும் முக்கியம். ஒருவருக்கு தூய்மையான மனநிலை இருந்தால் தான் வேலை சரியாகச் செய்ய முடியும். பயம், மன அழுத்தம், தாழ்ந்த மனநிலை எல்லாம் வேலை திறனை குறைக்கும்.
அதன் அடிப்படையில், இன்றைய இளம் தலைமுறைக்கு, திறமைகளுடன் உறவுகளையும் சரியாக பாதுகாக்க திறனும் பயிற்சியும் அவசியம் தேவை. அலுவலகத்தில் நடக்கும் அரசியலை புத்திசாலித்தனமாக சமாளித்தால், சக ஊழியர்களோடு நாமும் சேர்ந்து முன்னேறலாம் என்பதை புரிந்துக் கொள்வது அவசியம்.