
வாழ்க்கைக்கு நம் மீது எந்த வெறுப்பும் கிடையாது. அது எப்போதும் நம்மை மன்னித்து கொண்டே இருக்கிறது. நாம் இயற்கையோடு இசைந்து சிந்திப்பதன் மூலம் வாழ்க்கை நமக்கு ஆரோக்கியம், வலிமை, இணக்கம், சமாதானம் ஆகியவற்றை கொண்டு வருகிறது.
எதிர்மறையான வேதனையூட்டும் நினைவுகள், கசப்புணர்வு, மற்றும் தீயஎண்ணங்கள் நமக்குள் இருக்கும் வாழ்க்கை சிந்தனையின் சுதந்திரமான ஓட்டத்தில் இடைஞ்சல்களையும், தடைகளையும் ஏற்படுத்தும்.
மனநெகிழ்ச்சியுடன் நோயின்றி இருக்க மன்னிப்பின் அவசியம்
மன அமைதிக்கும், ஒளிமயமான ஆரோக்கியத்திற்கும் அடுத்தவர்களை மன்னித்தல் மிகவும் இன்றியமையாதது. நமக்கு நல்ல ஆரோக்கியமும் மகிழ்ச்சியும் வேண்டுமென்றால் நமக்கு தீங்கு விளைவித்தவர்கள் அனைவரையும் மன்னிக்க வேண்டும். நம்முடைய எண்ணங்கள் தெய்வீக விதி மற்றும் தெய்வீக ஒழுங்குடன் ஒத்திருக்குமாறு பார்த்து கொள்வதன் மூலம் நம்மை நாமே மன்னித்துக் கொள்ளலாம். முதலில் அடுத்தவர்களை நாம் மன்னிக்காவிட்டால் நம்மை நாமே மன்னிக்க முடியாது.
கீல்வாதம் முதல் மாரடைப்பு நோய் வரை பல்வேறு நோய்களுக்கு பின்னால் கடுங்கோபம், மற்றவர்களுக்குக் கண்டனம் தெரிவித்தல், பகைமை உணர்ச்சி ஆகியவை உள்ளன என்று உள உடல் மருத்துவ துறையில் தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வருகிறது. இந்த எதிர்மறை உணர்ச்சி களால் விளையும் மனஇறுக்கம் நம் உடலின் நோய் எதிர்ப்புச் சக்தியை நேரடியாக பாதித்து நம்மை கிருமிகளும், தொற்று நோய்களும் பற்றி கொள்ள வழி வகுக்கிறது.
அன்பின் வெளிப்பாடு மன்னிப்பு
மன்னிப்பு என்பது கலையின் இன்றியமையாத அம்சம். நாம் அடுத்தவரை மன்னித்துவிட்டால் நமக்கு வரும் தடைகளை பாதிக்கு மேல் கடந்து விட்டோம் என்பது உறுதி. அன்பு என்பது பிறருக்கு ஆரோக்கியமும், மகிழ்ச்சியும்,, சமாதானமும், பேரானந்தமும், வாழ்வின் அனைத்து ஆசீர்வாதங்களும் கிடைக்க மனதார வாழ்த்துவது. நாம் அடுத்தவரை மன்னிப்பது நம்முடைய தயாள குணத்தால் அல்ல மாறாக நாம் சுயநலவாதியாக இருப்பதால் தான். ஏனெனில் அடுத்தவருக்கு, நாம் எதை விரும்புகிறோமோ அதை உண்மையிலேயே நமக்காகவே விரும்புகிறோம்.
நம்மிடம் குறைகள் இருந்து அவற்றை குறித்து அடுத்தவர் நம்மை விமர்சித்தால் மகிழ்ச்சியுடன் அவருக்கு நன்றி கூறி அவர்களது விமர்சனங்களை பாராட்ட வேண்டும். அவ்வாறு செய்வதால் நம்முடைய குறைகளை சரி செய்து கொள்ள பெரிதும் வாய்ப்பளிக்கும்.
நல்லது என்றும், தீயது என்றும் எதுவும் இல்லை. ஆனால் அப்படி சிந்திப்பதுதான், ஒன்றை நல்லதாகவோ, அல்லது தீயதாகவோ ஆக்கும். உணவு, உடலுறவு, செல்வம், உண்மையான வெளிப்பாடு ஆகியவற்றை விரும்புவதில் கேடு ஏதும் இல்லை. அது நாம் இந்த விருப்பங்களை அல்லது பேரார்வங்களை எப்படி உபயோகிக்கிறோமோ அதை பொறுத்தே அமைகிறது.
அனைவரையும் புரிந்து கொள்வதே மன்னிப்பதுதான் நம் சொந்த மனத்தின் படைப்பு விதியை புரிந்து விட்டோ மானால் நம் வாழ்க்கை உருவானதற்கோ, அல்லது உரு குலைந்ததற்கோ நாம் மற்றவர்களையும், சூழ்நிலை களையும், குறை சொல்வதை நிறுத்திவிடுவோம். நம் சொந்த எண்ணங்களும், உணர்வுகளும்தான் நம் விதியை நிர்ணயிக்கின்றன என்பதை உணர்ந்து கொள்வோம். மேலும் நம் வாழ்விற்கும், அனுபவங்களுக்கும் வெளிப் பொருட்கள் காரணிகள் அல்ல என்ற விழிப்புணர்வுடன் செயல்படுவோம்.
நம் மனதில் எந்த உறுத்தலும் இல்லாத வரை நாம் அன்பையும் சமாதானத்தையும், பேரானந்தத்தையும், ஞானத்தையும், வாழ்வின் அனைத்து ஆசீர்வாதங்களை யும் அனைவருக்கும் வழங்குவதுதான் உண்மையான மன்னிப்பின் அடையாளம் ஆகும்.