நம் நிழலில் நின்று கொண்டு நாம் இளைப்பாற முடியுமா?

இந்தப் பதிவு, பணத்தை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டு ஓடும் பலருக்கு ஒரு சிறந்த வழிகாட்டியாக இருக்கும்.
depending on others
depending on others
Published on

வாழ்க்கையில் சில மனிதர்கள், தங்களுக்கு எவ்வளவு வசதி வாய்ப்பு படைத்து இருந்தாலும், பொது வாழ்வில் மிகவும் அடக்கமாகவும், பணிவாகவும், எந்நேரமும் இன்சொல் பேசும் பழக்கம் உள்ளவர்களாக இருப்பார்கள். இதைத்தான் ஐயன் வள்ளுவரும் "பணிவுடையன் இன்சொலன் ஆதல் ஒருவற்கு
அணியல்ல மற்றுப் பிற"
என்று கூறியிருக்கிறார்.

நம்மிடம்தான் எல்லாம் இருக்கிறது, நாமே பலருக்கும் வேலை வாய்ப்புகளைத் தருகிறோம். நாமே எஜமானனாக இருக்கும் பொழுது, நாம் யாரையும் சார்ந்து வாழ வேண்டிய அவசியம் இல்லை என்று இருமாப்புடன் இருப்பவர்களும் உண்டு.

அதிகம் வசதி படைத்த மனிதர் ஒருவர், ஒருநாள் தனக்கு தெரிந்த குருவிடம் சென்று, "நான்தான் அனைத்து வசதியும் படைத்தவனாக இருக்கிறேனே; நான் மற்றவர்கள் சொல் பேச்சைக் கேட்க வேண்டிய அவசியம் எதுவும் இல்லைதானே?" என்று கேட்டார். அதற்கு குருவானவர், "சற்று வா, வெளியில் சென்று விட்டு வருவோம்," என்று சொல்லி, அந்த நபரோடு வெளியில் நடக்கத் தொடங்கினார்.

இதையும் படியுங்கள்:
மனிதன் மற்றவர்களை சாராமல் வாழ முடியுமா?
depending on others

இருவரும் கொஞ்ச தூரம் நடந்து சென்றதும் வெயில் அதிகம் கொளுத்தி எடுத்தது. அதற்கு கஷ்டப்பட்ட அந்த வசதி படைத்தவர், "குருவே வெயில் மிகவும் கடுமையாக உள்ளது. ஆதலால் நிழல் இருக்கும் இடம் தேடி போவோம் வாருங்கள்," என்று கூறினார்.

அதற்கு குருவானவர் உடனடியாக, "நாம் ஏன் நிழலைத் தேடிப் போக வேண்டும்? நம் நிழல் இருக்கிறதே, அதே நிழலில் நின்று கொண்டு இளைப்பாறலாமே! அதற்கு ஏன் மரத்தின் நிழலை நாட வேண்டும்?" என்று கேட்டார். வசதிபடைத்த அந்த மனிதருக்கு, குருவின் பதில், செவியில் அரைந்தது போல் ஆகிவிட்டது. அப்பொழுதுதான் அந்த வசதி படைத்தவருக்கு மண்டையில் உரைத்தது.

நம்மிடம் எவ்வளவு செல்வம் கொட்டிக் கிடந்தாலும் மற்றவர்களை சாராமல் வாழ முடியாது. நம் நிழல் நமக்கு உதவாதது போல் எவ்வளவுதான் பணம் இருந்தாலும் எல்லாவற்றையும் நாமாகவே செய்து கொள்ள முடியாது என்பதை உணர்ந்து கொண்டார் அந்த வசதி படைத்தவர்.

ஒவ்வொரு மனிதனும் வெவ்வேறு தொழில்கள் செய்தாலும், எல்லா மனித சக்தியும், எல்லாவிதமான மனிதனுக்காவும் பயன்படக் கூடியது என்பது நிதர்சன உண்மை.

உதாரணமாக உண்பதற்கு ஒருவன் உழவுத்தொழில் செய்பவர்களை நம்பித்தான் வாழ வேண்டும். உடுப்பதற்கு நெசவுத்தொழில் செய்பவர்களை நம்பித்தான் வாழவேண்டும். இருக்கும் இடம் அமைவதற்கு கட்டுமான தொழில் செய்பவர்களை நம்பித்தான் வாழ வேண்டும்.

அதனால் எவ்வளவுதான் ஒரு மனிதனிடம் வசதி வாய்ப்பு இருந்தாலும் அல்லது எஜமானனாக இருந்தாலும், நாம் இந்த நிலைக்கு வந்ததற்கு, மனித சக்தியே காரணம் என்பதை உணர்ந்து, எல்லோரிடமும் இன்சொல் பேசி, அன்பாக, அடக்கமாக நடந்துக்கொள்ள வேண்டும் என்று புரிந்து கொண்டால், நம்மிடம் இருக்கும் பணத்திற்கு மதிப்பும், மரியாதையும் என்று மனதில் தோன்றும்.

இதையும் படியுங்கள்:
தன்னையே காணிக்கையாகத் தருவதுதான் அன்பு!
depending on others

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com