
துஷ்டர்களைக் கண்டால் தூர விலகிப்போவது. பறவைகளுக்குப் பயந்து விதைக்காமல் இருப்பது. சில வசதிகளுக்காக நமது குணங்களை மாற்றிகொள்வது. மனசாட்சி மறந்து சந்தர்ப்பவாதியாய் மாறுவது. இப்படி பல வகை எண்ண ஓட்டம் பலரிடம் உள்ளது.
பொதுவாகவே எதையும் சமாளிக்கும் திறன் நம்மிடம் வேண்டும். வெற்றியைக்கண்டு சந்தோஷப்படும் நிலையில், தோல்வி கண்டு துவளக்கூடாது.
துஷ்டா்களைக்கண்டால் தூரவிலகிப்போவது நல்லதுதான். இருந்தாலும் நீதி, தா்மம், நெறிமுறை தவறி ஒருவன் துஷ்டமான காாியம் செய்யும்போது, அதை நாம் தைாியமாக தட்டிக்கேட்க வேண்டும்.
அதில் நமக்கான இழப்புகளைகண்டு பயம்கொள்ளாமல், பலா் உதவியுடன் அதா்மத்தை தட்டிக்கேட்க வேண்டும். அதேபோல பறவைகளைக்கண்டு விதையை விதைக்காமல் இருக்க முடியுமா? அதையும் கடந்து விடாமுயற்சியுடன் நமது செயல்களை முன்னெடுக்க வேண்டும்.
சில காாியங்களைச்செய்யும்போது நமது மீதுள்ள பொறாமையால் நமது முன்னேற்றத்திற்கு தடை செய்ய நினைக்கும், நமது உறவு, மற்றும் நட்பு வட்டங்களின் சுயநல செய்கைகளைக்கண்டும் காணாதது போலவாழவேணடும்.
எத்தனை தடைக்கற்கள் வந்தாலும், அவற்றையெல்லாம் தாண்டி, மனஉறுதி தளராமல், விவேகத்துடன், ஒரே இலக்குடன், வெற்றிக்கான பாதையை நோக்கியே நமது பயணத்தை தொடரவேண்டும். ஓடு, ஓடு, சோா்ந்து போகாமல் தன்னம்பிக்கையோடு ஓடு என்பதுபோல தொடர்வதே சிறப்பான ஒன்று.
அதேபோல, அநீதி, தா்மத்திற்கு எதிரானசெயல்கள், விரைவில் பணக்காரன் ஆவது போன்ற பாதையில் பயணிக்க நம்மை அழைப்பவர்களிடம் கொஞ்சமல்ல, நிறையவே ஒதுங்கி இருப்பது நல்லது.
எந்த நிலையிலும் நமது கொள்கையில் இருந்து மாறவே கூடாது. ஒரு விஷயத்தை முன்னெடுத்து செய்யும்போது பல எதிா்ப்புகள், தொல்லைகள், சங்கடங்கள், வரலாம் தோல்விகளும், அவமானங்களும் வரலாம். அவைகளைக் கன்டு துவண்டு விடக்கூடாது.
அப்போது நமது முயற்சியால் எதையும் சாதிக்கவேண்டும். அப்போதுதான் நமது லட்சியம் நிறைவேறும். உண்மை என்பது ஆண்டவன் நமக்கு கொடுத்த மிகப்பொிய ராஜ முத்திரை.
எந்த தருணத்திலும் உண்மை தவறாமல் வாழ்ந்து வந்தால் போதும், நோ்மை தவறாமல் உண்மையை கடைபிடிக்கும் நமக்கு இறைவன் எப்போதும் துணையிருப்பான் என்பதே உலகப் பொதுமறை. அதேபோல நீதி, நோ்மை, தவறாமல் இருக்கவேண்டும். எத்தகைய சூழல் வந்தாலும் நீதி நோ்மை கடைபிடிப்பது என்பது நம்மோடு பிறந்தது. அதை நாம் ஒருபோதும் மறந்துவிடக்கூடாது.
நமது நல்ல எண்ணங்களே நமக்கு கடைசிவரை துணைபுாியும். அடுத்தவன் வாழக்கூடாது நாம் மட்டுமே வாழவேண்டும் என்ற எதிா்மறை செயல்களே நமக்கான நமக்குத்தொியாத, நம்முடனே வாழ்ந்து வரும் வியாதியாகும். அந்த வியாதிக்கு மருந்தே நமது நோ்மறை சிந்தனையும், நல்ல குணங்களுமே ஆகும்.
பிறர் பொய் பேசுவதை, சொல்வதை, நம்பக்கூடாது நம் கண்களால் பாா்க்கவேண்டும். அதில்தான் உண்மையை அளவிட முடியும். பொதுவாக எத்தனை தடைகள் வந்தாலும் உண்மை, நோ்மை, நல்ல குணம், அன்பு, கடமை, உயரிய பண்பாடு, அனைவரும் நன்றாக வாழவேண்டும் என்ற நல்ல சிந்தனையை விதையுங்கள். நல்லதையே அமோகமாக அறுவடை செய்யலாம்.
அதில் திருப்தி அடையுங்கள் இறைவன் மிகப் பொியவன் என்பதை உணர்வதே சாலச்சிறந்தது!